face-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai ஒரே வாரத்தில் முகம் பளபளக்க என்ன செய்ய வேண்டும்

ஒரே வாரத்தில் முகம் பளபளக்க என்ன செய்ய வேண்டும்

ஒரே வாரத்தில் முகம் பளபளக்க என்ன செய்ய வேண்டும் ஏதாவது சுபநிகழ்ச்சிக்கு போக வேண்டுமென்றால் தான் முகம் பொலிவிழந்து இருப்பதை கவனிப்போம். முகம் பொலிவாக இல்லை என்பதை உணர்வோம் அப்படிப்பட்ட நேரத்தில் குறுகிய கால கட்டத்தில் முகம் பொலிவு பெற பலர் எதையாவது பின்பற்றி அதில் திருப்தி இல்லாமல் போவதும் உண்டு. பின்வரும் முறையை பின்பற்றினால் கண்டிப்பாக ஒரே வாரத்தில் பொலிவான முகத்தை பெறுவீர்கள். முல்தானி மெட்டி, இவை கடைகளில் எளிதாக கிடைக்கும். முல்தானி மெட்டியை நீங்கள் வெளியில் செல்லும் முன்பு ஒரு அரை மணி நேரம் முகத்தில் போட்டால் மட்டும் போதும் பளிச்சென்று முகம் ஆகிவிடும். வீட்டில் உள்ள சில பொருட்களை இதில் சேர்த்து முகத்தில் தடவுவதன் மூலம் முக பொலிவை அதிகரிக்க செய்யலாம். இந்த கலவையை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1.முல்தானி மெட்டி 2.தக்காளி 3.எலும்பிச்சை 4.காய்ச்சாத பால் செய்முறை : ஒரு கப்பில் முல்தானிமெட்டி இரண்டு தேக்கரண்டி, அதில் அரை தக்காளி சாறு அல்லது தக்காளியை நன்கு மைய அரைத்து முல்தானி மட்டியுடன் சேர்த்துக் கொள்ளவும். பின்பு அதில் எலுமிச்சைச்சாறு ஒரு தேக்கரண்டி இதில் போட்டுக் கொள்ளவும். பிறகு தண்ணீர், அல்லது தயிர் அல்லது, காய்ச்சாத பால் இவற்றில் ஏதேனும் ஒன்றை முல்தானி மெட்டியுடன் இட்லி மாவு பதத்திற்கு கலவையை தயாரித்துக் கொள்ளவும். இவற்றை கண் தவிர முகத்தின் மற்ற இடங்களில் தடவவும் மற்றும் கழுத்து பகுதியில் தடவி கொள்ளவும். விசிறியை போடாமல் இயற்கை காற்றில் முகத்தை காயவிடவும். நன்கு காய்ந்ததும் முகத்தில் லேசாக தண்ணீரில் நனைத்து மீண்டும் காயவைக்கவும். பிறகு மிதமான சூடு உள்ள தண்ணீரில் முகத்தை கழுவி விடவும். முல்தானி மெட்டி போட்ட பிறகு சோப்புப் போட்டு முகத்தைத் கழுவ நினைப்பவர்கள் முல்தானி மெட்டி கழுவி 10 நிமிடத்திற்கு பிறகு சோப்பு போட்டு கழுவி விடவும். இந்த முல்தானி மெட்டியை வாரத்தில் மூன்று முறை அல்லது நான்கு முறை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று முகம் பொலிவுடனும் காணப்படும்.




Tag : face-care |

உருளைக்கிழங்கு சாப்பிடுவதற்காக மட்டுமே நாம் பயன்படுத்தி இருப்போம். இவற்றின் மருத்துவ குணம் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் திட்டுக்கள் மங்குதல் அழுக்கு முகத்தில் உள்ள சுருக்கங்கள் ஆகியவற்றை நீக்கி முகத்தை வசீகரமாகவும் சக்தி உருளைக்கிழங்கு உண்டு.உருளைக்கிழங்கு முகத்திற்கு பயன்படுத்தும் முறையை காண்போம். உருளைக்கிழங்கை துருவி அதன் சாற்றை பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கின் சாற்றினை நேரடியாக முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும் . தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும் பிறகு குளிக்கவும். குளிப்பதற்கு முன்னர் இவற்றை முகத்தில் தடவி பிறகு குளிக்கவும். அல்லது, உருளைக்கிழங்கு சாற்றுடன் எலுமிச்சை பழச்சாறு ஒரு தேக்கரண்டி தேன் மூன்றையும் ஒன்றாக கலக்கி முகத்தில் 20 நிமிடம் ஊறவைக்கவும் வாரத்தில் இரண்டு முறை செய்யலாம். இப்படி செய்து வருவதால் முகம் விரைவில் பொலிவு பெரும். குறிப்பு: பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு உடலில் பல ஹார்மோன் மாற்றங்களால் முகத்தில் கரும்புள்ளி கருந்திட்டுக்கள் மங்கள் முகப்பொலிவு இன்றி பெண்கள் அவஸ்தைப்படுவார்கள் உருளைக்கிழங்கு சாற்றினை இப்படி பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் கருந்திட்டுக்கள் பங்குகள் நீங்கி முகம் பொலிவுடன் காணப்படும்.
Laddu Muttai | 18-09-2021

Tag : face-care |

நம் முன்னோர்கள் முகத்தை பளபளப்பாக வைப்பதற்கு அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்கள் மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உபயோகித்தனர். அப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம். <h2 class="sub_heading backlink">கடலை மாவு வைத்தியம்:</h2> <p class="patthi">தேவையான பொருட்கள்: 1. பால் பவுடர் 2. கடலைமாவு 3. சிறிதளவு பன்னீர் 3. சந்தனம் பவுடர் செய்தது 4. சிறிது மஞ்சள் 5. புதினா சாறு இவை அனைத்தையும் சம அளவில் எடுத்துக்கொண்டு புதினா சாறு மற்றும் பன்னீரை போட்டு நன்றாக குறைத்துக்கொள்ள வேண்டும். நன்கு பசை பதம் வரும் வரை கலக்கிக் கொள்ள வேண்டும். இதனை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 முதல் 15 நிமிடம் வரை முகத்தில் நன்கு உலர விட வேண்டும். பிறகு மிதமான குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பார்ப்பதற்கு மிருதுவாகவும் பளபளவெனவும் இருக்கும்.</p> <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> <h2 class="sub_heading backlink">ரோஜா பவுடர் வைத்தியம்:</h2> <p class="patthi">தேவையான பொருட்கள்: 1. கஸ்தூரி மஞ்சள் 2. ரோஜா இதழ்கள் 3. செம்பருத்திப்பூ 4. மரிக்கொழுந்து 5. ஆரஞ்சு தோல் 6. வெட்டிவேர் 7. எலுமிச்சை பழத்தோல் 8. பச்சைப்பயிறு இந்தப் பொருட்கள் அனைத்தையும் சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்துப் பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து உலர்த்தி கொள்ளவும். பின்பு அதனை நன்றாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும். இதனை தேவைப்படும் நேரத்தில் வேண்டும் என்ற அளவிற்கு எடுத்துக்கொண்டு அதில் தயிர், ரோஸ் வாட்டர், அல்லது எலுமிச்சை பழச்சாறு இதில் ஏதாவது ஒன்றோடு நன்றாக கலந்து பசை போன்று குறைத்துக்கொள்ளவும். அதனை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக பூசிக்கொண்டு 10 முதல் 15 நிமிடத்திற்கு உலரவிடவும். அதற்குமேல் விட வேண்டாம். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகப்பொலிவு முன்பை விட அதிகமாக இருக்கும்.</p> <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 25-04-2021
முகம்-பொலிவு-பெற-tips

Tag : face-care |

இப்போ இருக்கிற சுற்றுசூழல் நம்ம முகத்தில் நிறைய முகப்பரு எண்ணெய் வடிதல் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கு. அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு தினமும் சோப்பு போட்டாலோ, க்ரீம் தடவினாலோஅது சரியாகாது. அதுக்கு நம்ம வீட்டுல இருந்து ஒரு சரியான ஒரு பேஸ்ட் தயாரித்து அதை நாம் வாரத்தில் ஒரு நாளோ அல்லது வாரத்தில் மூணு நாளோ முகத்தில் தடவி வரும் போது முகப்பொலிவு பெற்று , முகம் பளிச்சின்னு ஆகிடும் . முகப்பரு, கரும் புள்ளி, எண்ணெய் வடிதல், இதெல்லாம் குறைந்துகிட்டு வரத கண்கூடா பாப்பிங்க. முல்தானிமெட்டிபொடி: முல்தானி மெட்டி இது நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்க ஆனால் பயன்படுத்தி இருக்க மாட்டீங்க. இந்த முல்தானி மெட்டி நீங்க பயன்படுத்தி பாருங்க ரொம்ப முகம் அழகாக ஆகிறத நீங்கள் கண்கூடாக பார்ப்பீங்க.முல்தானிமெட்டி கட்டியாக இல்லைன பொடியாக டிபார்ட்மென்ட் ஸ்டார்களில் கிடைக்கும். முல்தானி மெட்டி எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஒரு பவுலில் இரண்டு டீஸ்பூன் முல்தானி மெட்டி எடுத்துக்கோங்க அதுல கொஞ்சமா ரோஸ் வாட்டர்(பன்னிர் ) ஒரு தேக்கரண்டி ஊத்தி கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊத்தீகோங்க நல்லா திக்காவும் இல்லாம ரொம்ப தண்ணியாக இல்லாமல் கலந்துகொள்ளுங்க. முகத்தில ஒரு இடம் விடாம நல்லா தடவுங்க ,கண்ணுக்கு தடவ வேண்டாம். விசிறியில் காய வைக்க கூடாது. சாதாரணமாக வீசிட்டு இருக்க இயற்கை காத்துல தான் நீங்க முகத்தை காய வைக்கணும். காய்ந்த உடன் அதன் மேல் கொஞ்சமாக ரோஸ் வாட்டர்(பன்னிர் ) எடுத்து முகத்தின் மேல தடவ வேண்டும் அதுக்கு அப்புறம் மறுபடியும் முல்தானி மெட்டி காய்ந்த உடனே சிறிது நேரம் கழித்து மீதி இருக்கிற முல்தானிமெட்டி மறுபடியும் காய்ந்த முல்தானி மெட்டி மேல் போடுங்க' இதே மாதிரி 3 முறை நீங்க தடவுங்கள். . சாதாரணமான குளிர்ந்த நீரில் சோப்பு எதுவும் போடாமல் கழுவுங்கள் . அப்பறம் பாருங்க உங்களுடைய முகம் எவ்வளவு எண்ணெய் பிசுபிசுசலாம் இல்லாம சருமம் ரொம்ப மெது மெதுன்னு ரொம்ப அழகா இருக்கிறத நீங்களே கண்கூடாக பார்ப்பீர்ங்க.வாரத்தில் 2 முறை அல்லது 3 முறை இந்த மாதிரி பண்ணுங்க, கரும்புள்ளி முகப்பரு இது எல்லாம் சீக்ரம் போகும்.முகம் ரொம்ப பளிச்சின்னு ஆகிட்டே இருக்கும் வெயில் காலத்துல பாத்தீங்கன்னா எண்ணெய் வடிதல் இல்லாம முகம் பொழிவு பெற்று ரொம்ப நல்லா இருக்கும்.
Laddu Muttai | 27-01-2021