Baby-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai ஆறு மாத கைகுழந்தைக்கு கேரட் எப்படி சாப்பிட கொடுக்க வேண்டும்

ஆறு மாத கைகுழந்தைக்கு கேரட் எப்படி சாப்பிட கொடுக்க வேண்டும்

ஒரு வயது வரை தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான சத்துகளை கொடுக்கக் கூடும். ஆறு மாதத்திற்கு பிறகு வெறும் பால் மட்டுமே குழந்தையின் வயிற்றுக்குக் பத்தாது தாய்ப்பால் குழந்தைக்கு பசி பற்றாக்குறையை ஏற்படுத்தி விடும். இதனால் ஆறு மாத காலத்திற்கு பிறகு உணவுகளை திரவ மற்றும் திட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கலாம். இதன் மூலம் குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் குழந்தைக்கு சென்றடையும். கேரட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கு கண் பார்வை திறனை அதிகப்படுத்தும் இதிலுள்ள சத்துக்கள் குழந்தையின் உடலின் நிறத்தை மாற்றும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வைட்டமின் நார்ச்சத்து குழந்தைக்கு தேவையான உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். 6 மாத குழந்தைக்கு கேரட் எவ்வாறு கொடுக்க வேண்டும்... குழந்தைக்கு கேரட்டை பச்சையாக கொடுக்கக் கூடாது இது வயிற்றுவலி வயிற்றுக்கோளாறு செரிமானம் பிரச்சனையை ஏற்படுத்தும். உங்கள் சுண்டு விரல் அளவு உள்ள கேரட் 2 அல்லது மூன்று எடுத்து கொள்ளவும் அல்லது கொஞ்சம் பெரியதாக இருந்தால் ஒரு கேரட் மட்டுமே எடுத்துக் கொள்ளவும். குழந்தைக்கு அளவாக மட்டுமே கேரட்டை கொடுக்க வேண்டும் எடுத்தவுடனே அதிக அளவில் கொடுக்கக்கூடாது குழந்தைக்கு தொடர்ந்து 3 நாட்கள் கொடுக்க வேண்டும் சேரவில்லை என்றால் ஒவ்வாமை உடல் உபாதைகள் ஏற்படும். எந்த உணவை கொடுக்கும் போதும் தொடர்ந்து மூன்று நாட்கள் அந்த உணவை கொடுக்க வேண்டும் குழந்தைக்கு அப்பொழுதுதான் உடலுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தகுந்த மாதிரி உணவு பழக்கங்களை மாற்ற முடியும். குழந்தைக்கு கேரட்டை தோல் நீக்கி மண் போகும் வரை கழுவி இட்லி பாத்திரத்தில் சிறிது துண்டுகளாக வெட்டி நன்கு வேக வைத்து மசித்து அல்லது மிக்ஸியில் மசித்து கொடுக்கலாம் மிக்ஸியில் அடித்து கொடுப்பதைவிட கையில் நன்கு மசித்துக் கொடுப்பதன் மூலம் அதில் உள்ள முழுமையான சத்து குழந்தைக்கு சென்றடையும். இட்லி பாத்திரத்தில் வேக வைக்க முடியாதவர்கள் கேரட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு நீரை நிரப்பி நீர் சுண்டும் வரை நன்கு வேகவைத்து நீரை கீழே ஊற்றிவிட கூடாது அந்த நீரை கீழே ஊற்றாமல் குழந்தைக்கு சூப்பாக கொடுக்கலாம் கேரட்டை நன்கு மசித்து சிறிதளவு மட்டுமே உப்பு சேர்க்கவும் சர்க்கரை சேர்க்க வேண்டாம் இது குழந்தை தாய் பால் குடிக்க அடம்பிடிக்க ஆரம்பித்து விடும் அதனால் உப்பை மட்டும் சிறிதளவாக சேர்க்கவும் சர்க்கரை சேர்க்க வேண்டாம். மதியம் அல்லது காலையில் மட்டுமே கொடுக்க வேண்டும் மாலையில் கொடுப்பதை தவிர்த்து விடவும். பசும்பால் ஒன்பதாவது மாதத்திற்கு மேல் கொஞ்சமாக கேரட்டில் சேர்த்து சிறிதளவு கரும்பு சர்க்கரையை சேர்த்துக் கொடுக்கலாம் எடுத்தவுடனே பால் சேர்க்க வேண்டாம் 8 மாதம் அல்லது ஒன்பது மாத காலத்திற்குப் பிறகு பால் சேர்த்து கேரட்டுடன் கொடுக்கலாம். பசும் பால் பொங்கிய உடன் மூன்று அல்லது ஐந்து நிமிடத்திற்கும் மேலாக கொதிக்க விட்ட பிறகு கேரட் மசித்து அதில் பால் ஊற்றி சிறிதளவு கரும்பு சர்க்கரையை சேர்த்து குடிப்பதன் மூலம் குழந்தைக்கு வயிற்றுவலி செரிமான பிரச்சனை ஏதும் ஏற்படாது பால் நன்கு காய்ந்த பிறகு மட்டுமே இதில் ஊற்ற வேண்டும். கேரட் ஜூஸ் குழந்தைக்கு கொடுக்க நன்கு வேக வைத்து மசித்து அதை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி சாற்றைப் பிழிந்து குழந்தைக்கு கொடுக்கலாம் ஆனால் இவற்றிலுள்ள முழுமையான சத்து குழந்தைக்கு சென்றடையாது கேரட் ஜூஸ் கொடுக்க நினைப்பவர்கள் ஒரு வயதிற்கு மேல் அல்லது ஒன்றரை வருடத்திற்கு மேல் குழந்தைக்கு கேரட் ஜூஸை கொடுக்கலாம். அதையும் நன்கு வேக வைத்து பால் கலந்து ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்கும் அளவிற்கு கொடுக்கலாம் பச்சையாக கொடுப்பதை தவிர்க்கவும் இது குழந்தைக்கு ஜலதோஷத்தை ஏற்படுத்தும் மலம் பிரச்சனையை உண்டாக்கும். இரண்டு வயதிற்கு மேல் கேரட்டை பச்சையாக கொடுக்க ஆரம்பிக்கலாம் அதுவும் நன்கு அரைத்து பால் சேர்த்து ஜூஸாக கொடுக்க ஆரம்பிக்கலாம்.




Tag : Baby-care |

ஒரு சில குழந்தைகளுக்கு ராகி கொடுப்பதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படும் அதனை கொடுக்கும் முறை தெரியாமல் கொடுப்பதன் மூலம் இவ்வாறு வயிற்றுப்போக்கு ஏற்படும் ராகி உடலுக்கு வலிமை மற்றும் உடல் எடையைக் கூட்டுவதற்கும் மிகவும் உதவுகிறது இது குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். ஆறாவது மாதம் தொடக்கத்தில் ராகி கொடுக்க ஆரம்பிக்கலாம் காலை மற்றும் மதிய வேளைகளில் மட்டுமே கொடுக்க வேண்டும் இரவு நேரங்களில் மாலை வேளைகளில் கொடுக்கக் கூடாது. ராகி எவ்வாறு கொடுப்பது. ராகியை கொடுக்க நினைப்பவர்கள் 100 கிராம் அளவிற்கு இரவில் தண்ணீரில் கழுவி ஊறவைத்து விடவும் ஒரு அரை பாதாம் பருப்பு அதில் ஊற வைத்து விடவும். காலையில் பாதாம் பருப்பின் மேல் உள்ள தோலை உரித்துவிட்டு ராகியும் பாதாமும் ஒன்றாக அரைத்துக்கொள்ளவும் பிறகு ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் அரைத்த ராகியை பிழிந்து அதன் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு துணியிலுள்ள ராகியை மீண்டும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து வெள்ளைத் துணியில் மீண்டும் அதன் பால் வடி கட்டவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இவ்வாறு மூன்று முறை பால் வரும் வரை அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இவ்வாறு வடிகட்டின ராகி பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் சிறிதளவு மட்டுமே உப்பை சேர்க்கவேண்டும் பெரியவர்கள் சாப்பிடும் அளவிற்கு உப்பு சேர்க்கக்கூடாது. பிறகு அடுப்பில் வைத்து ராகி பாலைக் கிளறிக்கொண்டே இருக்கவும் அடர்த்தியாக மாறும் பொழுது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும் அடிபிடித்தால், சிறிதளவு சுடுதண்ணீரை ஊற்றி கிளறிவிட்டு அல்வா பதத்திற்கு பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும் அச்சமயத்தில் இறக்கி விடவும் மிக வாசனையுடனும் வந்ததும் காணப்படும். குழந்தைக்கு ஏற்ற சூடு ஆறினால் உடனே குழந்தைக்கு கொடுக்கலாம் இது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வயிற்றுவலி செரிமான பிரச்சனையை இவ்வாறு கொடுப்பதன் மூலம் ஏற்படாது குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமான உணவாகும் இதனை கட்டாயமாக ஆறு மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-10-2021

Tag : Baby-care |

பிறந்த குழந்தைக்கு 1 முதல் 6 மாதம் வரை எப்பொழுதும் தாய்ப்பால் மிகவும் அவசியம் தாய்ப்பால் ஆறு மாதத்துக்குப் பிறகு குழந்தையின் வயிற்றுக்குக் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிறிது சிறிதாக குழந்தைக்கு திட மற்றும் திரவ உணவுகளை சேர்க்க வேண்டும் எடுத்தவுடனே அதிக திட உணவுகளை கொடுக்கக்கூடாது குழந்தைக்கு செரிமான குறைவின் காரணமாக பல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும் சிறிது சிறிதாக கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆப்பிள் குழந்தையின் ஏழாவது மாதம் முடியும் தொடக்கத்தில் குழந்தைக்கு ஆப்பிள் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆப்பிளை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. எவ்வாறு கொடுப்பது என்பதை காணலாம். குழந்தையின் வயிறு மிகச் சிறியதாகவே இருக்கும் குழந்தையின் வயிற்றுக்கு ஏற்றவாறு ஆப்பிளின் அளவு சிறியதாக இருந்தால் ஒரு ஆப்பிளும் பெரியதாக இருந்தால் பாதி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை சீவி விட்டு உள்ளே உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு இரண்டு துண்டுகளாக வெட்டி கொள்ளவும் . ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நேரடியாக அதில் போட்டு தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும் தண்ணீரை வடிகட்ட கூடாது தண்ணீரை வீணாக்க கூடாது ஆப்பிள் வெந்திருந்தால் தண்ணீரை எடுத்து ஆப்பிள் அரைக்கும்போது அதில் சேர்த்து விடவும். இட்லி பாத்திரம் இருந்தால் ஆப்பிளை இரண்டாக வெட்டி தோல் நீக்காமல் கொட்டைகளை மட்டும் நீக்கி இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வேக வைக்கவும். பின்பு அதில் நன்றாக வெந்ததும் தோலை நீக்கி அதன் சதைப் பகுதிகளை எடுத்து குழந்தைக்கு அழைத்து மசித்துக் கொடுக்கலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஆப்பிள் நன்கு வெந்தவுடன் மிக்ஸியில் அரைத்து கொடுக்கலாம் அல்லது கையில் மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம் குழந்தை முதலில் சாப்பிடுவதற்கு அடம்பிடிக்கும் பின்பு ருசி தெரிய ஆரம்பித்ததும் சாப்பிடப் பழகிவிடும்.ஆப்பிளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. பத்தாவது மாதம் ஆரம்பிக்கும் போது குழந்தைக்கு சிறியதாக பசும் பாலை நன்கு கொதிக்க வைத்து அந்த பாலை ஆப்பிளுடன் சேர்த்து அரைத்து கொடுக்கலாம் ஆப்பிளை வேக வைத்து மட்டுமே கொடுக்க வேண்டும். பசும்பால் ஒரு சிலர் ஆறு மாதத்தில் இருந்து தொடங்கி விடுவார்கள் அல்லது ஒரு மாதத்தில் இருந்து தொடங்கி விடுவார்கள் ஒரு மாட்டு பால் என்றால் அவ்வாறு கொடுப்பவர்கள் ஏழாவது எட்டாவது மாதத்தில் இருந்தே பசும்பாலை கொஞ்சமாக கலந்து கொடுக்க ஆரம்பிக்கலாம் ஆப்பிளில். பசும் பால் கொழுப்பு நிறைந்து காணப்படும் இதனால் குழந்தையின் வயிற்றுக்குக் செரிமான பிரச்சனையை உண்டாக்கிவிடும் ஒரு வயதுக்கு மேல் கொடுப்பது குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆப்பிள் இவ்வாறு வேகவைத்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சினை எதுவும் இல்லாமல் இருக்கும். ஆப்பிள் சாப்பிடுவது மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து சென்றடையும். இரவு மற்றும் மாலையில் முக்கியமாக ஆப்பிளை கொடுப்பதை தவிர்க்கவும். காலை மற்றும் மதியம் இந்த இரு வேளைகளில் ஏதாவது ஒன்றில் ஆப்பிளை கொடுக்கலாம் முதலில் எந்த ஒரு உணவுப் பொருளையும் குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கும் முன் மூன்று நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும். உணவு குழந்தைக்கு சேரவில்லையெனில் நிறுத்தி விடவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-10-2021

Tag : Baby-care |

<h2 class="sub_heading backlink">எதனால் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது?</h2> <p class="patthi">புதிதாக குழந்தை பெற்ற குடும்பத்தில் இருப்பவர்களின் பிரதான பிரச்சனை , குழந்தையின் அழுகை. ஏன் அழுகிறது ? என்னவாக இருக்கும் எப்படி அழுகையை நிறுத்துவதென்று பலருக்கு தெரிவதில்லை. குறிப்பாக இரவு நேரத்தில் குழந்தை அழ தொடங்கினால் பெற்றோர்களுக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை . அப்படி எதனால் அழுகிறது என்ற காரணம் தெரியாத அழுகைகளுக்கான காரணம் பற்றிய விவரம் தெரிந்து அதற்குன்டான வழியை பின்பற்றி குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். 1. குழந்தைகள் பாலுக்கு மட்டும் அழுவதில்லை, ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகள் பால் குடிக்காமல் அழுதாள் தண்ணீர் தாகம் ஏற்பட்டு இருக்கும். அப்பொழுது தண்ணீரை கொடுங்கள் பிறகு குழந்தை அழுகையை நிறுத்தி விடும். 2. ஒரு வேலை இரவு நேரங்களில் விடாமல் அழுகிறது என்றால், சிறுநீர் கழித்து வயிறு முதுகு நனைந்து அவர்கள் கசகச என்று உணர்வார்கள். நீங்கள் உடனே அவர்கள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி , உலர்ந்த ஆடைகளை அணிவித்து விட்டால் சிறிது நேரத்தில் அழுகையை நிறுத்திவிடும்.ஒருவேளை டைப்பர் போடுபவர்கள் என்றால் அடிக்கடி டைப்பரை சோதித்துப் பார்த்து மாற்றவும். டைபர் அதிக எடை ஆனதும் அசௌகரியமாக உணர்வார்கள். சில குழந்தைகளுக்கு டயப்பர் அணிவதால் காற்றோட்டம் இன்றி குழந்தைகள் அவதிப்படுவார்கள் அதனை உடனே கழற்றி விடவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 3. வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு இறுக்கமான ஆடைகளை அணிவதாலும் அழுவார்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். வெயில் காலத்தில் அதிக தண்ணீரை குழந்தைக்கு கொடுக்கவும்.சூடு பிடித்து சிறுநீர் கழிக்க அழுவார்கள் அதனால் அதிக தண்ணீர் கொடுக்கவும். 4. உடல் சூட்டினால் ஏற்படும் உபாதைகளை குழந்தைகளால் விவரிக்க முடியாது ,வயிற்று வலியினால் அல்லது வெயில் காலத்தில் உடல் சூட்டினால் சூடு தாங்க முடியாமல் அழுகிறார்கள் என்றால் தலையின் உச்சியிலும், தொப்புலிலும், பிறப்புறுப்பில்(கொஞ்சமாக) விளக்கெண்ணையை வைக்கவும். சிறுது நேரத்தில் உடல் சூடு தணிந்து அழுகையை நிறுத்திவிடுவார்கள். 5. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் சில நேரங்களில் வேறு உணவுகளை ஊட்டும் பொழுது அழுகிறார்கள் என்றால், அவர்கள் தாய்ப்பால் குடிக்க ஏங்குகிறார்கள் என்று அர்த்தம் அந்த நேரத்தில் தாய்மார்கள் தங்களது மார்பில் குழந்தைக்கு பாலை குடிக்க விடுவதால் குழந்தைகள் அழுகையை நிறுத்தும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 6. திடீரென்று வீறிட்டு அழுதால் பூச்சி கடித்து இருக்கிறதா என்பதை உடனே பார்க்கவும் அல்லது உடலில் ஏதேனும் சிறு காயங்கள் உள்ளதா என பார்த்து மருந்து போடவும். 7. குழந்தைகள் என்ன செய்தும் இடைவிடாமல் அழுதால் காற்றோட்டமுள்ள இடத்திற்கு தூக்கி சென்று வேடிக்கை காட்டுங்கள்.சில குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுவார்கள் அச்சமயத்தில் காற்றோட்டம் உள்ள பகுதியில் வெட்ட வெளிச்சத்தில் வேடிக்கை காட்டுங்கள். குழந்தையை அதிக காற்று வீசும் விசிறியின் அடியில் படுக்க வைக்க கூடாது அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். 8. குழந்தை தூக்கம் வந்தும் தூங்க அவதிப்படுகிறார்களா அப்பொழுது மடியிலும் தூங்காமல் தோலிலும் தூங்காமல் வழக்கத்திற்கு மாறாக அழுகிறார்கள் என்றால் குழந்தை தூங்கும் தொட்டில் போட்டு தூங்க வைக்கவும். இதையெல்லாம் தாண்டி குழந்தை விடாமல் அழுதுகொண்டிருந்தாள் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.</p> <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 31-03-2021

Tag : Baby-care |

பிறந்த குழந்தை ஏன் விடாமல் அழுகிறது? குழந்தை தாயின் பாதுகாப்பில், அதாவது பனிக்குட நீரில் எப்பொழுதும் கதகதப்பாக கருப்பையினுள் இருக்கும். குழந்தை எப்பொழுதும் தன் தாயின் இதயத்துடிப்பை கேட்டுக்கொண்டு இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாயின் இதயத்துடிப்பு கேட்காமல் இருக்கும் அதேசமயம் பணிக்கொட நீரில் இருந்த கதகதப்பு வெளியில் வந்தவுடன் குழந்தையின் உடல் மாற்றத்தை உணரும் அதனால் குழந்தை பயத்துடனும் அருகில் தாய் இல்லாததை உணர்ந்து குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. தாயின் கர்ப்பப் பையினுள் இருந்து வெளியே எடுத்த உடன் குழந்தையின் நுரையீரல் ஆனது முதன்முதலாக வெளி காற்றினை சுவாசிக்கும் பொழுது அழத் தொடங்குகிறது இதன் காரணமாக குழந்தைக்கு பிராண வாயு நன்றாக கிடைக்க, குழந்தை நன்றாக அழுவது அவசியம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> பிறந்த குழந்தையின் அழுகையை எப்படி நிறுத்த வேண்டும்? ஒரு வேலை குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தாள் குழந்தையின் அழுகையை நிறுத்த மேலே குறிப்பிட்டது போல், தாய் குழந்தையை தனது இதய துடிப்பு நன்றாக கேட்கும்படி நெஞ்சோடு அணைத்து வைத்துக்கொள்ள வேண்டும் . அப்படி அணைத்து வைத்துக்கொள்வதினால் குழந்தை கருப்பையினுள் இருப்பதை போன்று கதகதப்பாக பாதுகாப்பாக உணரும். இடைவிடாமல் குழந்தை அழுது கொண்டிருந்தாள் இப்படி சிறுது நேரம் வைத்து கொண்டிருந்தாள் சீக்கிரமாக குழந்தை அழுகையை நிறுத்திவிடும். குழந்தையின் 38 ,39 வது வாரத்தில் கருவினில் இருக்கும்பொழுது கடைசியாக நுரையீரல் வளர்ச்சி நடைபெறும் தாயின் வயிற்றில். குழந்தை பிறந்தவுடன் முதலில் மிக வேகமாக செயல்படுவது நுரையீரலே ஆகும் காரணம் முதன்முதலில் வெளிக்காற்றை சுவாசிக்க நுரையீரல் மிகவும் பங்களிக்கிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 31-03-2021
kuzhanthai-valarpu

Tag : Baby-care |

<h2 class="sub_heading backlink">குழந்தையின் மலம் பச்சை நிறத்திற்கு காரணம்?</h2> <p class="patthi">உங்கள் குழந்தை மலம் பச்சை நிறத்தில் இருக்கிறதா? குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழிக்க காரணம் முதன்முறையாக ஊரும் தாய்ப்பால் ஆகும்.குழந்தை பச்சை நிறத்தில் மலம் கழிப்பது சாதாரணம் தான் இதனால் தாய்மார்கள் பயப்படத் தேவையில்லை. குழந்தை சிவப்பு நிறம் அல்லது சாம்பல் நிறத்தில் மலம் கழிந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும்.மேலும் செரிமான பிரச்சனைனால் குழைந்தை பச்சை நிறத்தில் மலம் கழிக்கும்.</p> <h2 class="sub_heading backlink">எதனால் குழந்தை பல நாட்களாக மலம் கழிக்கவில்லை?</h2> <p class="patthi">தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒரு நாள் அல்லது இரண்டு மூன்று நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பது இயல்பே ஆகும் இதனால் பயப்பட தேவையில்லை. ஒரு வாரம் குழந்தை மலம் கழிக்கவில்லை என்றால் மருத்துவரிடம் குழந்தையை அழைத்துச் செல்லவும்.</p> <h2 class="sub_heading backlink">குழந்தை அதிகமாக மலம் கழிக்கிறதா?</h2> <p class="patthi">தாய்ப்பால் குடிக்கும் குழந்தை ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஏழு முறை மலம் கழிப்பது இயல்பே ஆகும். குழந்தை நீர் மாதிரி மலம் கழித்தால் குழந்தையின் உடலில் நீர் வற்றாமல் இருக்க தாய்மார்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.அதிகமாக நீர் மற்றும் சளி போன்று கலந்து மலம் கழிந்து கொண்டிருந்தாள் தாமதிக்காமல் குழந்தையை மருத்துவரிடம் கூட்டி செல்லவும்.</p> <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 25-03-2021