Vijay | | Tamil Best Entertainment site | Laddu muttai இங்கிலாந்து வீதியில் ஒலிக்கும் வாத்தி கம்மிங் ஒத்து-வைரல் வீடியோ vaathi-coming-england-viral-video

இங்கிலாந்து வீதியில் ஒலிக்கும் வாத்தி கம்மிங் ஒத்து-வைரல் வீடியோ

vaathi-coming-england-viral-video

மாஸ்டர் பட ஆல்பத்துல வர்ற நெறைய பாட்டு நெறய பேருக்கு பிடிச்சுருந்தாலும் , வாத்தி கம்மிங் ஒத்து பாட்டு எல்லாருக்குமே மனசுல நின்ன பாட்டுண்ணே சொல்லலாம் அந்த அளவுக்கு அனிருத் போட்ட பீட் மனசுலயே சுத்திட்டு இருக்கு. நமக்கு மட்டும் இல்ல இங்கிலாந்து மக்கள்கிட்டயும் கொஞ்சம் கொஞ்சமா வைரல் ஆகிட்டு வருது, உலகமே ஊரடங்குல இருக்கற நேரத்துல கூட இங்கிலாந்து மக்கள் அவங்க மன அழுத்தத்த போக்கிக்க இந்த மாதிரி சில விளையாட்டு நிகழ்வுகளை செஞ்சுட்டு வராங்க. அந்த விதத்துல நம்ம வாத்தி பாட்டையும் போட்டு ஒரு குத்தாட்டம் போட்ருக்காங்க.
thalapathy-master-edit

Tag : Vijay |

இந்நேரம் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகி படத்தை 4 இல்லனா 5 தடவ பாத்துருப்போம். அது நடக்கல , ஆனா அப்பப்போ மாஸ்டர் படத்தை பத்தின செய்தி வந்து ரசிகர்களை சந்தோசமா வச்சுட்டு இருக்கு. அந்த வரிசைல சமீபத்துல வந்த செய்திய கேட்டு ரசிகர்கள்லாம் செம்ம மெதப்புல இருக்காங்க. ஆண்ட்ரியா மாஸ்டர் படத்துல நடிச்சுருக்காங்கனு நமக்கு நல்லாவே தெரியும், சமீபத்துல அவங்க குடுத்த பேட்டில அவங்களுக்கு படத்துல ரொம்ப பிடிச்ச காட்சி தளபதி கூட பண்ணுன கார் சேசிங் காட்சி தானாம், அதும் படத்துல என்னோட ரோல் செம்ம வில்லத்தனமா இருக்கும்னும் சொல்லிருக்காங்க. செம்ம சேஸிங் சீன் ஒன்னு நமக்கு இருக்கு. கூடுதல் தகவல் ஒன்னு என்னனா மாஸ்டர் படத்தோட கதாசிரியர்களில் ஒருவரான போன் பார்த்திபன் என்ன சொல்லிருக்கார்னா மாஸ்டர் திரைப்படம் உண்மை கதைகளை மையமா வச்சு எடுத்துருக்கோம்னும் , உண்மையான கதாபாத்திரங்களை வச்சு எடுத்துருக்கோம்னும் சொல்லிருக்காரு. சீக்கிரமா நம்ம அத தியேட்டர் ல பாப்போம்.
Laddu Muttai | 14-05-2020
thalapathy-record

Tag : Vijay |

தளபதிக்கு விஜய்க்கு மொத்தம் ஐந்து 200 K லைக்ஸ் டிவீட்ஸ் பண்ணி ரசிகர்கள் மறுபடி அவரை உச்சத்துல வச்சுருக்காங்க. மத்த நடிகர்களுக்கு இதெல்லாம் கனவுல கூட நடக்க வாய்ப்பு இல்லாத மாறி தளபதி ட்விட்டர் பேஜ் ல வர ஒவ்வொரு போஸ்ட்க்கும் லைக்ஸ் எறிகிட்டே போயிட்டு இருக்கு. எந்த எந்த போஸ்ட் லாம் 200 K லைக்ஸ் வாங்குச்சுனு பாக்கலாம், தளபதி நெய்வேலி செல்ஃபீ - 282 K லைக்ஸ், பிகில் பர்ஸ்ட் லுக் - 238 K லைக்ஸ், மாஸ்டர் பர்ஸ்ட் லுக் - 225 K லைக்ஸ், பிகில் செகண்ட் லுக் - 211 K லைக்ஸ், மாஸ்டர் தேர்ட் லுக் - 200 K லைக்ஸ். நம்ம பாட்டுக்கு லைக்ஸ் அடுக்கிகிட்டே போய்ட்டு இருந்தா எப்புடி நண்பா , அங்க ஒரு குரூப்பு இதுல ஒண்ணுகூட பண்ண முடியாம தவ்விக்கிட்டு கெடக்கு அதனாலா கொஞ்சம் பாத்து பண்ணுங்க பாஸு.
Laddu Muttai | 12-05-2020
thalapathi-next-movie-update

Tag : Vijay |

நல்லதோ கெட்டதோ தளபதி ஒருத்தருக்கு மட்டும் தான் சில விஷயமெல்லாம் நடக்கும் அப்படி சமீபத்துல வந்துகிட்டு இருக்குற சில செய்தியெல்லாம் கேட்டு தளபதி ரசிகர்கள் மட்டுமில்லாம மற்ற ரசிகர்களும் பிரம்மிப்புல இருக்காங்களாம். சில நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் செய்தி நிறுவனம் தேனாண்டாள் பிலிம்ஸ் பொறுப்பாளர் முரளி ராமசாமிகிட்ட மெர்சல் உங்களுக்கு தோல்வி படமானு கேட்டப்போ , " மெர்சல் படம் சமயத்துல எங்களுக்கு நிறைய கடன் பிரச்சனை இருந்துச்சு அதனால தன பல பிரச்சனைகளை சந்திச்சோம் மத்தபடி தோல்வி படம் னு சொல்றதெல்லாம் தவறுன்னு குறிப்பிட்டிருந்தாரு". கூடவே அவரு சொன்ன மாஸ் அப்டேட் என்னனா "தளபதி அடுத்து சன் பிக்ச்சர்ஸ் கூட படம் முடிச்சதும் எங்களோட இன்னொரு படம் பண்ண வாய்ப்பு இருக்குனு சொல்லிருக்காரு". சமீபத்துல சந்தோஷ் சிவன் துப்பாக்கி 2 பத்தி இன்ஸ்டா ல ஒரு துணுக்கு போட்ருந்தாரு . இப்போ இதெல்லாம் பாக்குறப்போ கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும் னு எதிர்பாப்போம்.
Laddu Muttai | 05-05-2020
thalapathy-vijay-fan-art

Tag : Vijay | Master |

நேத்து நம்ம தளபதி ரசிகர்கள் ட்விட்டர்ல #VijayTheFaceOfKollywood டேக் காலைல இருந்து ட்ரெண்ட் பண்ண ஆரமிச்சாங்க மே 1 தல ரசிகர்கள் பண்ணுன ட்ரெண்ட் விட தளபதி ரசிகர்கள் பண்ணுன ட்ரெண்ட் தான் நாள் முழுக்க ட்ரெண்டிங் ல இருந்துச்சு. ஏறத்தாழ 3.5 மில்லியன் டிவீட்ஸ் நம்ம தளபதி ரசிகர்கள் நேத்து காலைல ஆரமிச்சு ட்ரெண்ட் பண்ணுனாங்க தல பிறந்த நாள் அதுவுமா தல ரசிகர்களை கொஞ்சம் கூட ட்ரெண்ட் பண்ண விடாம தளபதி ரசிகர்கள் மொத்த சமூக வலை தளத்தையும் அவங்க கண்ட்ரோல் ல கொண்டு வந்து மாஸ் காமிச்சாங்க. இன்னும் தளபதி பிறந்த நாளைக்கு 50 நாள்களே இருக்குற நிலமைல நேத்து பண்ண ட்ரெண்டே கிட்டத்தட்ட 4 மில்லியன் டிவீட்ஸ் வந்துருக்கு, இன்னும் தளபதி பிறந்த நாளன்னைக்கு வர போற ரெகார்டஸ் லாம் பாக்க "I Am Waiting".
Laddu Muttai | 02-05-2020
thalapathy-fan-edit-thuppakki2
விஜய் ரசிகர்கள் மட்டும் இல்ல மற்ற எல்லா நடிகர் ரசிகர்களையும் மிரண்டு போக வச்ச படம் தான் துப்பாக்கி. எப்போடா ஓட்டம் நிக்கும்-னு கதறுற அளவுக்கு ஓடுன படம். சமீபத்துல வந்த செய்தில தளபதி சன் பிக்சர்ஸ் நிறுவனத்துல ஒரு பெரிய பட்ஜெட் படத்துல நடிக்கறதா ஒரு செய்தி வந்துச்சு. அது எந்த அளவுக்கு உண்மைன்னு எல்லார்க்கும் தெரியர்த்துக்குள்ள இயக்குனர் பத்தின தகவல்களும் வேகமா பரவிட்டு இருக்கு. நம்ம ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தளபதிகிட்ட துப்பாக்கி 2 கதைய சொல்லிருக்கறதாகவும். தளபதிக்கு ரொம்ப பிடிச்சு போய் முழு கதைய தயார் பண்ண சொல்லியிருக்கரதாகவும் தெரியுது. அதனால துப்பாக்கி ல உதவி இயக்குனர்களா வேலை செஞ்ச எல்லாரையும் ஒண்ணா கூட்டி முருகதாஸ் துப்பாக்கி 2 கதை பத்தின விரிவான விவாதம் நடத்துனதாகவும் தெரியுது. செரிடா அதனால என்னனு கேக்கறீங்களா , அந்த உதவி இயக்குநர்களோட லிஸ்ட்-அ கொஞ்சம் பாருங்க , 1. அஜய் ஞானமுத்து - டிமாண்ட்டி காலனி , இமைக்கா நொடிகள் , கோப்ரா 2. வெங்கட் மோகன் - அயோக்கியா 3. டி என் சந்தோஷ் - கணிதன் 4. ஆனந்த் ஷங்கர் - அரிமா நம்பி , நோட்டா , இருமுகன் 5. ராஜ்குமார் பெரியசாமி - ரங்கூன் லிஸ்ட் பாத்தாலே மத்த ரசிகர்களுக்கு கருக்குனு இருக்கும் . இதே போல இந்த படமும் நடந்தா துப்பாக்கி ஓடுனத விட இந்த படம் இப்போ இருக்குற தளபதி மார்க்கெட்-கு செம்மையா ஓடும் "செஞ்சிட்டா போச்சி"
Laddu Muttai | 30-04-2020
thalapathy-vijay-vintage

Tag : facts | Vijay | Master |

ஒரு படத்த எடுக்க சினிமா துறை-ல இருக்கவங்கள்லாம் எவ்ளோ பாடுபடுறாங்கன்னு நமக்கெல்லாம் நல்லாவே தெரியும். ஆனா அதையெல்லாம் தாண்டி மனசுக்கு பிடிச்ச மாதிரி தனக்கு தெரிஞ்ச கலை-ய மக்களுக்கு நல்ல விதமா கொண்டு போய் சேர்க்கணும்-னு ஒவ்வொரு படைப்பாளியும் படுற கஷ்டமும் அதுக்காக போடுற உழைப்பும் நிறைய பேருக்கு தெரியாமயே போயிடுது. அது செரிடா இப்போ எதுக்கு இப்டி வள வள னு பேசிட்டு இருக்கன்னு கேக்கறீங்களா ,அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் உழைப்ப பத்தி தான் நாம இப்போ படிக்க போறோம். நம்ம தளபதி நடிச்ச நினைத்தேன் வந்தாய் திரைப்படத்துல வண்ணநிலவே பாட்டு பிடிக்காதவங்க-னு யாருமே இருக்க முடியாது . பார்க்க அந்த பாட்டுல அப்டி என்ன சுவாரசியமா இருக்குனு பல பேர் நினைக்கலாம் , தளபதி தினம் ஷூட்டிங்-கு கலர் கலரா பனியன் போட்டுக்கிட்டு டெய்லி வருவாராம். இயக்குனர் கே செல்வபாரதி தளபதி இப்டி வரத பாத்துட்டு அத வச்சு ஒரு பாடல எடுத்துடலாம்னு தினம் காலைல தளபதி வந்ததும் ஒரு 10 நிமிஷம் வண்ணநிலவே பாட்டு பாடிகிட்டே ஷூட்டிங் லொகேஷன ஒரு ரவுண்டு வர சொல்லுவாராம். அதையெல்லாம் ஒரு தொகுப்பா மாத்தி தான் அந்த பாடலை நமக்கு குடுத்துருப்பாங்க. இந்த செய்தியை படிச்சுட்டு உடனே அந்த பாட்ட ஒரு தடவ பாருங்க. அதுல எவ்ளோ உழைப்பு இருக்கு எவ்ளோ அழகா காட்சி படுத்திருக்காங்க-னு நமக்கே தெரியும் . யான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம்.
Laddu Muttai | 29-04-2020
thalapathy-vijay-in-coat

Tag : Vijay | Master |

ஒருத்தன் என்னடானா படம் ஆன்லைன் ல ரிலீஸ் னு சொல்றான் , இன்னொருத்தன் என்னனா ஆன்லைன் ல திருடி ரிலீஸ் பண்ணிடுவேன்னு சொல்றான் , இப்டி தாங்க பல அக்கப்போர் மாஸ்டர் படத்தை சுத்தி போய்கிட்டு இருக்கு. சமீபத்துல வந்த செய்திய கேட்டு ஒட்டு மொத்த கோடம்பாக்கமே தல சுத்தி பொய் கெடக்குதாம் . மார்க்கெட் ல உச்சத்துல இருக்குற நிறுவனம் தான் அமேசான் தளபதி நடிச்ச மாஸ்டர் படத்த எப்படியாச்சும் அமேசான் பிரைம் ல டெலிகாஸ்ட் பன்னிடனும்னு அவங்களால முடிஞ்சா எல்லாம் செஞ்சுட்டு இருக்காங்க , அப்டி அவங்க சமீபத்துல செஞ்ச விஷயம் தான் படத்தோட விலை . கிட்டத்தட்ட 200 கோடி வரைக்கும் குடுக்கறோம் எங்களுக்கு ஆன்லைன் ல ரிலீஸ் பண்ற உரிமைய குடுங்கன்னு. ஆன்லைன் டெலிகாஸ்ட் கு இவ்ளோ விலையா னு எல்லாம் வாய பொளக்கற அந்த நேரத்துல , மாஸ்டர் டீம் படம் எவ்ளோ நாள் கழிச்சு ரிலீஸ் ஆனாலும் அது தியேட்டர் ல தான் னு அடிச்சு சொல்லிருக்கறது எல்லாரையும் மிரள வச்சுருக்கு . இவ்ளோ பெரிய முடிவ எடுக்கறாங்கன்னா அது தளபதி மார்க்கெட் வேல்யூ எவ்ளோ உச்சத்துல இருக்குன்னு காட்டுது.
Laddu Muttai | 28-04-2020