Sivakarthikeyan | | Tamil Best Entertainment site | Laddu muttai ஆன்லைனில் வெளியானது ஹீரோ-இயக்குனர் மித்ரன் காட்டம் hero-stylish-sivakarthikeyan

ஆன்லைனில் வெளியானது ஹீரோ-இயக்குனர் மித்ரன் காட்டம்

hero-stylish-sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த ஹீரோ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பிருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. காரணமாக இயக்குனர் பி எஸ் மித்ரன் மீது கதை திருட்டு புகார் அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. ஹீரோ திரைப்படம் மே 1 அன்று முன்னணி தொலைக்காட்சியில் திரையிட படுவதாக திட்டமிடப்பட்டு முன்னோட்டங்கள் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் படத்தின் மீது வழக்கு இருப்பதால் தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் வெளியிட கூடாது என்று தடை பிறப்பிக்கப்பட்டது இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நடைமுறை சிக்கல்களை தகர்த்து ஆன்லைனில் ஹீரோ திரைப்படம் மே 2 வெளியிடப்பட்டது . இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர், மேலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நாளை எதிர்நோக்கியுள்ளனர். இயக்குனர் பி எஸ் மித்ரன் அவர்கள் இதனை " களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்" என்று காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




sivakarthikeyan-next-movie
அண்ணன் சிவகார்திகேயனோட டாக்டர் மற்றும் அயலான் படம் முதல் பார்வை ஒரே நாள் ல ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுச்சுனு நமக்கு நல்லாவே தெரியும். ரெண்டு முதல் பார்வை ஒண்ணா ரிலீஸ் ஆனதுக்கே ரசிகர்கள் செம்ம சந்தோசமா இருந்தாங்க. ஆனா இப்போ வெளிவந்துருக்க செய்திய கேக்கறப்போ ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தா கூட ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல , அது என்னனா டாக்டர் , அயலான் ரெண்டு படமும் ரிலீஸ் கு தயாரா இருந்த இந்த நிலைல ஊரடங்கு காரணமா இதுவரை எந்த படமும் ரிலீஸ் ஆகல , பட ரிலீஸ் பண்ண தியேட்டர் கு பெரிய போட்டி நடக்கற இந்த நேரத்துல சிவகார்த்திகேயன் அவர்கள் நடிச்ச ரெண்டு படமும் ஒண்ணா ரிலீஸ் பண்ணா வசூல் ரீதியா நல்ல வரவேற்பு இருக்கும்னு தயாரிப்பாளர் தரப்புல பேசப்படுது. எது எப்படியோ ஊரடங்கு முடிவுக்கு வரபோற இந்த நிலைல இந்த செய்தி மட்டும் உண்மை ஆசுன்னா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான்.
Laddu Muttai | 11-05-2020
sivakarthikeyan-doctor
அண்ணன் சிவகார்த்திகேயன் அவர்கள் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடீயோவினை பதிவு செய்திருந்தார் . தனது வழக்கமான பாணியில் நகைச்சுவையாக பேச ஆரமித்தார் . அதில் அனைவரும் டாக்டர்களுக்கு எதிராக ஏதும் செய்து விட கூடாது, நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் . சமீப்பதில் கீழ்ப்பாக்கத்தில் நடந்த சம்பவம் போன்று இனி ஏதும் நடந்துவிட கூடாது என்று அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார் . அந்த நடிகர் சொன்னாரு இந்த நடிகர் சொன்னாருன்னு லாம் பாக்க கூடாதுங்க நல்லது யார் சொன்னாலும் ஏத்துக்கணும் . அந்த வகைல அண்ணன் சிவகார்த்திகேயன் சொலிக்கறது எல்லாரும் பின் பற்ற கூடிய ஒன்று .
Laddu Muttai | 24-04-2020
யூ-டியூப் ல் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்த நம்ம வீடு பிள்ளை திரைப்பட ஆல்பம் 300M ஹிட்ஸ் பெற்றுள்ளது . முன்னணி நடிகர்களுக்கு இணையாக பல நடிகர்கள் இருந்தாலும் அவர்களில் யாரும் இதை பெரும்பாலும் செய்வதில்லை , இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் அவர்களின் ரசிகர் பலம் மட்டுமே , இந்த சந்தோசத்தை twitter இல் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . அவற்றில் சில முக்கிய பதிவுகள் கீழ பட்டியலிடப்பட்டுள்ளது.
Laddu Muttai | 16-04-2020