Search for

surya

Awesome Image
24 திரைப்படம் தாராளமா 50 நாட்களை கடந்து ஓடுச்சு. படத்தோட பட்ஜெட் 70 கோடி, கலக்க்ஷன் பண்ணுனது 106 கோடி வியாபார ரீதியா பெரும் வெற்றி படமா இருந்தாலும் ரசிகர்களிடையே சுமார் மதிப்பீடு தான் கெடச்சது, சரியா சொல்லணும்-னா 24 படம் தளபதி விஜய் அவர்களுக்கு எழுதப்பட்ட கதை , 2008 ல இந்த கதைய இயக்குனர் திரு விக்ரம் குமார் விஜய சந்திச்சு சொல்லிருக்காரு. அந்த காலகட்டத்துல விஜய் கமர்சியல் படங்கள் ல கவனம் செலுத்துனதால இந்த கதைய நிராகரிச்சுட்டாரு. இந்த படத்த நிராகரிச்சுட்டு விஜய் அவர்கள் நடிச்ச படம் தான் வில்லு. தளபதி விஜய் நிராகரிச்சதுக்கு அப்புறம் இயக்குனர் திரு விக்ரம் குமார் அவர்கள் சீயான் விக்ரம் கிட்ட 2009 ல இந்த கதைய சொன்னாரு, விக்ரம் கு இந்த கதை ரொம்பவே பிடிச்சு போச்சு , திரைக்கதை ல கொஞ்சம் மாற்றம் செய்ய சொன்னாரு ஏன்னா விஜய் கு தகுந்த மாதிரி காட்சிகள் அமைப்பு இருந்தது. திரைக்கதை ல சில மாற்றங்கள் பன்னிட்டு ஷூட்டிங் ல எறங்குனாரு , நடிகை இலியானா, இசை ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பு ஸ்ரீ ராஜ கலையம்மன் மீடியாஸ் (ஆல்வார் ,வேல், கண்ணுக்குள் நிலவு ) இது தான் விக்ரம் நடிப்புல தயாரான 24 படம் . டிசம்பர் 2009 ல இந்த படம் தொடங்கப்பட்டுச்சு , விக்ரம் அவர்கள் திரும்ப திரும்ப திரைக்கதைல மாற்றம் செய்ய சொல்லிகிட்டே இருந்தாரு. தயாரிப்பு நிறுவனமும் கம்மி பட்ஜெட் ல படத்தை முடிக்க சொன்னாங்க. இப்டி மூணு பக்கமும் சரியான பிணைப்பு இல்லாததால இயக்குனர் இந்த படத்த கைவிட முடிவெடுத்தார். ஆகஸ்ட் 2014 ல இயக்குனர் நம்ம சூர்யா அண்ணாகிட்ட இந்த கதையை சொன்னாரு அவரும் ,ஓகே சொல்லிட்டாரு. ஆனா எந்த தயாரிப்பு நிறுவனமும் 24 படத்த தயாரிக்க முன்வரல. அதனால சூர்யா அவர்கள் தன்னோட சொந்த தயாரிப்புல இந்த படத்தை எடுக்க ஆரமிச்சாரு. மொதல்ல கேத்ரின் தெரசா கிட்ட நடிக்க கேட்டாங்க அவங்க தெலுங்கு படங்கள்ல நடிச்சுட்டு இருந்ததால கடைசில சமந்தா வ நடிக்க வச்சாங்க. ஆத்ரேயா கேரக்டர் கு 6 விதமான வடிவமைப்பு செஞ்சு கடைசில ஓகே செஞ்சது தான் நம்ம படத்துல பாத்த ஆத்ரேயாடா. சூர்யா சொன்ன மாதிரியே 100 நாள் ல இந்த படத்தோட ஷூட்டிங்க இயக்குனர் முடிச்சு குடுத்தாரு. இந்த படத்தோட இரண்டாம் பாகத்துக்கு #24Decoded னு டைட்டில் வைக்கப்பட்டது. ஆனா 24 திரைப்படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றதால அந்த படத்த எடுக்காம நிறுத்திட்டாங்க.
Laddu Muttai | 07-05-2020
Awesome Image
சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக "மதங்களைக் கடந்த சூர்யா"என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . இதுவரை கிட்டத்தட்ட 500K டேக்ஸ் நெருங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா அவர்களின் மனைவி ஜோதிகா அவர்கள் பேசிய கருத்துக்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்பு எழுந்து வந்தது மேலும் படத்தின் வெளியீட்டு உரிமையை ஆன்லைன் தளத்திற்கு விற்றதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று திரையரங்க உரிமையாளர்களும் போர்க்கொடி தூக்கி வந்தனர். சமூகத்தில் நல்ல பெயரில் இருக்கும் திரு சூர்யா அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இச்செயல்களுக்கு நடிகர் சூர்யா அவர்கள் கண்டனம் தெரிவித்தும் , தனது மனைவி ஜோதிகா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் . இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யா அவர்களின் ரசிகர்கள் ட்விட்டரில் "மதங்களைக் கடந்த சூர்யா"என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .
Laddu Muttai | 03-05-2020
Awesome Image
ட்விட்டரில் சூர்யா ரசிகர்கள் சூரரை போற்று படத்தின் ஹாஷ்டாக் ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர். லாக் டவுநிற்கு பிறகு திரு சூர்யா அவர்கள் நடித்த சூரரை போற்று திரைப்படம் வெளியாக இருப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர் . இதனை கொண்டாடும் விதமாக சூர்யா ரசிகர்கள் ட்விட்டர் இல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதும் ட்ரெண்ட் ஆரமிச்ச கொஞ்ச நேரத்துலயே 100K டிவீட்ஸ் கள சுலபமா போட்ருக்காங்க , இதே வேகத்துல ட்ரெண்ட் பண்ணுனா எப்படியும் 1M ஹாஷ்டாக் வந்துடும் . இப்படிப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கும் சூர்யா சினிமாவுக்கு நல்ல நடிகனாக, சமூகத்துக்கு நல்ல மனிதனாக பெற்றவர்களுக்கு நல்ல மகனாக, உடன்பிறந்தவர்களையும் தாண்டி உன் ரசிகர்களுக்கு நல்ல அண்ணனாகவும் வாழும் தன்னிகற்றவரே.!! என்று ரசிகர்கள் ட்விட்டரில் டீவீட்டி வருகின்றனர்.
Laddu Muttai | 25-04-2020