raasipalan | | Tamil Best Beauty tips site | Laddu muttai ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான அதிபதிகள் jothidam

ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான அதிபதிகள்

jothidam

12 ராசிகளுக்கான அதிபதி மற்றும் நட்சத்திரங்களுக்கான அதிபதிகள்: ஒவ்வொரு ரசிகருக்கும் ஒவ்வொரு அதிபதி கடவுள் இருக்கிறார்கள். திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது அதிபதி கடவுள் நிலையைப் பொறுத்து திருமணம் பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஒருசில ராசியில் கடவுள் பகையாகும் ஒருசில ராசியின் அதிபதி கடவுள் நட்பாகவும் அமைதியாகவும் இருப்பார். திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ராசி பொருத்தம் முக்கியமாக பார்க்கப்படுகிறது , ஒற்றுமையாக இல்லையெனில் ஆணும் பெண்ணும் ஒற்றுமையாக வாழ இயலாது பொருத்தம் இருந்தால் மட்டுமே ஆணும் பெண்ணும் ஒற்றுமையோடு மனம் ஒன்றி வாழ முடியும். ஒவ்வொரு ராசிக்கான அதிபதி யார் என்பதைப் பார்க்கலாம். 1.மேஷ ராசியின் அதிபதி- செவ்வாய் 2. ரிஷப ராசியின் அதிபதி-சுக்கிரன் 3. மிதுனம் ராசியின் அதிபர்-புதன் 4.கடகம் ராசியின் அதிபதி-சந்திரன் 5.சிம்மம் ராசியின் அதிபதி-சூரியன் 6.கன்னி ராசியின் அதிபதி-புதன் 7.துலாம் ராசியின் அதிபதி-சுக்கிரன் 8.விருச்சிகம் ராசியின் அதிபதி -செவ்வாய் 9.தனுசு ராசியின் அதிபதி-குரு 10.மகரம் ராசியின் அதிபதி-சனி 11.கும்பம் ராசியின் அதிபதி-சனி 12.மீனம் ராசியின் அதிபதி-குரு இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் அதன் அதிபதி யார் என்பதைப் பார்க்கலாம்: 1.அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி- கேது 2. பரணி நட்சத்திரத்தின் அதிபதி- சுக்கிரன் 3. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி- சூரியன் 4. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி -சந்திரன் 5. மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி- செவ்வாய் 6. திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி- ராகு 7. புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி- குரு 8. பூசம் நட்சத்திரத்தின் அதிபதி- சனி 9. ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி-புதன் 10. மகம் நட்சத்திரத்தின் அதிபதி -கேது 11. பூரம் நட்சத்திரத்தின் அதிபதி- சுக்கிரன் 12. உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி -சூரியன் 13. அஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி- சந்திரன் 14. சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி -செவ்வாய் 15. சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி- ராகு 16. விசாக நட்சத்திரத்தின் அதிபதி -குரு 17. அனுடம் நட்சத்திரத்தின் அதிபதி -சனி 18. கேட்டை நட்சத்திரத்தின் அதிபதி- புதன் 19. மூலம் நட்சத்திரத்தின் அதிபதி- கேது 20.பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி -சுக்கிரன் 21. உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி- சூரியன் 22. திருவோணம் நட்சத்திரத்தின் அதிபதி- சந்திரன் 23. அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி -செவ்வாய் 24. சதய நட்சத்திரத்தின் அதிபதி- ராகு 25. பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி- குரு 26. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி- சனி 27. ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி -புதன்




Tag : raasipalan |

ஒவ்வொரு ராசியிலும் உள்ள நட்சத்திரங்களுக்கு அதிர்ஷ்ட தெய்வங்கள் உள்ளன 27 நட்சத்திரங்களுக்குரிய அதிஷ்ட தெய்வங்கள் பற்றி பார்ப்போம். 1.அஸ்வினி நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்-ஸ்ரீ சரஸ்வதி தேவி 2.பரணி நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் -ஸ்ரீ துர்க்காதேவி 3. கிருத்திகை நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம்- முருகப் பெருமான் 4. ரோகிணி நட்சத்திரத்தின் அதிர்ஷ்ட தெய்வம் -ஸ்ரீ கிருஷ்ணன் 5. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அதிஷ்ட தெய்வம் -சிவபெருமான் 6. திருவாதிரை நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் -சிவபெருமான் 7. புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீராமர் 8. பூசம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 9. ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீ ஆதிசேஷன் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 10. மகம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- சூரிய பகவான் 11. பூரம் நட்சத்திரத்தின் இஷ்ட தெய்வம் ஸ்ரீ ஆண்டாள் தேவி 12. உத்திரம் நட்சத்திரத்தில் இஷ்ட தெய்வம் ஸ்ரீ மகா லட்சுமி தேவி 13. அஸ்தம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீகாயத்ரி தேவி 14. சித்திரை நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 15. சுவாதி நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 16. விசாகம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீ முருகப் பெருமான் 17. அனுஷம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீலட்சுமி நாராயணர் 18. கேட்டை நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீ வராஹ பெருமாள் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 19. மூலம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஆஞ்சநேயர் 20. பூராடம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் 21. உத்திராடம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீ விநாயகப் பெருமான் 22. திருவோணம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் -ஸ்ரீ ஹயக்கிரீவர் 23. அவிட்டம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் 24. சதயம் நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் 25. பூராட்டாதி நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்-ஸ்ரீ ஏகபாதர் 26. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இஷ்ட தெய்வம் -ஸ்ரீ மகா ஈஸ்வரர் 27. ரேவதி நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்- ஸ்ரீ அரங்கநாதன் ஒவ்வொருவரும் அவரவர் ஜாதகத்தில் உள்ள இஷ்ட தெய்வங்களை கும்பிடுவதற்கு முன் அவரவர் குல தெய்வங்களை கும்பிட்டு வணங்குவதன் மூலம் இஷ்ட தெய்வத்தின் அருளைப் பெறமுடியும். விநாயகர் அடுத்தபடியாக குலதெய்வம் அதற்கு அடுத்ததாக இஷ்டதெய்வம் கும்பிடுவது மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 06-10-2021

Tag : raasipalan |

மேஷ ராசி 12 ராசிகளில் முதல் ராசி ஆகும். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான். மேஷ ராசியில் அஸ்வினி பரணி கிருத்திகை முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன.அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது, பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன், கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதம் அதிபதி சூரியன். மேஷ ராசிக்கான உருவம் ஆடு ஆகும். மேஷ ராசியின் குணத்தை பொறுத்தவரையில் இவர்கள் அதிக கோபக்காரராக இருப்பார்கள் தன்னை நம்பியவர்களுக்கு ஏதேனும் தீங்கு உதவி ஏற்பட்டால் முதல் ஆளாக நிற்பார்கள் அநியாயத்தை தட்டிக் கேட்கும் குணம் உடையவர்கள். எந்த ஒரு காரியத்திலும் நிதானம் இல்லாமல் உடனே நடந்தே தீரவேண்டும் என்று பிடிவாதம் உள்ளவர்கள். அந்த காரியம் நடைபெற வில்லை என்றால் அந்த செயலை அப்படியே விட்டுவிட்டு வேறு ஒரு செயலில் ஈடுபடுவார்கள். யாருடைய உதவியும் இன்றி ஒரு வேலையை தனிமையாக செய்யும் ஆற்றல் உடையவர்கள். நியாயம் இல்லாதவர் இடத்தில் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அதை கவனிக்காமல் சற்றும் பொருட்படுத்தாமல் தன் கோபத்தால் சண்டையிடும் குணமுடையவர்கள். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> தான் எடுக்கும் முடிவு சரி என்று நிற்பார்கள் அதை தவறாகப் போய் முடிந்தாலும் அது சரியாகத்தான் அமையும் என இவர்கள் சரியான முடிவை மட்டுமே எடுப்பார்கள். நடனம் இசை போன்ற கலைகளில் வல்லவராகத் திகழ்வார். அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஆளுமைத் திறன் உடையவர்கள் தன் பேச்சை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். மேஷ ராசியில் பிறந்தவர்கள் சட்டென்று காதலில் விழுந்து விடுவார்கள். தோல்வியடைந்தால் சில காலங்களில் மனதை மாற்றி வேறு ஒரு காதலை தேடுவார்கள். எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்வதினால் இவர்களுக்கு வெற்றி என்பது நிரந்தரமாக இருக்கும். மனதில் எப்போதும் எதையோ ஒன்று போட்டு குழப்பிக் கொண்டே இருப்பார்கள் மனம் தெளிவாக இவர்கள் அமைதி காப்பது அவசியம்.உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் இவர்களின் பலவீனமே இவர்களை ஒருவர் நம்பி விட்டால் அவர்களுக்கு எந்த உதவி என்றாலும் செய்வார்கள்.இதனைப் பயன்படுத்திக் கொண்டவர்கள் அவர்கள் நினைத்த காரியத்தை இவர்களின் மூலம் செயல் படுத்திக் கொள்வார்கள். மேஷ ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 05-10-2021

Tag : raasipalan |

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். ரிஷப ராசியில் உள்ள நட்சத்திரங்கள் கிருத்திகை பாதம் 2 3 4 ரோகினி மிருகசீரிடம் 1 2 ஆகிய நட்சத்திரங்கள் உள்ளன. ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வசீகரமான முகத்தை கொண்டவர்கள் மிகவும் அழகாகத் தோற்றம் உடையவர்கள் அவர்களின் பற்களின் வரிசை மிகவும் அழகாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்கள் பார்த்ததும் ஒருவர் மனதை கவரும் வண்ணம் இருப்பார் ரிஷப ராசிக்காரர்கள் மனமும் அப்படித்தான். ரிஷப ராசிக்காரர்களுக்கு சுயநலம் என்பது ஒருபோதும் கிடையாது அவர்கள் மனம் கொண்டவர்களை பார்த்தால் இவர்கள் மிகவும் அன்பானவர்கள். பேச்சிலும் செயலிலும் நகைச்சுவை குணத்திலும் பிறரை கவரும் வண்ணம் இருப்பார். பெற்றோர் மீது அதிக பாசத்துடன் இருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள் அதிலும் குறிப்பாக தாயின் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள் தாய்வழி உறவினர்கள் ரிஷப ராசிக்காரர்களின் மூலம் அதிக பயன்களை பெறுவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் அதிகமாக உறவினர்கள் நண்பர்கள் கூட்டுக்குடும்பமாக வாழவே நினைப்பார்கள். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாணம் தாமதமாகவே நடைபெறும்.தனிக்குடித்தனம் போக வேண்டும் என்றால் கண்டிப்பாக சண்டை சச்சரவை மட்டுமே மிச்சமாக இருக்கும் கூட்டுக்குடும்பம் இவர்களுக்கு அதிக சந்தோசத்தை கொடுக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு குழந்தை சற்று தாமதமாகவே பிறக்கும் பெண் குழந்தை என்றால் இவர்களை நன்றாக பார்த்துக் கொள்ளும் மற்றும் எதிர்காலத்தில் வயதான காலத்தில் பெண் பிள்ளைகளே உங்களுக்கு அதிகமாக உதவுவார்கள். ரிஷப ராசிகாரர்கள் இளம்வயதிலேயே வேலை செய்து சம்பாதிக்க நேரிடும் இருந்தாலும் இவர்களுக்கு நடுத்தர வயதிலேயே பணம் பஞ்சமில்லாமல் இருக்கும். கையில் பணம் இல்லை என்றாலும் இந்த ராசிக்காரர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும் அதை இவர்கள் செலவு செய்து கொண்டேதான் இருப்பார்கள். அழகு ஆபரணங்கள் வாசனை திரவியங்கள் இதன் மேல் பற்று வைத்திருப்பார்கள். மனைவியை தவிர வேறு ஏதேனும் பெண்ணுடன் தொடர்பு கொண்டால் அவமானங்கள் அசிங்கங்கள் மிஞ்சும். இதனால் மற்ற பெண்களிடம் இருந்து விலகி இருப்பதே இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> மனைவியால் குழந்தைகளால் கடன் அதிகமாக வரும் இந்த ராசிக்காரர்களுக்கு. சொத்துகள் விரயமாகும் இதனால் தன் பெயரில் இல்லாமல் சொத்துக்களை தன் வாரிசை மேல் வைப்பதால் சொத்துக்களைக் காப்பாற்ற முடியும். இவர்கள் சிறு வயதிலேயே அதிக உழைப்பாளியாக இருப்பதாக இவர்கள் பெருமையுடன் மரியாதையுடன் மற்றவர்களால் நடத்தப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் படிக்கும் காலத்தில் படிப்பில் நாட்டம் குறைவாகதான் இருக்கும் அவர்கள் மற்ற விளையாட்டு கலைகளில் நன்கு ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள் இவர்கள் படிப்பில் அதிக கவனத்துடன் படிக்க வேண்டும். ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அமைதியானவர்கள் இவர்கள் எவ்வளவு சாதுவோ அந்த அளவுக்கு கோவக்காரர்களும் கூட சண்டை என்று வந்துவிட்டால் அவர்கள் அவர்களால் கட்டுப்படுத்தவே முடியாது அந்த அளவுக்கு கோபப்படுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அவருடன் மேல் இருக்கும் சொத்து தங்காது இதனால் தொழிலில் கவனம் மிகவும் தேவை கூட்டு தொழில் என்னைக்கும் செய்யக்கூடாது.கூட்டு தொழில் இல்லாமல் தனியாக நின்று தொழில் செய்தால் பகை ஏதுமில்லாமல் ஏமாற்றம் எதுவும் இல்லாமல் சம்பாதிக்க இயலும் ஒருத்தருக்கு பணம் உதவி செய்தால் அது திரும்ப பெற முடியாது அவர்கள் ஏமாற்றி விடுவார்கள் பண உதவி செய்யும் முன்பும் கடன் கொடுக்கும் முன் நன்கு யோசித்து கொடுக்க வேண்டும் இந்த ராசிக்காரர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு இல்வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது சண்டை விவாகரத்து போன்ற நிம்மதியின்றி இருக்கும். காதல் என்பது இவர்களது வாழ்க்கையில் மிக சீக்கிரம் ஒரு துணை அமைந்து விடும் ஆனால் இந்த ராசிக்காரர்கள் அவ்வளவு எளிதாக காலங்களில் வசப்படுவதில்லை ஆனால் இவர்களை தேடி காதல் கண்டிப்பாக வரும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 05-10-2021

Tag : raasipalan |

மிதுன ராசிக்கு அதிபதி புதன் ஆவார். மிதுன ராசியின் நட்சத்திரம் 2ஆம் 3ஆம் பாதம் திருவாதிரை 1 2 3 4-ஆம் பாதம் புனர்பூசம் 1 2 3ஆம் பாதங்கள் கொண்டிருக்கும். மிதுன ராசியில் பிறந்தவர்கள் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள் இவர்கள் உயரமாகவும் ஒல்லியாகவும் இருப்பார்கள்.மிதுன ராசியில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியான தோற்றத்தை உடையவர்கள். பார்ப்பதற்கு அமைதியானவர்கள் என்றாலும் சண்டை என்று வந்துவிட்டால் அவர்களை நீந்துவதற்கு ஆள் இல்லை அவ்வளவு கோபக்காரராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பஞ்சாயத்து மற்றும் ஒரு பிரச்சினை என்றால் தீர்த்து வைப்பதில் மிகவும் கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள் யார் பக்கம் நீதி உள்ளதோ அவ்வளவு சுகமாக நீதி வழங்கி அந்த பிரச்சனையை முடித்து வைப்பார்கள். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இந்த ராசிக்காரர்களை நெருங்கிப் பழகுபவர்கள் மட்டுமே இவர்களின் நற்குணங்கள் புரியும். கேலி கிண்டல் நகைச்சுவை, பிறரை கேலி செய்வதில் வல்லவர்கள். இந்த ராசிக்காரர்கள் மூத்த சகோதர சகோதரிகளை விட இளைய சகோதர சகோதரிகளின் மீது அதிகம் அன்பு வைத்திருப்பார்கள். அனைத்து உறவினர்களும் நன்றாக இந்த ராசிக்காரர்கள் இடம் பேசினாலும் இவர்களின் கோபம் பேச்சுவார்த்தை பிரச்சனையால் இந்த உறவுகள் காலப்போக்கில் இழந்துவிடுவார்கள் இதனால் அதிகம் பேச்சுவார்த்தை விவாதம் கோபப்படுவது ஆகியவற்றை குறைத்துக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டால் உறவினர்கள் எல்லாரும் தன் கைவசமே. மிதுன ராசிக்காரர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் யார் எந்த ஒரு செயலை செய்ய உதவி கேட்டாலும் அந்த செயலை அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நேர்த்தியாக முடித்துக் கொடுப்பார்கள். இவர்கள் பேச்சு ஆற்றல் பெற்றவர்கள் இவர்கள் பேசும் பேச்சுக்களில் மற்றவர்களை நம்பிக்கையை பெறுவார்கள் இவர்களுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும். அதிகம் பேசமாட்டார்கள் குறைவாகவே பேசுவார்கள். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இவர்களின் பேச்சில் கண்ணியம் கட்டுப்பாடு நன்றாக தெரியும் மற்றவர்களின் பேச்சுவார்த்தைகளில் கவனித்து கொண்டாலும் தான் எடுக்கும் முடிவு சரி என்று நினைக்கும் செயல்களை செய்வார்கள் . ஒருவரிடம் பேசும்போது அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கணிக்கும் ஆற்றல் உடையவர்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் எப்பேர்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களை வேண்டாம் என்று விலக்கி விடுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தனது மனதை மாற்றிக் கொள்ளும் திறன் உடையவர்கள். இவர்களுக்கு தொழிலில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு தொழிலில் நிலையாக இருக்க மாட்டார்கள். தொழிலை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சுயதொழில் செய்ய மிகவும் ஆர்வம் உள்ளவர்கள். மனைவி என்று வரும் போது இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் இவர்களுக்கு அன்பான அழகான மனைவி அமையும் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சில சில சண்டைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் இந்த ராசிக்காரர்கள் அவர்களுக்கு அடங்கிப் போவார்கள். இந்த ராசிக் காரர் பெண்களுக்கு மிகவும் அழகான கணவன் அமைவார்கள் மற்றும் அன்பான வாழ்க்கை இந்த ராசிக்காரர்களுக்கு அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு பெருமாளை வணங்கி வந்தால் மிகவும் அதிர்ஷ்டம் உண்டாகும். ராசிக்காரர்கள் பணம் கையில் தங்காது செலவழித்துக் கொண்டே இருப்பார்கள். ஆடம்பர செலவுகள் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். இவர்களுக்கு 30 வயதிற்கு மேல் வாழ்க்கை தொழில் எல்லாம் நன்றாக அமையும். குழந்தைகளால் சின்ன சின்ன சண்டைகள் சச்சரவுகள் கடன்கள் ஏற்படக்கூடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 05-10-2021