Baby-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai குழந்தைக்கு எடை கூட என்ன வேண்டும்

குழந்தைக்கு எடை கூட என்ன வேண்டும்

பிறந்து ஆறு மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும், எடை கூடவில்லை என்றால் தாய் சத்தான ஆகாரங்கள் சாப்பிடுவதன் மூலம் பால் வழியாக அந்த சத்து குழந்தைக்கு சென்றடையும். அது வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் ஆறு மாதத்திற்கு மேல் குழந்தையின் எடை கூடுவதற்கு சத்தான ஆகாரங்களை ஊட்டலாம் அது எவ்வாறு தயாரித்து ஊட்ட வேண்டும் என்பதை பார்க்கலாம். குழந்தை எடை கூடும் போது குழந்தைக்கு உடலில் தேவையான நல்ல கொழுப்பு சத்து உள்ள பொருட்களையும் மற்றும் கால்சியம் நிறைந்த பொருட்களையும் எலும்புகள் வலுவாக கூடிய உணவுகளை மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்கு சத்து மாவு கொடுக்க நினைப்பவர்கள் அதில் 24 பொருட்கள் 15 பொருட்கள் என சேர்த்து அறைத்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு எடை மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழந்தைக்கு சென்றடையும். வீட்டிலேயே எளிமையாக சத்துமாவு தயாரித்து கொடுக்கும் வழிமுறை, 100 கிராம் கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து எடுத்துக் கொள்ளவும். 100 கிராம் அளவிற்கு அரிசி எடுத்துக்கொள்ளவும். 10 பாதாம் பருப்பு மற்றும் 6 முந்திரிப்பருப்பு எடுத்துக் கொள்ளவும். அவுல் 100 கிராம் எடுத்துக்கொள்ளவும். முதலில் உளுந்து பருப்பை மிதமான தீயில் செந்நிறம் ஆகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு அரிசியை மிதமான தீயில் எண்ணெய் ஏதும் ஊற்றாமல் பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பாதாம் மற்றும் முந்திரியை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அவளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்திற்குமே எண்ணெய் சேர்க்கக்கூடாது. வறுத்து எடுத்து அத்தனை பொருட்களும் ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனை எவ்வாறு கொடுப்பது குழந்தைக்கு எடுத்ததும் அதிகமாக கொடுக்க கூடாது. குழந்தைக்கு முதலில் பழக்கப்படுத்த வேண்டும், குழந்தைக்கு செரிமான மண்டலம் அதிகப்படியாக வேலை செய்திருக்காது முதலில் சிறிதளவு கொடுத்து பழக்க வேண்டும் , குழந்தைக்கு சேருகிறதா என்று பார்த்துக்கொள்ளவும் .இதனை எவ்வாறு கொடுப்பது என்பதை பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நாம் செய்து வைத்த இந்த சத்து மாவை இரண்டு மூன்று தேக்கரண்டி தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும் கட்டி பிடிக்காமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் பிறகு சிறிதளவு உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும் நன்கு கொதித்து நல்ல ஒரு வாசனை வரும் சமயத்தில் இறக்கி விடவும். நன்கு கட்டி பிடிக்கும் பதத்தில் இருந்தால் அதில் சிறிதளவு சுடுதண்ணீர் மட்டுமே ஊற்றவேண்டும் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும் பிறகு இறக்கி ஆறிய பிறகு குழந்தைக்குக் கொடுக்கவும். குழந்தைக்கு உப்பு பிடிக்கவில்லையென்றால் சாப்பிடும் பொழுது சிறிதளவு கரும்பு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும் வெள்ளை சர்க்கரை சேர்க்கக்கூடாது கரும்பு சக்கரை சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம். இந்த உணவை ஆறு மாதத்திலிருந்து கொடுக்கத் தொடங்கலாம். குழந்தைக்கு அளவாக செய்து வைப்பது என்றால் வண்டு பிடிக்காமல் இருக்கும் இது ஒரு மாத காலத்திற்கு அல்லது ஒன்றரை மாத காலத்திற்கு இந்த சத்து மாவு குழந்தைக்கு வரும். இன்னும் அதிகமான நாட்கள் வேண்டும் என்பவர்கள் இந்தப் பொருட்களின் அளவை கொஞ்சம் கூடுதலாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.




Tag : Baby-care |

பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கலாமா என்ற கேள்வி ஒவ்வொரு தாய்மார்களுக்கும் ஏற்படக்கூடிய ஒரு சந்தேகம் தான். மருத்துவர் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று சொல்வார்கள் காரணம் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான தண்ணீர் 85% தாய்ப்பாலில் உள்ளது. இதனால் தண்ணீர் கொடுக்க அவசியம் இல்லை.ஒரு சில குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்தாலும் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது ஆனால் சில குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிரச்சினை ஏற்படும் தண்ணீர் கொடுப்பதனால். பிறந்த குழந்தையின் வயிறு குழந்தையின் உள்ளங்கையின் அளவில் மட்டுமே இருக்கும் அதில் தண்ணீரை கொண்டு நிற்பதன் மூலம் குழந்தை சரியாகப் பால் குடிக்காது தண்ணீருடன் தாய்ப்பால் அதிக குழந்தையின் வயிற்றில் கலப்பதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாகச் சென்றடையாது. பால் பவுடரை கொடுப்பவர்களும் தண்ணீர் கொடுக்க தேவையில்லை குறிப்பிட்ட அளவு மட்டுமே அதில் தண்ணீர் கலக்க வேண்டும் அதிகமாக கடந்தால் அதில் சேர வேண்டிய சத்துக்கள் குழந்தையை சென்றடையாது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கோடைக்காலம், குழந்தையின் வாய் வறண்டு, போதல் உதடு வெடித்தல் அதிகமாக இருந்தால் குழந்தை தண்ணீர் கொடுக்க தேவையில்லை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தண்ணீரைப் பருக வேண்டும். ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுத்த பிறகு அல்லது தாய்ப்பால் கொடுக்கும் முறை கூட அந்த தாய்மார் தண்ணீரை நன்கு பருக வேண்டும் தண்ணீர் போதுமான அளவு தாய் சாப்பிட்டாலே குழந்தைக்கு போதுமான நீர் குழந்தைக்கு கிடைத்துவிடும் ஆறு மாதத்திற்கு பிறகு திரவ மற்றும் திட உணவுகளை தாய்ப்பால் தவிர்த்து கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயமாக தண்ணீர் கொடுக்க வேண்டும். ஏன் பிறந்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க கூடாது ? பிறந்த குழந்தைக்கு சர்க்கரை, தண்ணீர் இவற்றை கொடுக்கும்பொழுது குழந்தைக்கு சளி பிரச்சனை கண்டிப்பாக ஏற்படும் பிறந்த குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு மேலாக பிரச்சினை இருக்கக்கூடும். சர்க்கரையில் உள்ள கெமிக்கல் குழந்தைக்கு உடலில் ஏதேனும் உபாதையை ஏற்படுத்தும் இதனால் சர்க்கரை தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதால் உடல் வீக்கம், முகம் வீக்கம், போன்றவை ஏற்படும் குழந்தைக்கு உடலினுள் எரிச்சலாக உணரும். இதனால் குழந்தை அழுதுகொண்டே இருக்கும் குழந்தை அழுகிறது என்று பெரியவர்கள் இதன் கை வைத்தியம் செய்வார்கள். இதற்கு தண்ணீர் கொடுக்காமல் இருந்தால் குழந்தைகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது மனக்குழப்பம் மனம் அமைதியின்றி குழந்தை அழுதுகொண்டே இருக்கும் இதனால் தண்ணீர் ஆறு மாதம் வரை தவிர்ப்பது நல்லது குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க நினைப்பவர்கள் தண்ணீர் நன்கு பருகி தாய்ப்பால் கொடுத்தாலே போதுமானது. குழந்தைக்கு அதிகமாக மோசன் ஆகவில்லை என்றால் நன்றாக தாய்மார் தண்ணீர் பருகி கீரை பழங்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை நன்றாக மோசன் போக ஆரம்பித்துவிடும் இதனால் கவலைப்படத் தேவையில்லை. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 23-11-2021

Tag : Baby-care |

குழந்தைக்கு வாழைப்பழம் கொடுக்க நினைப்பவர்கள் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்ற காரணத்தினால் வாழைப்பழத்தை தவிர்ப்பார்கள். அனால் எட்டாவது மாதத்தில் இருந்து வாழைப்பழத்தை தாராளமாக கொடுக்கலாம். செவ்வாழையை கொடுப்பதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் குழந்தைக்கு சென்றடையும். ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கும், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ ,பொட்டாசியம் என செவ்வாழையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளன குழந்தைக்கு இதனை கொடுக்க நினைப்பவர்கள் தாராளமாக கொடுக்கலாம். செவ்வாழையின் தோல்களை நீக்கி இரண்டாக வெட்டி நடுவில் உள்ள விதைகளை நீக்கி விட்டு இரண்டாக வெட்டி கையில் பிசைந்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கையில் பிசைந்து கொடுப்பதைவிட மிக்ஸியில் அடித்து கொடுப்பதனால் குழந்தைகள் அதன் முழு சுவையை ரசித்து உண்ணத் தொடங்கும். செவ்வாழையுடன் அவுல் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம். அவுலை இரண்டு தேக்கரண்டி தண்ணீரில் கழுவி விட்டு 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 10 15 நிமிடம் வேகவைத்து நன்கு வெந்ததும் அதனை செவ்வாழை உடன் சேர்த்து அரைத்து கொடுக்கலாம் பழத்தில் உள்ள இனிப்பு சுவையை குழந்தைக்கு போதும் சர்க்கரை சேர்த்து கூடாது. நேந்திர பழம் செவ்வாழை பதிலாகும் கொடுக்கலாம் நேந்திரம் பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. இதேபோன்று நேந்திரம் பழத்தை ஒரு இட்லி பாத்திரத்தில் இரண்டாக வெட்டி பத்து பதினைந்து நிமிடம் இட்லி பாத்திரத்தில் வேக வைத்து பின் அதனை எடுத்து அவுலுடன் சேர்த்து அரைத்து கொடுக்கலாம். குழந்தைக்கு கண்பார்வை பிரச்சனை எதுவும் வராமல் செவ்வாழைப் பழம் மற்றும் நேந்திரம்பழம் கண்ணைப் பாதுகாக்கும் மற்றும் உடலின் வெளிப்புறத்தில் அழகைக் கூட்டும். குழந்தைக்கு எடை கூடவில்லை என்று நினைப்பவர்கள் செவ்வாழை மற்றும் நேந்திரம் பழத்தை இவ்வாறு கொடுப்பதன் மூலம் குழந்தையின் எடை அதிகரிக்கும். மதிய வேளையில் கொடுப்பது நல்லது. குழந்தைக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையும் பழத்தை கொடுப்பதன் மூலம் சரியாகிவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 13-11-2021

Tag : Baby-care |

கேரட் குழந்தைகளுக்கு முழுவதும் அதிக ஊட்டச் சத்து நார்ச்சத்து வைட்டமின்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவுப் பொருளாகும். குழந்தைக்கு அடிக்கடி கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு ரத்த உற்பத்தி அதிகரிக்கும் கண்களில் ஏற்படும் பிரச்சனை குறைய ஆரம்பிக்கும் எலும்புகள் வலுவாகும் இதனை தொடர்ந்து குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து அரைத்து கொடுக்கலாம். இதில் நார்ச்சத்து ,விட்டமின் ஏ ,பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் உருளைக்கிழங்கு தனியாக சாப்பிட விரும்புவதில்லை உருளைக்கிழங்கை கேரட்டுடன் சேர்த்து கொடுக்கும்போது கேரட் இனிப்பு சுவை உருளைக்கிழங்கில் கலப்பதால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிடும். குழந்தைக்கு தோல் பளபளப்பாக மாற ஆரம்பிக்கும். 7வது மாதத்தில் இருந்து குழந்தைக்கு கேரட் மற்றும் உருளைகிழங்கு கொடுக்க ஆரம்பிக்கலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> செய்முறை: கேரட்டை மிகச்சிறியதாக எடுத்துக்கொள்ளவும் உருளைக்கிழங்கு அதற்கு ஏற்றவாறு ஒரு சிறிய தாக மட்டும் எடுத்துக்கொள்ளவும் நன்றாக மண் போகும் வரை கழுவி விட்டு ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு கேரட் மற்றும் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து சிறிதளவு மட்டுமே உப்பை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் உருளைக்கிழங்கு கேரட்டை நன்றாக வெந்தவுடன் இறக்கி வைக்கவும். இவ்வாறு வேக வைக்க முடியாதவர்கள் இட்லி பாத்திரத்தில் கேரட் மற்றும் உருளைகிழங்கு இரண்டாக வெட்டி இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும். கேரட் கையில் மசித்து உருளைக்கிழங்கின் தோலை உரித்து கையில் மசித்து இரண்டையும் ஒன்றாக சேர்த்து குழந்தைக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம் அல்லது மிக்ஸியில் அரைத்து பசைபோல் குழந்தைக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தை நன்றாக விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும். குழந்தைக்கு உருளைக்கிழங்கு அடிக்கடி கொடுக்க வேண்டும் இவ்வாறு கொடுத்ததன் மூலம் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும். குழந்தை முதலில் சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார்கள் அதனால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து மட்டுமே பழக வேண்டும்.குழந்தையின் வயிறு மிக சிறியதாக இருப்பதால் ஜீரண சக்தி மிக குறைவாக இருக்கும் குழந்தைக்கு 7 8வது மாதத்தில் மிகச் சிறிய அளவில் மட்டுமே உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை கொடுப்பது மிகவும் நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 13-11-2021

Tag : Baby-care |

குழந்தையின் முதல் மாதம் முதல் 12 மாதம் வரை கொடுக்க வேண்டிய உணவுகளை காண்போம், தாய்மார்களுக்கு குழந்தைக்கு என்ன உணவு முதல் மாதத்தில் இருந்து 12 மாதம் வரை கொடுக்க வேண்டும் என்பது குழபத்திலேயே இருக்கும். பவுடர் பால், பாக்கெட் பால், பசும்பால் இவற்றை முதல் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும் பால் சுத்தமாக வரவில்லை என்று தவிர்க்கும் தாய்மார்கள் மருத்துவரிடம் அணுகிப் பவுடர் பால் கொடுப்பது நலம். ஆறு மாதத்திற்கு பசும்பால் தவிர்ப்பது நம் குழந்தைக்கு நல்லது. பசும் பால் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். குழந்தையின் ஜீரண பாதையினால் அதனை செரிக்க வைக்க முடியாமல் உபாதைகள் ஏற்படும். மேலும் சளி பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது. முதல் மாதத்தில் தாய்மார்களுக்கு சீம்பால் அதிக அளவில் சுரக்கும் இதை குழந்தை சப்பிக் குடிப்பதைத் தவிர்க்கும் சப்பி குடிக்க வில்லை என்றாலும் தாய்மார்கள் ஒரு டம்ளரில் எடுத்து குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். சீம்பால் ஒரு மாதத்திற்கு மேல் தாய்மார்களுக்கு வராது சீம்பால் கண்டிப்பாக குழந்தைக்கு தவறாமல் கொடுக்கவேண்டும் இது குழந்தையின் மிக முக்கியமான உணவாகும். குழந்தையின் எதிர்ப்பு சக்திக்கு சீம்பால் முக்கியமாகும் . <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.தாய்ப்பாலில் அதிகமான சத்து மற்றும் நீர் தேவையான அளவு உள்ளது ஆறு மாதத்திற்கு தண்ணீர் குழந்தைக்கு கொடுக்க தேவையில்லை. 6 முதல் 8 மாதம் வரை கொடுக்க வேண்டியவை , ஆறு மாதம் தொடக்கத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கலாம் அது காலை மற்றும் மதிய மட்டுமே கொடுக்க வேண்டும் மாலை நேரத்தில் இரவு நேரத்தில் கொடுப்பதை தவிர்த்து விடவும். ஆறு மாத தொடக்கத்தில் குழந்தைக்கு ராகி கூழ், அரிசிக்கஞ்சி, சத்துமாவு, வேகவைத்த கேரட் இவற்றை 6 முதல் 8 மாத காலம் வரை கொடுக்கவும். ராகி கூழ் அரிசி கஞ்சி சத்துமாவு இவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கும்பொழுது தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும் அது குழந்தைக்கு சேரவில்லை என்றால் வயிற்றுப்போக்கு ஏதேனும் உடல் உபாதை ஏற்படும் இதனை தவிர்க்கவும் அல்லது மருத்துவரிடம் கூறி விட்டு கொடுக்கவும். மூன்று நாட்கள் கழித்து இந்த உணவுகளை கொடுப்பதனாள் குழந்தைக்கு ஏதும் பிரச்சினை ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து தாராளமாகக் கொடுக்கலாம். குழந்தைக்கு செரிமானம் வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும். இதைக் கொடுக்க வேண்டும் என்று அறிந்த பின்னரே உரிய காலத்திற்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். எட்டாவது மாதத்தில் வேகவைத்த கேரட், பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ,உருளைக்கிழங்குஆகியவற்றை சூப்பாகவும் குடுக்கலாம் அல்லது வேகவைத்து மசித்து குழந்தைக்கு உணவாகக் கொடுக்கலாம். கேரட் பீட்ரூட் சக்கரவள்ளி கிழங்கு ஏதேனும் ஒன்றை எப்பொழுது சாப்பிட ஆரம்பிக்கும் போதும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும் சேரவில்லை என்றால் அதனைத் தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஆப்பிள் வாழைப்பழம் குழந்தைக்கு கொடுக்கலாம் ஆப்பிளை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து ஆப்பிளின் தோலை உரித்து விட்டு மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஆப்பிள் தோலானது ஜீரணம் ஆகாது. வாழைப்பழம் குழந்தை சாப்பிடவில்லை என்றால் மிக்ஸியில் நன்கு அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஒன்பதாவது மாதத்தில் முட்டையின் மஞ்சள் கரு ,பருப்பு சாப்பாடு, ரசம் சாப்பாடு, பால் சாப்பாடு போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம் இவை அனைத்தும் நன்றாக வேக வைத்து மசித்து கொடுக்க வேண்டும் பெரியவர்கள் சாப்பிடும் அளவில் இருக்கக்கூடாது. இட்லி சாப்பிடத் தரலாம். குழந்தைக்கு பழச்சாறு கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆரஞ்சு மாதுளை ஆப்பிள் பழச்சாறு கொடுக்க ஆரம்பிக்கலாம். குளிர் ,மழை காலத்தில் பருவங்கள் மாறும் நிலையில் குழந்தைக்கு சளி காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் இந்த காலத்தில் பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது. பத்தாவது மாதம் முதல் 12வது மாதம் வரை பத்தாவது மாதத்தில் இருந்து மீன் ஈரல் ஆட்டுக்கால் சூப் , ஆட்டுக் கறி சூப் இவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம். நெய் சாப்பாடு கொடுக்கலாம். ஒன்பது மாதம் முதல் 12 மாதம் வரை அனைத்தும் உணவுகளையும் காலை மதியம் மாலை போன்ற நேரங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும் இரவுநேரத்தில் திட உணவுகளை கொடுக்கக்கூடாது இது குழந்தையின் செரிமானத்தை பாதித்து வயிற்று வலி ஏற்படுத்தி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடும் இரவில் திட உணவுகளை தவிர்ப்பது நலம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-09-2021