pregnancy-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி

முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி

கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் குறைவாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் மேலும் குறை பிரசவம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.மருந்து மாத்திரை சாப்பிடும் ரத்தம் அதிகரிக்க வில்லையென்றால் அப்பொழுது இதை விடாமல் சாப்பிட்டு வந்தால் தாய் சேய் நலமாக இருப்பார்கள். சீக்கிரமாக உடம்பில் ஒரே வாரத்தில் இரத்தம் அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்: 1.சின்ன வெங்காயம் 7 2.சீரகம் -1 தேக்கரண்டி 3.பூண்டு -5 பற்கள் 4.மஞ்சள்தூள்- தேவையான அளவு 5.முருங்கைக்கீரை -4.5 கொத்து 6.தக்காளி-1 7.மிளகுத்தூள்- கால் தேக்கரண்டி 8.அரிசி தண்ணீர் முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளவும்.பிறகு அரிசி ஊற வைத்து இரண்டாவதாக கழுவி எடுத்து தண்ணீரை ஊற்றவும். அதில் மஞ்சள் தூள் மிளகுத்தூள் போடவும். சீரகத்தை லேசாக வறுத்து அதை மிளகுத் தூளுக்கு பிறகு சேர்க்கவும்.ஒரு தக்காளியை எடுத்து நான்காக நறுக்கி இந்த சூப்பில் சேர்க்கவும் பின்பு தோலுரித்து சிறு வெங்காயத்தை வெட்டாமல் அப்படியே சூப்பில் சேர்க்கவும். பிறகு பூண்டு தோல் உரித்து நசுக்கிப் சேர்க்கவும். கடைசியாக முருங்கைக்கீரையை சேர்க்கவும் தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கொதித்த உடன் இறக்கி வைக்கவும். இந்த சூப்பை வாரத்தில் 4 முறை குடிப்பதால் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இதை குடிப்பது அவசியம் அவர்களுக்கும் குழந்தைக்கும் ரத்தம் அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் மிகவும் உதவியாக இருக்கும்.




முதல் மாத கர்ப்பத்தில் மாதவிடாய் தள்ளி போனாலும் ஒரு சிலரால் டெஸ்டர் மூலம் கண்டறிய முடியாது ஐந்தாவது வாரம் அல்லது 40 வது நாட்களில் டெஸ்டர் மூலம் டெஸ்ட் செய்வதன் மூலம் கர்ப்பமாக உள்ளதை அறிவீர்கள்.குழந்தை உங்கள் வயிற்றினுள் இரண்டாவது மாதத்தில் ஒரு சிறு கம்பு (சாப்பிடும் கம்பு) அளவில் மட்டுமே இருப்பார்கள்.இந்த சமயத்தில் குழந்தைக்கு இதயம் வளர்ச்சியை தொடர்ந்து பெருங்குடல் சிறுகுடல் நுரையீரல் உருவாக ஆரம்பித்திருக்கும். இரண்டாவது மாதத்தில் குழந்தை உருவமற்று காணப்படும் இந்த நேரத்தில்தான் குழந்தைக்கு நெஞ்சு பகுதி வயிறு பகுதி தனித்தனியாக பிரிந்து குழந்தைக்கு தலைப்பகுதி என திரிந்து உடலமைப்பு பெறுகின்றது.இரண்டாவது மாதத்தில் மருத்துவரிடம் செல்லும் போது 7 அல்லது 8 வாரத்தில் இயர்லி பிரக்னன்சி ஸ்கேன் செய்யப்படும் இது குழந்தையின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பதையும் குழந்தையின் இதயத்துடிப்பு தாயின் கர்ப்பப் பையின் அளவு கருவின் அளவு எல்லாம் கணக்கிடப்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> <h2 class="backlink sub_heading">இரண்டாவது மாதத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:</h2> <p class="patthi">1.இரண்டாவது மாதத்தில் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அதில் ஒன்று மார்பக மாற்றம் இது உணர்ச்சி அதிகமாகும், மார்பு லேசாகவும் பாலின் உற்பத்தியாக மார்பு பெரியதாகவும் மாற்றம் ஏற்படும். 2.இரண்டாவது மாதத்தில் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களுக்கு உடல் சோர்வு இருக்காது வாந்தி மயக்கம் இருக்காது அவர்கள் எப்பயும் போல இருப்பார்கள். 3.இரண்டாவது மாத கர்ப்பிணி பெண்களுக்கு உடல் சோர்வு, முதுகு வலி, அடிவயிற்று வலி, கால் வலி, மனமாற்றம், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.</p> <h2 class="backlink sub_heading">இரண்டாவது மாதத்தில் கர்ப்பிணி பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை: </h2> <p class="patthi">1.குழந்தைக்கு பனிக்குட நீரின் மூலமே தேவையான உணவு சத்துக்கள் குழந்தைக்கு சென்றடையும்.பனி குட நீர் குறையாமல் இருக்க தண்ணீர் குடிப்பதை கட்டாயமாக எடுத்துக் கொள்ளுங்கள். 2.காய்கறி பழங்கள் விட்டமின் நிறைந்த உணவுகள் சத்துள்ள பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். 3.டீ காபி முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் குழந்தையின் வளர்ச்சியை இது முற்றிலுமாக தடுக்கிறது. 4.ஒரு சில பெண்கள் புகைப்பிடிப்பார்கள் அத்தகையோர் புகைப்பிடித்தலை கர்ப்பமாக இருக்கும்போது தவிர்த்திடுங்கள். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 5.கால் வலி இடுப்பு வலி இருப்பவர்கள் சுடுதண்ணீர் சூடாகவோ முதுகிலும் இடுப்பிலும் ஊற்றுவதை தவிர்க்கவும் இது குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். 6.முதல் மாதத்தில் இருந்து நான்காவது மாதம் வரைக்கும் மிகவும் கவனமாக பெண்கள் கடக்கவேண்டும்.அதிக பளு உள்ள பொருட்களை தூக்குவதாலும், வேகமாக நடப்பது அதிகமாக வீட்டு வேலை செய்வது இந்த காரணத்தினால் நஞ்சுக்கொடி கீழே இறங்கி கற்பப்பை வாயை அடைத்து குழந்தை சுகப்பிரசவத்தில் பிறப்பது கடினமாகி ஆபரேஷனுக்கு வழி வகுத்து விடும்.5 அல்லது 6 மாதத்திற்கு மேல் எல்ல வேலைகளையும் உடலுக்கு ஏற்றவாறு செய்வது நலம். 7.மதுபானங்களை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.இந்த பழக்கத்தால் கர்ப்பம் களைய அதிக வாய்ப்பு உள்ளது. 8. மன அமைதியுடன் சிறு யோகா சிறு நடை பயிற்சி சத்தான உணவுகள் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம் இது குழந்தையின் வளர்ச்சியை அதிகரிக்கும். 9. கால்சியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவும் இது குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். 10.ஹீமோகுளோபின் அதிகரிக்க ரத்தம் சுரக்கும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும் கற்பம் அடைந்த நாள் முதல் பிரசவம் வரையிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அளவு இரத்தம் இருந்தே ஆகவேண்டும்.</p> <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 26-04-2021
கர்ப்பிணி பெண்கள் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்க மற்றும் ரத்தம் அதிகரிக்க குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்க புரோட்டின் பவுடர் மற்றும் கால்சியம் மாத்திரை பரிந்துரை செய்வார் இதனை கர்ப்பிணி பெண் கட்டாயம் சாப்பிட வேண்டும்.முதல் மாதம் இரண்டு மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பமாக இருப்பதை சில கர்ப்பிணிப் பெண்கள் உணர முடியாது ஆனால் சில பெண்களுக்கு உடல் சோர்வு கால் வீக்கம் வாந்தி மயக்கம் குமட்டல் இவை இருக்கும்.பயப்படத் தேவையில்லை கர்ப்பிணி பெண்கள் நான்காவது மாதம் கடக்கும் நேரத்தில் வாந்தி குமட்டல் மயக்கம் இவை அனைத்தும் சரியாகிவிடும் சில பெண்களுக்கு இவை தொடரும். உங்க கருவில் இரண்டாவது மாதத்தில் உங்களுக்கு அருகில் உள்ள குழந்தையின் அளவு ஒரு கருப்பு திராட்சை அளவில் மட்டுமே இருக்கும்.குழந்தை வயிற்றில் கைகால்கள் இருந்தாலும் வால் போன்று இடுப்புக் கீழ் பகுதியில் குழந்தைகளுக்கு இருக்கும் அது குழந்தை வளர வளர வால் போகிவிடும். உங்களது கர்ப்ப காலத்தில் உங்கள் மனநிலை மாறுபடும் ஒருவர் மிக சந்தோஷமாக இருப்பார் சில கர்ப்பிணி பெண்கள் எதர்க்கும் சட்டென்று கோபப்படுவார்கள். மன நிலை மாற்றத்தால் சில கர்ப்பிணிப் பெண்கள் அவதிப்படுவார்கள். முதல் மூன்று மாதம் கர்ப்பிணி பெண்கள் கண்டதை சாப்பிடாமல் உடலுக்கு தேவையான சத்து நிறைந்த பழங்கள் ,காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி சாப்பிடுவது நல்லது இவை சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கும் தாய்க்கும் ஊட்டச்சத்து குறையாமல் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். முதல் மூன்று மாதம் அதிக தூரப் பயணம் தவிர்ப்பது நல்லது காரணம் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> யோகா உடற்பயி்ற்சி முதல் மூன்று மாதங்கள் தவிர்ப்பது நல்லது. முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு உறங்கும் முறை உணவு முறை அனைத்து மாறுபடும் இது உங்க மனநிலையும் மாற்றும். கர்ப்பப்பை வளர வளர உடம்பில் மாற்றங்கள் ஏற்படும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும் இதனால் பயப்படத்தேவையில்லை. கர்ப்பப்பை வளருவதால் இடுப்பு வலி தசை பிடிப்பு ஏற்படும் இதனால் கர்ப்பிணி பெண்கள் உறங்க சிரமப்படுவீர்கள். மனநிலையை ஒரே மாதிரி வைத்திருக்க பழகுங்கள். கிடைக்கும் நேரத்தில் உறக்கம் வந்தால் தவிர்க்காமல் தூக்கம் வரும் பொழுது கர்ப்பிணி பெண்கள் தூங்குவது மிகவும் நல்லது குழந்தைக்கும் தாய்க்கும். வாந்தி மயக்கம் ஏற்படுகிறது என்றால் உணவை சிறு சிறு இடைவெளியில் உட்கொள்ளவும் அதிகமாக உட்கொண்டால் உறங்குவதற்கும் சிரமப்படுவீர்கள் வாந்தி வருவது போன்று எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> இதனால் வாந்தி மயக்கம் இருப்பவர்கள் சிறு சிறு இடைவெளியில் வாந்தி எடுத்தாலும் வாந்தி எடுத்த பின்பு உணவை உட்கொள்ள வேண்டும்.முதல் மூன்று மாதங்களில் இருந்து கர்ப்பிணி பெண்கள் இறுக்கமான துணியை வயிற்றின் அடி பகுதியில் மற்றும் தொப்புளில் அணிவதை தவிர்த்திடுங்கள். தண்ணீரை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் இது பனிக்குட நீர் குறையாமல் பாதுகாக்கும் கர்ப்பமாக இருப்பதால் பெண்கள் இரண்டாவது மாதத்தில் இருந்தே செரிமான பிரச்சனை வாயுக் கோளாறு ஏற்படும். வாயு அடிக்கடி வெளியேறும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும்போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் ஜீரணம் ஆகவில்லை என்றால் வாந்தி உடனே ஏற்படும் உடல் சோர்வடைந்து விடும் நன்றாக மென்று சாப்பிடவும். முதல் மூன்று மாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க வேண்டாம். சில கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாவது மாதம் முடியும்போது குழந்தை அசைவுகள் தெரியக்கூடும். ஆனால் குழந்தை அசைவு சில கர்ப்பிணி பெண்களால் மூன்றாவது மாதம் முடியும் முன்பு உணர முடியும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 23-04-2021
உங்கள் முதல் மாதத்தில் கர்ப்ப காலத்தில் கர்ப்பப் பையினுள் ஒரு கருமுட்டை மட்டுமே இருக்கும். குழந்தையின் கரு முட்டை உங்கள் கையில் உள்ள சிறு மச்சத்தின் அளவில் மட்டுமே இருக்கும். இதனால் முதல் மூன்று மாதங்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவும் பாத்திரமாகவும் இருக்க வேண்டிய நேரமாகும். ஒரு சில கர்ப்பிணி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற வயிற்றுவலி கருமுட்டை வளர்ச்சியின் போது இருக்கும்.கர்ப்பம் அடைந்ததை அறிந்த பிறகும் அடிவயிற்றில் வலி இருந்தால் உடனே மருத்துவரைச் சென்று பார்க்கவும்.சிறுநீரகத்தில் அதிகமாக தொற்று இருந்தால் அடிவயிற்றில் வலி ஏற்படும். உங்கள் முதல் மாதத்தில் டெஸ்டர் மூலம் மட்டுமே நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறியமுடியும்.கர்ப்பம் அடைந்ததை அறிந்தவுடன் மருத்துவரை சென்று பார்ப்பது மிகவும் அவசியம். அதிக தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். முதல் மாதத்தில் வாந்தி மயக்கம் குறைவாக இருக்கும் ஒரு சிலருக்கு அதிகமாக இருக்கும் ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் இரண்டாவது மாதத்திலிருந்து மட்டுமே துவங்க ஆரம்பிக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> மருத்துவர் உங்கள் உடல்நிலையைப் பரிசோதிக்க சிறுநீரக மற்றும் ரத்த பரிசோதனை பரிந்துரை செய்வார்கள் சிறுநீரகத்தில் ஏதாவது தொற்று இருந்தால் அதற்கு மருந்துகள் கொடுக்கப்படும் அதை தவறாமல் உண்பது அவசியம் இது கருவின் வளர்ச்சி மற்றும் கருவை பாதுகாக்கும். முதல் மாதத்தில் இருந்து இரும்புச் சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுப்பார். அவர்கள் அதை உட்கொள்வது அவசியம் இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாயின் உடல்நிலையில் உபாதைகளை சரி செய்யும். புரோட்டின் பவுடர் மருத்துவர் இதனை பரிந்துரை செய்வார் இதனை தவறாமல் தினமும் பாலில் கலந்து குடிப்பது அவசியம் இது குழந்தையின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்க உதவும்.உங்கள் முதல் மாதத்திலிருந்தே உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பழங்கள் காய்கறிகள் இரும்பு சத்து நிறைந்த உணவுகள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.யோகா செய்வது சிறந்த மன அமைதியை உங்களுக்கு தரும். இச்சமயத்தில் மோர் இளநீர் தண்ணீர் பழச்சாறு அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். வாந்தி மயக்கம் இருப்பவர்கள் தண்ணீர் குடிக்க இயலவில்லை என்றால் மோர் இளநீர் பழச்சாறு அதிகமாக உட்கொள்வதன் மூலம் பனிக்குட நீர் அதிகரிக்கவும் சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும்.அதிக தண்ணீர் பருகுவதை நாம் சிறுநீர் கழிக்கும் போது அதன் வழியாக தொற்று வெளியேறிவிடும் இதனால் அதிக தண்ணீர் குடித்தால் சிறுநீர் தோற்றத்தில் இருந்து விடுபடலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 22-04-2021
1.சோடா, என்னை பொருட்கள், இவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும் இவை கர்ப்பம் கலைய வழிவகுக்கிறது. 2.முதல் மாதத்தில் கர்ப்பிணி பெண் படிக்கட்டுகளை வேகமாக ஏறக்கூடாது மற்றும் ஓடி வரக்கூடாது. 3.உடற்பயிற்சி மற்றும் வெகுதூர நடைப்பயிற்சி போன்றவற்றை செய்யக் கூடாது. 4..4.பப்பாளி, மீன் ,கோழி, கத்திரிக்காய் இந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் இது கர்ப்பம் கலைய வழிவகுக்கிறது. 5.புளிக்குழம்பு புளிசாதம் போன்ற புளிப்பு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும் உடலில் இரத்தத்தின் அளவை குறைத்து உடல்சூட்டை அதிகமாக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 6.நெடுந்தூரப் பயணம் தவிர்க்கவும். 7.இருசக்கர வாகனங்களில் இரண்டு பக்க கால்களை போட்டு உட்காரக்கூடாது. 8.தொப்புளுக்கு கீழ் பாவாடை அல்லது வேறு துணிகளை இறுக்கமாக கட்டுவதைத் தவிர்க்கவும். 9.எண்ணைக்குளியல் இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது இது உடல் சூட்டை ஏற்படுத்தி கருவின் வளர்ச்சியை தடுக்கும் அல்லது கரு கலைந்துவிடும். 10.எள் மற்றும்நல்லெண்ணெய் சாப்பிடுவதை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது இது சாப்பிடும் பொழுது கரு கலைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 22-04-2021
கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப கால வாரம் மற்றும் மாதம் கணக்கிடும் முறை கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய கற்ப காலத்தில் மாதம் வாரம் எப்படி அறிந்து கொள்வது என்பது தெரியாது. கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய கடைசி மாதவிடாய் நாட்களை அதாவது கடைசியாக மாதவிடாய் அடைந்த முதல் தேதியை அந்த மாதத்தையும் சேர்த்து கர்ப்பகாலம் எத்தனாவது மாதம் என்பதை கணக்கிடலாம். அவங்களுக்கு மாதவிடாய் தொடங்கி 14 நாட்களுக்குள் கரு முட்டை முழுமையாக வளர்ச்சி அடைந்து வரும். அதுவே உங்களது முதல் மற்றும் இரண்டாவது வாரம் ஆகும். நீங்கள் கர்ப்பமானது முதல் எப்பொழுது கடைசியாக மாதவிடாய் அடைந்தீர்களோ அந்த மாதமே உங்களது முதல் மாதம். கர்ப்பிணி பெண்களுக்கு கற்பகாலம் 280 நாட்கள் ஆகும் ஒன்பது மாதம் பத்தாவது மாதம் தொடங்கிய ஒரு வாரத்தில் பிரசவம் நடந்துவிடும். கர்ப்ப கால அட்டவணை இது உங்களது வாரம் மாதம் பிரித்து பார்க்க எளிமையாக இருக்கும். கர்ப்ப காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம் 1st ட்ரிம்ஸ்ட்டர் (trimester)- month(1,2,3) 2nd ட்ரிம்ஸ்ட்டர் (trimester)- month(4,5,6) 3rd ட்ரிம்ஸ்ட்டர் (trimester)- month(7,8,9) <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ட்ரிம்ஸ்ட்டர் என்பது ஒரு ஆண்டை மும்மூன்று மாதங்களாக பிரித்துக் காட்டுவது. ட்ரிம்ஸ்ட்டர் அர்த்தம் மூன்று மாதங்கள். 1st ட்ரிம்ஸ்ட்டர்: மாதம்(1,2,3) வாரம்(1-13) முதல் மாதம் (1st month) = வாரம் 1-4 இரண்டாவது மாதம்(2nd month) = வாரம் 5-8 மூன்றாவது மாதம்(3rd month) = வாரம் 9-13 2nd ட்ரிம்ஸ்ட்டர்: மாதம்(4,5,6) வாரம் (14-26) நான்காவது மாதம் (4th month) = வாரம் 14-17 ஐந்தாவது மாதம் (5th month) = வாரம் 18-21 ஆறாவது மாதம் (6th month) = வாரம் 22-26 <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 3rd ட்ரிம்ஸ்ட்டர்: மாதம் (7,8,9) வாரம்(27-40) ஏழாவது மாதம் (7 month) = வாரம் 27-30 எட்டாவது மாதம் (8 month) = வாரம் 31-35 ஒன்பதாவது மாதம் (9 month) = வாரம் 36-40 முதல் மூன்று மாத கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான காலமாகும் இதில் கரு வளர்ந்து 1.0g எடை மற்றும் உயரத்தைக் கொண்டிருக்கும் முதல் மூன்று மாதம் முடியும்போது ஒரு எலுமிச்சம்பழம் அளவில் மட்டுமே குழந்தை வயிற்றில் இருக்கும். சில கர்ப்பிணி பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போகும் ஒரு மாதம் இரண்டு மாதம் தள்ளிப் போகும் அப்படி ஆகும் பெண்களுக்கு சரியாக கர்ப்ப காலத்தை கணக்கிடுவது கடினம் ஆகும் அவர்கள் வயிற்றினுள் இருக்கும் குழந்தைக்கு முதன்முதலில் செய்யும் ஸ்கேனில் அவர்களுக்கு எத்தனாவது வாரம் மாதம் பிரசவ தேதி அனைத்தும் பரிந்துரைக்கப்படும். அதுவே அவர்களின் பிரசவ தேதியும் ஆகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 31-03-2021
கர்ப்ப காலத்தில் பெண்கள் அவதிப்படும் வேதனைகளில் இதுவும் ஒன்று தோல் அரிப்பு.உடலில் ஹார்மோன் மாறுபாடு ஏற்படுவதனால் இந்த மாதிரி அரிப்பு ஏற்படுவது சகஜமாகும். தோல் அரிப்பு என்றால் இடுப்பு பகுதியை சுற்றி மட்டும் இல்லாமல் உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்படும், காரணம் குழந்தை வளர வளர கர்ப்ப காலத்திற்கு ஏற்ப நமது உடலானது மாற்றமடையும். இடுப்பில் உள்ள எலும்புகள் விரிவடையும் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தோல்கள் விரிவடைய தொடங்கும் குழந்தை வளர வளர வயிறானது விரிவடைய தொடங்கும்போது அரிப்பு ஏற்படும் பிறகு அந்த இடமானது வெள்ளைத் தழும்புகளாக மாறும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கர்ப்பிணி பெண்களுக்கு இது பொதுவான பிரச்சினைகள் தான் இதற்கு ஒரு சரியான வழி கற்றாலையில் உள்ள ஜெல்லை எடுத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் மசாஜ் போன்று செய்வதனால் அரிப்பு நீங்கும். கற்றாழை பயன்படுத்துவதற்கு முன் கற்றாழையில் உள்ள முட்களை நீக்கி உள்ளே உள்ள வெள்ளை நிற ஜெல்லை மட்டும் எடுத்து உடம்பில் தேய்க்கவும். அரிப்பு ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே செய்யப்படும் வழிகள்: இரவு கர்ப்பிணி பெண்கள் தூங்கு செல்லும்முன் வயிற்றின் மேற்பரப்பில் விளக்கெண்ணையை ஊற்றி சிறிது மசாஜ் செய்வதினால் வயிறு விரிவடைய ஏற்படும் அரிப்பையும் தழும்பையும் தடுக்கலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 26-03-2021
சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும்: சுகப்பிரசவம் இந்த காலத்துல சுகப்பிரசவம் என்பது ஒரு அரிதான விஷயமா பார்க்கப்படுகிறது யாரை கேட்டாலும் சிசேரியன் அப்படினு மட்டும் தான் சொல்றாங்க சுகப்பிரசவம் ஆகறது இந்த காலத்துல ரொம்ப கடினமான ஒரு விஷயம் ஆச்சு காரணம் அந்த காலத்துல அரைப்பதற்கு மிக்ஸி இல்லாம வீட்டில் இருக்கின்ற அம்மி ஆட்டங்கள் துணி கையிலேயே துவைக்கிறது இதெல்லாம் குழந்தைகள் பிறப்பதற்கு சுகப்பிரசவம் ஆகவும் மிகச் சுலபமாகவும் இருந்தது. சுகப்பிரசவம் என்பது இந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு வரம் தான். சிசேரியன் செய்யும்போது ஒரு பெண்ணுக்கு அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் வலி இல்லாமல் இருக்கும்.பிரசவத்திற்குப் பிறகு காலம் முழுவதும் அந்த பெண்ணிற்கு வலியும் வேதனையும் மட்டும் தான் மீதி இருக்கும் காரணம் சிசேரியன் செய்யும் பெண்களுக்கு அதிகம் முதுகுவலி எதையும் செய்ய முடியாத அளவிற்கு உடலின் உபாதைகள் ஏற்படும். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆகாமல் சிசேரியன் என்றால் அதற்கு காரணம் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே ஏற்படுகிறது.சிசேரியன் ஆகாமல் சுகப்பிரசவம் ஆக என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> தண்ணீர் : ஒரு பெண் கர்ப்ப காலத்தில் ஆரம்பத்தின் முதல் கர்ப்பகால இறுதிவரை உடலுக்குத் தேவையான குழந்தைக்கு தேவையான தண்ணீரை நன்றாக பருக வேண்டும். வாந்தி மயக்கம் இருக்கும் பெண்கள் தண்ணீர் அதிகமாக எடுத்துக்கொள்ள முடியாமல் இருக்கும்.அவர்கள் பழச்சாறு, இளநீர், மோர் இந்த வகையில் பெண்கள் குடிப்பதனால் உடலில் மற்றும் கருப்பையில் உள்ள பனிக்குட நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த மாதிரி நிறைய தண்ணீர் பழச்சாறு மோர் இதனால் குடிப்பதினால் சுகப்பிரசவம் மிகவும் எளிமையானதாக ஒரு பெண்ணிற்கு இருக்கும். நடைப்பயிற்சி: கர்ப்பகாலத்தின் ஆரம்பகாலத்தில் நடைப்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் ஒரு பெண்ணின் ஆறு மாத காலத்தில் இருந்து அல்லது ஏழாவது மாத கர்ப்ப காலத்தில் இருந்து காலையில் ஒரு மணி நேரம் மாலையில் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தாள் குழந்தை தலைகீழாக கர்ப்பவாய் நோக்கி நகரத் தொடங்கி சுகப்பிரசவம் ஆவதற்காக இடுப்பு எலும்புகள் தானாக தயாராகி ஒரு பெண்ணிற்கு எளிமையாக சுகப்பிரசவம் ஆக இந்த நடைபயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் உங்கள் துணையும் அல்லது பெற்றோரும் நண்பரும் உடன் இருக்கையில் மட்டுமே நடைப்பயிற்சி செய்ய வேண்டும் காரணம் வாந்தி மயக்கம் இருப்பவர்கள் இதனை அருகில் ஒருத்தர் இருக்கும் போது மட்டும் நடக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் இறுதி காலத்தில் அதாவது பத்தாவது மாதத்தில் நடை பயிற்சி செய்யும் பொழுது அருகில் ஒரு துணையோடு மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டபின் பத்து நிமிடங்கள் அல்லது 20 நிமிடங்கள் கழித்து நடை பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்யலாம் நடை பயிற்சி செய்யும் பொழுது தண்ணீர் குடிக்கலாம் அதனை கையில் எடுத்துச் செல்வது நலம். உடற்பயிற்சி: சில மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் ஆவதற்கு உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பார்கள் அதை தினமும் தவறாமல் செய்யும் பொழுது இடுப்பு எலும்புகள் சுகப்பிரசவத்துக்கு தயாராகி மிக எளிமையாக சுகப்பிரசவமாகும் அந்த உடற்பயிற்சியை தவறாமல் காலையில் மற்றும் மாலையில் செய்ய வேண்டும் . மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அந்த உடற்பயிற்சி செய்யக் கூடாது குழந்தையின் நிலை மற்றும் உங்கள் உடலின் நிலையை மருத்துவர் அறிந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் மட்டுமே செய்ய வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> மன அமைதி: கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று கர்ப்பகாலத்தில் மன அமைதியும் சந்தோஷமும். மன அமைதியும் மகிழ்ச்சியும் இருந்தாலே கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் இதுவும் சுகப்பிரசவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயம்: கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நாள் நெருங்க நெருங்க மனதில் ஒரு பயம் இருந்தே இருக்கும் அந்த பயத்தை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி விடுங்கள் காரணம் அந்த பயமே உங்களை சுகப் பிரசவத்தில் இருந்து சிசேரியனுக்கு மனதை மாற்றி விடும். உங்கள் குழந்தையை இந்த உலகத்திற்கு வர வைக்கப் போகிறோம் நாம் பார்க்க போகிறோம் அப்படிங்கிற ஒரு எண்ணத்தோடு மட்டுமே காத்துக் கொண்டு இருங்கள். ஒரு பெண்ணிற்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் என்பது உண்மைதான் அதற்காக பயப்படத் தேவையில்லை எல்லா பெண்களும் வாழ்விழும் இதை கடந்து தான் வருகிறார்கள். சிலபேர் அவர்களுடைய கர்ப்ப காலத்தில் நடந்த பிரசவ காலத்தில் நடந்த சில விஷயங்களை கூறும் போது கர்ப்பிணி பெண்களுக்கு பயத்தை ஏற்படுகிறது கேட்டு மட்டும் தெரிந்து கொள்ளலாம் அது தங்களுக்கு நடந்துவிடுமோ என்று பயப்படாமல் இருங்கள். ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு ஒரு மாதிரிதான் பிரசவகாலத்தில் உடல்நலம் பிரசவம் எல்லாம் ஏற்படுகிறது இதனால் எதுவும் பயப்படத் தேவையில்லை. பிரசவ வலி வந்து விட்டாலோ அல்லது பிரசவத்திற்கு முன்னரோ பயப்படாமல் குழந்தை பிறப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் நம்மால் என்ன செய்ய முடிகிறது என்பதை கவனத்துடன் மனம் சிதறாமல் பயப்படாமல் செய்தாலே சுகப்பிரசவமாகும் எளிதாக அமையும். மருத்துவர்கள் பிரசவத்தின் போது என்ன சொல்கிறார்களோ அதை காதில் வாங்கிகொண்டு சரியாக செய்தாலே சுகப்பிரசவமாகும் அந்த நேரத்தில் வரும் வலியை தாங்கிக்கொண்டு காலம் முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> வேலைகள்: கர்ப்பிணி பெண்கள் சில சின்னசின்ன வேலைகளை செய்யலாம் ஏழாவது மாதத்தில் குனிந்து வீட்டைக் கூட்டுவது பாத்திரம் விளக்குவது இது சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவும்.வீட்டைக் கூட்டுவது என்றால் குனிந்து மட்டுமே கூட்ட வேண்டும் நின்ன வாக்கில் கூட்டக் கூடாது. பெரியவர்கள் நிறைய பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் கர்ப்பிணி பெண்கள் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால் மட்டுமே சுகப்பிரசவம் ஆகும் என்பது இது முற்றிலும் உண்மைதான் வீட்டை பெருக்கும் போது பாத்திரத்தைத் துலக்கும் போதும் உங்கள் உடல் மற்றும் இடுப்பில் ஏற்படுகின்ற மாற்றத்தை உணர்வீர்கள் இதுநாள் தோறும் செய்வது சுகப்பிரசவத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். குழந்தை தலை கீழாக கர்ப்பப்பை வாயை நோக்கி மிகவும் சுலபமாக குழந்தையின் தலை திரும்பும். பிரசவ காலம் நெருங்கும் பொழுது அதிகமாக அசைவ உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் இது சுகப்பிரசவத்தை கடினமாகும். கர்ப்பிணி பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து துணிகளும் துவக்க தேவை இல்லை உங்களது உடைகளை தினமும் துவைத்தால் அதுவே உங்களுக்கு சரியான உடற்பயிற்சி ஆகும் இதுவும் உங்களது சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும். கர்ப்ப காலத்தில் உடலுறவு: கர்ப்பிணி பெண்கள் அவர்கள் துணையோடு கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதாள் சுகப்பிரசவம் ஆகுவதற்கு இதுவும் ஒரு வழியாகும். கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் அதனை முதல் மூன்று மாதத்திற்கு செய்யக்கூடாது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு கணவன் மனைவி உடலுறவு கொள்ள வேண்டும். எந்த மாதத்தில் இருந்து உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என மருத்துவர் சொன்ன பின்பே உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் காரணம் கர்ப்பப்பை வாய் திறந்து இருந்திருந்தாலோ அல்லது கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் உபாதைகள் இருந்தாலும் மருத்துவர் இதனை செய்ய வேண்டாம் என்பார்கள் அதனால் அப்பொழுது செய்யக்கூடாது. சுடு தண்ணீர் மற்றும் எண்ணெய்: ஆறுவது மாதத்தில் இருந்து கர்ப்பிணி பெண்கள் இரவு தூளோங்க செல்லும் முன் வயிறின் முன் பகுதியில் விளக்கு எண்ணையை தொப்புளை சுற்றி ஒரு சிறிய மசாஜ் செய்யுது பத்து நிமிடங்கள் களித்து வெது வெது பான சுடுநீரில் குளிக்கவும்.இதனால் இரவில் நன்றாக உறங்க முடியும்.வயிறில் தழும்புகள் வராமல் இருப்பதோடு சுகப்பிரசவத்திற்கு வயிற்று தசைகள் விரிவடையும். இடுப்பு எலும்புகள் விரிவடைய சுகம் பிரசவம் எளிமையாக்க காலை மற்றும் மாலையில் நன்றாக காய வாய்த்த சுடுநீரை இடுப்பு பகுதில் ஊற்றவும்.வயிற்றின் முன் பகுதில் ஊற்ற கூடாது. மேலே கூறிய அனைத்தும் ஒரு கர்ப்பிணிப் பெண் செய்யும்பொழுது சுகப்பிரசவம் என்பது அந்தப் பெண்ணிற்கு ஒரு வரமாக அமையும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 08-03-2021