pregnancy-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai நஞ்சுக்கொடி கீழ் இறக்கம்

நஞ்சுக்கொடி கீழ் இறக்கம்

கர்ப்ப காலத்தில் வயிற்றில் குழந்தை வளர்வது மட்டுமே சிலர் அறிந்திருப்பர் குழந்தையுடன் நஞ்சுக்கொடி தொப்புள்கொடி இவற்றின் பயன் எதுவும் அறியாமல் அதைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் இருப்பார்கள். தாய்மார்கள் கர்ப்பிணி பெண்கள் தொப்புள் கொடியைப் பற்றி அதிகம் கேள்வி பட்டிருப்போம் ஆனால் நஞ்சுக்கொடி பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டோம் நஞ்சுக்கொடி ஏதேனும் பிரச்சனை உள்ளது என்றால் மட்டுமே மருத்துவ நஞ்சுக்கொடி பற்றி தெரிவிப்பார் அப்பொழுது மட்டுமே நஞ்சுக்கொடியினை பற்றி நமக்குத் தெரியும். நஞ்சுக்கொடி கருமுட்டை வளர ஆரம்பிக்கும் போது முட்டையின் ஒரு பக்கமாக நஞ்சுகொடி வளர தொடங்கும். நஞ்சுக்கொடியில் இருந்து தொப்புள் கொடி வளர தொடங்கும். நஞ்சுகொடியின் முக்கிய பங்கு குழந்தைக்கு ஆக்சிஜன் தருவது குழந்தைக்கு தேவையான உணவுகளை ஊட்டச்சத்துகளை தொப்புள்கொடி வழியாக கொடுப்பதே இந்த நஞ்சுக்கொடியின் வேலையாகும். நஞ்சுக்கொடி நன்றாக வளர்ந்து இருக்கும் நிலையில் குழந்தை கருவில் எப்படி உள்ளது என்பதை ஸ்கேன் வழி பரிசோதிக்கப்படும் அப்பொழுது கருவின் அளவு கருப்பையின் வாய் அளவு தொப்புள்கொடி நஞ்சுக்கொடி இவற்றில் நிலைபற்றி ஸ்கேனில் மருத்துவர் பரிசோதிப்பார். அச்சமயத்தில் தொப்புள் கொடியானது கருப்பையின் கீழே அதாவது பிறப்புறுப்பை அடைத்துக்கொண்டு இருந்தால் அல்லது கருப்பையின் கீழே பிறப்புறுப்பில் இருக்கும் ஓரமாக இருந்தால் மருத்துவர் சில ஆலோசனை கூறுவார்கள் அதனைப் பின்பற்றும் சொல்வார்கள். ஒரு சிலருக்கு ஆரம்ப காலத்தில் நஞ்சுக்கொடி கீழ் இருக்கும் பட்சத்தில் பிறப்புறுப்பில் ரத்தக் கசிவு அதிகமாக இருக்கும் அல்லது கர்ப்பத்தின் 4வது மாதம் 5வது மாதத்தில் பிறப்புறுப்பின் வழியே ரத்தக்கசிவு ஏற்படும் இது நஞ்சுக்கொடி கீழ் இருப்பதற்கான அறிகுறியாகும். அப்படி இருந்தால் குழந்தையை பாதிக்குமா என்று கேட்டாள் இதனை சரியாக கவனிக்காமல் இருந்தால் குழந்தையை கண்டிப்பாக பாதிக்கும் குறைப்பிரசவம் கண்டிப்பாக ஏற்படும். அவர் குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வு எடுக்கச் சொல்வார்கள் குழந்தை வளர வளர நஞ்சுக்கொடி ஆனது ஒரு சிலருக்கு நஞ்சுக்கொடி பிறப்புறுப்பை அடைக்காமல் ஒரு பக்கமாக அல்லது மேல்நோக்கி கருப்பையினுள் சென்றுவிடும் இதனால் குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. சிலருக்கு குழந்தை வளர்ந்தாலும் நஞ்சுக்கொடி கீழே இறங்கி அப்படியே காணப்படும். கர்ப்பிணி பெண்கள் நஞ்சுக்கொடி இறங்கி இருக்கிறது என்று கேள்விப்பட்டதுமே ஓய்வு கண்டிப்பாக முக்கியம். துணி துவைத்தல் வெயிட்டான பொருட்களை தூக்குதல் இவற்றை தவிர்க்க வேண்டும் வேகமாக நடத்தல் தவிர்க்க வேண்டும் கீழே உட்கார்ந்து எழுந்திருப்பது தவிர்க்க வேண்டும். அதிகமாக கட்டிலில் படுத்து ஓய்வெடுப்பது குழந்தைக்கும் தாய்க்கும் நல்லது. குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான மருந்துகள் தடுப்பூசிகள் கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் போட்டுக்கொள்ள வேண்டும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நஞ்சுக்கொடி கீழ் இரக்கம் உள்ளவர்கள் எப்பொழுதும் போல சாப்பிடலாம் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம் ஆனால் வேலைகளை செய்யக்கூடாது நஞ்சுக்கொடி இறக்கம் உள்ளவர்கள் பிரசவத்தில் மட்டும் பிரச்சினை ஏற்படும். ஒரு சிலருக்கு நஞ்சுக்கொடி குறிப்பிட்ட காலத்தில் மேலே ஏறி விட்டால் சுகப்பிரசவம் ஆகிவிடும் இல்லை என்றால் அறுவை சிகிச்சை மட்டுமே இதற்குத் தீர்வாகும். அறுவை சிகிச்சை செய்வதினால் மட்டுமே குழந்தையும் தாயும் காப்பாற்ற இயலும். குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை எடுப்பதன் மூலம். நஞ்சுக்கொடி கீழே உள்ளது என்றால் எந்த ஒரு பயமும் இல்லாமல் மருத்துவர் கூறும் ஆலோசனை பின்பற்றினாலே குழந்தைக்கும் தாய்க்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. நஞ்சுக்கொடி கீழ் இருக்கும் உள்ளவர்கள் கை கால் வலி வீக்கம் கால் வீக்கம் வாந்தி மயக்கம் பிரசவ வலி என இருக்கும். பிரசவம் மட்டுமே அறுவை சிகிச்சையின் மூலமே குழந்தையை எடுக்க நேரிடும் இதனால் எந்த ஒரு பயமும் தேவையில்லை. அடிக்கடி ரத்தம் வடிதல் நீர் போன்று கசிதல் போன்றவற்றை இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மருத்துவர் கூறும் ஆலோசனை பின்பற்றாவிட்டால் குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்துவிடும் நுரையீரல் வளர்ச்சி மூளை வளர்ச்சி சரியாக இல்லாமல் குழந்தை ஒரு கிலோ எடையில் 1 கிலோ எடையில் பிறக்க நேரிட்டால் குழந்தை காப்பாற்றுவது மிகவும் கடினமாகிவிடும். இதனால் மருத்துவர் கூறும் ஆலோசனைகள் பின்பற்றுவது மிகவும் முக்கியம் பிரசவ தேதி நெருங்கி வந்தாலும் பிரசவத்திற்கு முன்னர் ஒரு வாரத்திற்கு முன்னரே அது சிகிச்சையின் மூலம் குழந்தையை பெற்றெடுப்பது நல்லது என மருத்துவர் அழைப்பார் இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது




குங்குமப்பூவில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு என பல சத்துக்கள் இந்த குங்குமப்பூவில் உள்ளன . ஒரு கிலோ குங்குமப்பூ தயாரிப்பதற்கு 170000லட்சம் பூக்களில் இருந்து குங்குமப்பூ எடுக்கப்படுகிறது. இதனால்தான் இதன் விலையும் அதிகமாக இருக்கிறது. ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ஆஸ்துமா, இருமல், கக்குவான் இரும்பல், புற்றுநோய் ஆகியவை சரியாகின்றன. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு இடுப்பு வயிறு வலி ஆகியவற்றை சரிசெய்ய இந்த குங்குமப்பூ வலி நிவாரணியாக திகழ்கிறது. அழகு சாதனமாக குங்குமப்பூ திகழ்கிறது.சருமத்தில் ஏற்படும் அரிப்பு புண் தோலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக குங்குமப்பூ திகழ்கிறது.இது அழகு சாதன பொருட்கள் செய்ய உதவுகிறது. குங்குமப்பூ வாசனை மற்றும் நிறமூட்டிகள் இருப்பதால் இவை உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பிரியாணி கேக் என உணவுகளில் இவை சேர்க்கபடுகிறது. இது ஆண்மை குறைவை சரி செய்கிறது. ரத்த சோகை அதிகம் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடுவதனால் ரத்த சோகை குறைகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குங்குமப்பூவின் தீமைகள்: குங்குமப்பூவை தொடர்ந்து சாப்பிடுவதனால் உடலில் பல உபாதைகள் ஏற்படும் சுவாச பிரச்சனை வாந்தி மயக்கம் நரம்பு மண்டல பாதிப்பு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். குங்குமப்பூவை அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும் 10 கிராமுக்கு குறைவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி பயன்படுத்தும் போது மரணத்திற்கு இது அதிக வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இதில் உள்ள கசப்பு தன்மை அதிக நச்சுத்தன்மை கொண்டது. ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக குங்குமப்பூ எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சக்கரை நோயாளிகள் குங்குமப்பூ சாப்பிட வேண்டுமென்றால் மருத்துவரின் ஆலோசனைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் முதல் மாதத்தில் இருந்து சாப்பிடுவதனால் கருசிதைவு கண்டிப்பாக ஏற்படும். மருத்துவரின் ஆலோசனை பெற்று 5 அல்லது 6 மாதத்திற்கு மேல் மட்டுமே கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூவை சாப்பிட வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 30-12-2021
குங்குமப்பூ பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. குங்குமப்பூவில் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் இரும்பு வைட்டமின்கள் b1 b2 b6 b9 ஆன்டி-ஆக்சிடன்ட்கள் பல சத்துக்களை இந்த குங்குமப்பூ கொண்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிடுவதற்கு மிக முக்கியமான காரணம் குழந்தை நிறம் அதிகரிக்க வேண்டும் என்பதே ஆனால் உண்மையில் குழந்தையின் நிறம் குங்குமப்பூ சாப்பிடுவதால் அதிகரிப்பது இல்லை. மிக முக்கியமாக பிரசவத்தின் பொழுது வலி அதிகம் வராமல் இருக்கவும் , சுகப்பிரசவம் ஆகவும் தான் குங்கும பூ கர்ப்ப காலத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. குங்குமப்பூ பல மருத்துவ குணங்கள் கொண்டிருந்தாலும் இவை குழந்தையின் நிறத்தை கர்ப்பிணி பெண் சாப்பிடுவதனால் அதிகரிப்பது இல்லை. கர்ப்பிணி பெண்களுக்கு குங்குமப்பூ சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாகிறது. வாந்தி உணர்வைத் குறைக்கிறது , செரிமான பிரச்சனையை சரி செய்கிறது மன அழுத்தத்தை குறைக்கிறது ரத்த சோகையை சரிசெய்கிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் ஆஸ்துமா உள்ள கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூவை சாப்பிடுவதன் மூலம் இவை அனைத்தும் சரியாகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கண்டிப்பாக கர்ப்பிணி பெண் குங்குமப்பூவை சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு குங்குமப்பூவை சாப்பிட வேண்டும். குங்குமப்பூ ஐந்து அல்லது ஆறு மாதத்திற்கு மேல் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். 10 கிராம் அளவுக்கு குறைவாக மட்டுமே குங்குமப்பூவை சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் உயிர் போகும் அபாயம் கண்டிப்பாக இருக்கும். மேலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கரு சிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம். குங்குமப்பூ டீ அல்லது பாலில் கலந்து சாப்பிடுவது நலம். ரத்த அழுத்தம் குறைவாக உள்ள கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. பாலூட்டும் தாய்மார்கள் குங்குமப் பூவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலியை குறைக்க குங்குமப்பூ உதவுகிறது. மிக சுலபமாக வலி குறைவாக சுகப்பிரசவம் குண்டாவதற்கு குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூ அழகு சாதனமாகவும் வலி நிவாரணியாகவும் உணவு பொருட்களின் மணமூட்டவும் இது உதவுகிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 30-12-2021
பனிக்குட நீர் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது. பனிக்குட நீர், இது குறைந்தால் என்ன செய்வது ஒருவிதமான பதட்டம் மருத்துவர் சொல்லும் பொழுது குழந்தைக்கு ஏதோ ஒன்று ஆகிவிடுமோ என்ற பயத்திலேயே நாள் கழிப்பார். இதற்கான தீர்வு வீட்டில் உள்ள உணவு மூலமே உள்ளது. பனிக்குட நீர் குறைவதற்கு காரணம் தாய், சேய் இரண்டில் ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்குமே ஏதோ ஒரு குறைபாடு பிரச்சினை இருந்தால் பனிக்குட நீர் குறைய ஆரம்பிக்கும் ஏழாவது எட்டாவது மாதத்தில் இது இயல்பான ஒன்றுதான். பனிக்குட நீர் குறைந்தால் அதை சாப்பாட்டின் மூலமே சரிசெய்து விடலாம் பனிக்குட நீர் உடைந்து பிறப்புறுப்பின் வழியாக வெளியேறினால் உடனே மருத்துவரிடம் சென்று விட வேண்டும். மருத்துவர் அவ்வப்போது குழந்தையின் வளர்ச்சி பனிக்குட நீரின் அளவு என பரிசோதிப்பார் அப்பொழுது பனிக்குட நீரின் அளவு குறைந்திருந்தால் மருத்துவர் கூறும் அறிவுரைகள் ஏற்றவாறு கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் நடந்து கொள்ள வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> சிறுநீர் தொற்று கர்ப்பப்பை தொற்று நோய் தொற்று இருந்தால் கண்டிப்பாக பனிக்குட நீர் குறைய ஆரம்பித்துவிடும் குழந்தை பனிக்குட நீர் குடிப்பதனால் பனிக்குட நீர் குறைய ஆரம்பித்துவிடும். வெயில் காலத்தில் உடலிலிருந்து அதிகளவு வியர்வை வெளியேறுவதனால் சிறுநீர் அடிக்கடி கழிப்பது நாளும் வெயில் காலத்தில் கண்டிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு உடனடியாக கட்டாயமாக குறையும். சரியாக தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் வெயில் காலத்தில் விடுவதால் கண்டிப்பாக பனிக்குட நீர் குறைய ஆரம்பித்துவிடும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சரியான உணவு முறையை கையாளாமல் இருப்பது பனிக்குட நீர் குறைய ஆரம்பித்துவிடும். உடம்பில் ஏற்படும் வரி தழும்புகளுக்கு வயிற்றின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் மூலமும் பனிக்குட நீர் கண்டிப்பாக குறையும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> பனிக்குட நீர் குறைவதை எவ்வாறு சரி செய்வது? மருத்துவர் பனிக்குட நீர் குறைவாக உள்ளது என ஏழாவது எட்டாவது மாதத்தில் கூறும் பொழுது சில மருந்துகளை தண்ணீரில் கலக்கி குடிக்க சொல்வார்கள் காலை மற்றும் மாலையில் கண்டிப்பாக அதை குடித்து வருவதன் மூலம் உடலில் தேவையான ஊட்டச்சத்துக்கள் உடன் குழந்தைக்கு பனிக்குட நீர் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.அதிகமாக 2 லிட்டர் அல்லது 3 லிட்டர் தண்ணீரை கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். நீர் சத்து உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணி வெள்ளரிக்காய் சுரைக்காய் முள்ளங்கி காலிபிளவர் கீரை ஸ்ட்ராபெர்ரி ஆரஞ்சு பழம் மாதுளை பழம் பழச்சாறு இளநீர் மோர் ஒன்று நீர்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் இதன் மூலமும் பனிக்குட நீர் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ரசாயனம் மூட்டிய பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது மது குடிப்பவர்கள் கட்டாயம் அருந்த கூடாது. பனிக்குட நீர் 7 மற்றும் 8 வது மாதத்தில் குறைந்தால் கண்டிப்பாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் வீட்டு வேலைகள் செய்வது அதிகமாக உடம்புக்கு வேலை கொடுக்காமல் இருப்பது நல்லது. காலை மற்றும் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடம்பில் தேவையான ஆக்ஸிஜன் ரத்த ஓட்டம் சென்று உடம்பில் பனிக்குட நீர் அதிகரிக்க தூண்டும் இதனால் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். பனிக்குட நீர் குறைந்தால் என்ன ஆகும்? பனிக்குட நீர் குறைந்தால் குழந்தைக்கு உயிருக்கு ஆபத்தாகிவிடும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் செல்லாது மூளை வளர்ச்சி நுரையீரல் வளர்ச்சி அனைத்தும் பாதிக்கப்படும் குறை பிரசவமாகும் இல்லை என்றால் காப்பாற்றுவது கடினம் ஆகிவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> பிரசவ தேதிக்கு முன்னர் அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் பனிக்குட நீர் குறைகிறது என்று மருத்துவர் கூறினால் அது பற்றி பயப்படத் தேவையில்லை காரணம் உடம்பு பிரசவவலிக்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது என்பதே ஆகும். பனிக்குட நீர் உடைந்து அல்லது பனிக்குட நீர் குறைந்து இருந்திருந்தால் மருத்துவர் மருத்துவமனையில் சேர சொல்வார். காரணம் பிரசவ தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் இப்படி பனிக்குட நீர் குறைந்தால் குழந்தை அசைவு ஒரே இடத்தில் நின்று விடும் குழந்தையின் அசைவு குறைவாக இருக்கும் குழந்தை திரும்புவதற்கும் விளையாடுவதற்கும் பனிக்குட நீரை காரணம் அதை குறைந்திருந்தால் குழந்தை இதை எதுவுமே செய்யாமல் அமைதியாக இருக்கும் குழந்தைக்கு இது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். பிரசவத்திற்கு முன்னர் இப்படி பனிக்குட நீர் குறைந்து இருந்தால் கருப்பையின் வளர்ச்சி மற்றும் நஞ்சுக்கொடியின் வேலை இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் தன் வேலையை முடித்து இருக்கும் காரணம் பிரசவத்திற்கு குழந்தை தயாராக உள்ளது என்பதே ஆகும் குழந்தையின் வளர்ச்சி முழுவதுமாக முடிந்திருக்கும். அனைத்தும் இந்த காலகட்டத்தில் சுகப்பிரசவம் ஆவதற்கு அறிகுறியாகும் அதனால் பயப்படத் தேவையில்லை சரியான முறையில் தண்ணீர் அருந்தி கொண்டு மருத்துவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்றினாலே போதும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-12-2021
கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் சரியான கவனிப்பு மற்றும் அதற்கான சரியான வழிமுறை தெரியாத இருப்பதனால் யூரின் இன்பெக்சன் ஏற்பட்டிருந்தாலும் அதனை அப்பொழுது கவனிக்காமல் , வலி அரிப்பு ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு அதன் மீது அதிகம் கவனம் செலுத்துவோம். அதற்கு முன்னர் அதைப் பற்றி தெரியாத பொழுது கவனிக்காமல் விட்டு விடுவோம். கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் யூரின் இன்பெக்சன் ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான் ஆனால் சரியாக கவனிக்காமல் விட்டால் குழந்தையை பாதித்துவிடும். இன்பெக்சன் ஏற்பட்டால் பிறப்புறுப்பில் அரிப்பு வலி ஊசியில் குத்துவது போன்ற வலி, சிறுநீரக பக்கம் அதிகமான அடிவயிற்றில் ஏற்படுவது போன்று வலி போன்ற சில அறிகுறிகள் இருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> மருத்துவரை சென்று பார்க்காமல் வீட்டில் உள்ள பொருட்கள் அல்லது கடைகளில் ஏதேனும் சொல்லி மருந்துகளை வாங்கி உபயோகிக்காமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது. வீட்டிலிருந்தே சரிசெய்ய சிறப்பான வழி அதிகம் தண்ணீர் குடித்து அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். மோர் இளநீர் பழச்சாறு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் சிறுநீர் அடிக்கடி போக நேரிடும் இதனால் இன்ஸ்பெக்சன் படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும். மருத்துவரிடம் கட்டாயம் செல்ல வேண்டும் மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை மட்டுமே பிறப்புறுப்பில் உபயோகிக்க வேண்டும் மற்றும் அரிப்பு அதிகமாக இருந்தால் மாத்திரைகள் மருத்துவர் பரிந்துரைப்பார் மாத்திரைகளை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் கர்ப்பத்தில் உள்ள குழந்தையை பாதிக்காமல் யூரின் ஏற்பட்ட இன்பெக்சன் பிறப்புறுப்பில் ஏற்படும் இன்பெக்சன் படிப்படியாக குறைந்துவிடும். எதனால் யூரின் இன்பெக்ஷன் ஏற்படுகிறது? சரியாக கவனிக்காமல் விடுவது, அழுக்குகள் சேர்வதனால் சிறுநீர் அடக்கி வைப்பதால் ஏற்படுகிறது மேலும் உடலுறவு மேற்கொள்ளும் பொழுது சுத்தம் இல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்வது இதனால் இன்ஃபெக்ஷன் ஏற்படும். சுத்தமில்லாத உள்ளாடைகளை அணிவது கழிப்பறை சுத்தம் இல்லாமல் உபயோகிப்பது கழிப்பறையில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களின் மூலமும் இன்ஃபெக்ஷன் ஏற்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-12-2021
கர்ப்பமான அணைத்து பெண்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் எது என்றால் தன் வயிற்றில் குழந்தை அசைவதை உணருவதேயாகும். இவ்வாரு குழந்தை அசைவை உணருவதன் மூலமும், கணக்கிடுவதன் மூலமும் குழந்தை ஆரோக்கியமாக வளருகிறதா என்பதையும் அறிய முடியும். குழந்தையின் அசைவு முறை மற்றும் எத்தனை முறை அசைகிறது என்பதை தாய் நன்கு அறிந்திருந்து வைத்துக்கொள்ளவேண்டும். குழந்தையின் அசைவில் ஏதேனும் மாற்றம் காணப்பட்டால் அல்லது அசைவற்ற நிலையில் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை சென்று பரிசோதிக்க வேண்டும். குறைந்த அளவில் அசைவு தொடர்ந்து இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> எப்பொழுது குழந்தையின் அசைவை உணர முடியும்? பொதுவாகவே கர்ப்பம் தரித்து பதினெட்டு முதல் இருபது வாரங்களுக்குள் உங்களால் குழந்தையின் அசைவை உணர முடியும். ஒருவேளை இரண்டாவது குழந்தையாக இருந்தால் இன்னும் சிறிது காலத்திற்கு முன்பாகவே அசைவை உணர முடியும். குழந்தை அசைவு எவ்வாறு இருக்கும்? வயிற்றில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வேறு வேறு மாதிரியான வளர்ச்சி இருக்கும். ஒரு சில சிசுக்கள் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும் , சில சிசுக்கள் சற்று சோர்வாக அல்லது அமைதியாக காணப்படும். முதன் முதலில் நீங்கள் உணரும் உணர்ச்சியானது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வை வெளிப்படுத்தும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> அதனை தொடர்ந்து வயிற்றில் உருளுவதையும், உதைப்பதையும் நம்மால் உணர முடியும். குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க இவை அனைத்தும் சற்று மாறுபடும் மேலும் அதிகரிக்கும். நன்கு வளர்ச்சியடைந்த குழந்தைகளின் உதையையும் அசைவதையும் நன்றாகவே உணர முடியும். வெறும் கண்ணில் பார்க்கும் பொழுது கூட குழந்தையின் கை அல்லது கால் வயிற்றில் முட்டிக்கொண்டு வெளிய தெரிவதை பார்க்க முடியும். பிரசவ நேரம் நெருங்க நெருங்க குழந்தை உதைப்பது அதிக வலியை ஏற்படுத்தும் , பயப்பட தேவையில்லை.சாதாரணமாகவே குழந்தைகள் நீங்கள் தூங்கும்பொழுது அதிக சுறுசுறுப்புடன் காணப்படும். மேலும் நீங்கள் விழித்திருக்கும் நேரங்களில் நன்றாக தூங்கும். குழந்தை வளர வளர வயிற்றில் நகருவதற்கு இடம் இருக்காது. இதனால் பிரசவ நேரம் நெருங்க நெருங்க குழந்தையின் இயக்கம் குறைவாகவே இருக்கும். தாய் மிகவும் ஆரோக்கியமாக இருந்தால் குழந்தை நன்கு அசையும்.உங்களது குழந்தையின் அசைவு முறையில் ஏதேனும் மாற்றம் தென்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் நல்லதாகும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 30-11-2021
பிறந்த குழந்தைகள் அதுவும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் 8 நாட்கள் வரை மலம் கழிக்காமல் இருந்தாலும் பயப்படத்தேவையில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் 10 நாட்கள் மலம் போகவில்லை என்றாலும் அது சாதாரணமான ஒன்றுதான். அதை நினைத்து பயப்பட தேவையில்லை. குழந்தை ஒரு நாளைக்கு ஐந்து ஆறு அல்லது ஏழு தடவைக்கு மேல் சிறுநீர் கழிக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தையின் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அறியலாம். குழந்தை ஒரு நாளைக்கு ஆறு ஏழு முறை சிறுநீர் கழித்தால் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். ஏனென்றால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் சிறுநீர் வழியாகவே வெளியேறிவிடும். இதனால் மலம் போகவில்லை என்று குழந்தையை நினைத்து வருந்தத் தேவையில்லை. 10 நாட்களாக மலம் போகவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம் மருத்துவரை பார்க்க முடியவில்லை என்றால் வீட்டில் குழந்தைக்கு வைத்தியம் செய்து குழந்தைக்கு மோசன் போக வைப்பார்கள் இது ஒரு சில குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குழந்தைக்கு வெற்றிலையின் காம்பை கில்லி விளக்கு எண்ணெயில் தடவி குழந்தை ஆசனவாயில் எண்ணை தடவி குழந்தையின் ஆசனவாயில் வைப்பதன் மூலம் குழந்தை மலம் போகி விடும் என்றாலும் குழந்தைக்கு அந்த இடத்தில் அலர்ஜி புண் ஏற்பட்டு விடும். ஒரு சிலர் குழந்தைக்கு உரைப்பால் ஊற்றுவார்கள் மழைக் காலத்தில் குளிர் காலத்தில் இவ்வாறு செய்யும்பொழுது குழந்தைக்கு சளி பிடித்து விடும் இதனால் உரை பால் ஊற்றுவதும் கடினம்தான். குழந்தைக்கு காலையில் வெறும் வயிற்றில் செக்கு எண்ணெயில் ஆட்டிய விளக்கெண்ணெயை இரண்டு ஒரு துளி மட்டுமே விட வேண்டும் அதில் குறைந்த அளவில் தாய்ப்பாலை கலந்து கால் சங்கடை மட்டுமே குழந்தைக்கு காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும் இவ்வாறு கொடுப்பது மூலம் அந்த நாளில் குழந்தை மோசன் போகிவிடும்.சில குழந்தைகளுக்கு இவ்வாறு கொடுப்பதன் மூலம் சளி பிடிக்க நேரிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குழந்தை சரியாக மோசன் போகவில்லை என்றால் காரணம் தாய்மார்கள் மட்டுமே. தாய்மார்கள் சாப்பிடும் உணவின் மூலமே குழந்தை மோசன் போகாமல் அவதிப்படும். காரணம் தாய் அதிக மாவுப் பொருட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தைக்கு அதிக நீர்ச்சத்து இல்லாமல் மலச்சிக்கல் ஏற்படும். தாய்ப்பால் மூலமே இதனை சரிசெய்ய முடியும் காரணம் குழந்தை தாய்ப்பால் தவிர வேறு எந்த ஒரு பாலையும் குடிப்பதில்லை பார்முலா மில்க் கொடுப்பவர்கள் அதனை அவ்வப்போது நான் சாப்பிட விட வேண்டும் காரணம் குழந்தைக்கு மோஷன் பிராப்ளம் ஏற்படாமல் இருக்கும். தாய்மார்கள் வாழைப்பழம், கீரை, தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலமும். சத்துள்ள உணவுப் பொருட்கள் நன்றாக சாப்பிடு வதன் மூலமும் குழந்தை நன்றாக மலம் போக ஆரம்பித்துவிடும். சீக்கிரம் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை தாய்மார்கள் சாப்பிட வேண்டும். சீரக தண்ணீர், சோம்பு தண்ணீர் குடிப்பதன் மூலம் வயிறு ஏற்படும் பிரச்சினைகள் குறைந்து குழந்தைகள் தாய்ப்பாலின் மூலம் குழந்தையின் வயிறு பிரச்சினையும் சரியாகிவிடும். பூண்டு சட்னி, பூண்டு குழம்பு, பூண்டு சார்ந்த வகையில் உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தைக்கு ஏற்படும் வாயு தொல்லை நீங்கும் குழந்தை நன்றாக மலம் போக ஆரம்பித்துவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 29-11-2021
முதன் முதலில் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு, எவ்வாறு தங்களை பார்த்துக்கொள்வது என்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்கும் , பெரியோர் உள்ள வீட்டில் அவர்களின் அறிவுரைகளை நாம் பின்பற்றினாலே போதுமானது. அனால் இப்பொழுது உள்ள வாழ்க்கை முறையில் தனித்து இருக்கும் சூழலில் உள்ள பெண்களுக்கான முக்கியமான பதிவாகும். 1. கணவரிடம் தாமதிக்காமல் கர்ப்பமான செய்தியை தெரிவித்து விடுங்கள். பல பெண்கள் கணவரை ஆச்சரிய படுத்த நினைத்து குறிப்பிட்ட நேரத்தில் கூறலாம் என்று குறித்து வைத்து காத்திருப்பார்கள் இது மிகவும் தவறாகும். கரு பலவீனமாக இருந்தால் அல்லது மருத்துவரின் ஆலோசனையை பெறாமல் இருந்தால் கருச்சிதைவு ஏற்படும். 2. கர்ப்பம் தரித்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை சென்று ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியமாகும். ஏன்னென்றால் உங்கள் கரு பலமாக உள்ளதா எனபதை அவரால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். மேலும் உங்களுக்கு ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்க்கு தகுந்தவாறு உணவு முறையை மாற்ற அறிவுறுத்துவார். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 3. குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவரை கண்டிப்பாக சந்தித்திருக்க வேண்டும். பெண்ணின் உடல் நிலை , குழந்தையின் வளர்ச்சி ஆகியவற்றை கண்டறிய , மேலும் ஏதேனும் குறைபாடு இருந்தால் நிவர்த்தி செய்ய உதவும். 4. கர்ப்பம் தரித்த முதல் இரண்டு மாதங்களுக்கு மாசில்லாத இடத்தில் இருப்பது மிகவும் நன்று. இந்த நேரத்தில் வீட்டை சுத்தம் செய்வது , பிராணிகளின் கழிவுகளை அகற்றுவது போன்ற வேலைகளை கண்டிப்பாக செய்ய கூடாது. 5. கர்ப்பமடைந்த ஆரம்ப காலத்தில் சீஸ் சம்மந்தப்பட்ட உணவுவகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டால் கர்ப்ப கலையும் வரை செல்லலாம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 6. வாந்தி உண்டாவது பொதுவான பிரச்சனை தான் அனால் எதை சாப்பிட்டாலும் தொடர்ந்து வாந்தி வந்து கொண்டே இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். இல்லையென்றால் தாய் மற்றும் குழந்தைக்கு சத்து குறைபாடு உண்டாகும். இஞ்சி மற்றும் விட்டமின் B6 நிறைந்த உணவுகள் வாந்தியை சரி செய்யும். 7. மருத்துவரால் பரிந்துரைக்க படாத மருந்துகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள கூடாது . சத்து மாத்திரைகளாக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே சாப்பிட வேண்டும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களுக்கு கண்டிப்பாக இதனை பின்பற்ற வேண்டும். 8. அதிகப்படியான உடல் வெப்பமானது உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்க கூடியது , உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டும். மிதமான சுடுநீரில் மட்டுமே குளிக்க வேண்டும். 9. அதிகம் அழுத்தமில்லாத சீரான உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள். இதனால் தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். நடப்பது, நீந்துவது மற்றும் யோகா செய்வதே போதுமானது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 10. இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டும் என்று பெரியோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதற்காக அதிகப்படியான உணவினை சாப்பிடுவதை தவிர்க்கவும். தாய் மற்றும் குழந்தைக்கு நாள் ஒன்றிற்கு 300 கலோரிகள் உள்ள சத்துக்கள் சாப்பிட்டால் போதும். அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து ஆரோகியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 11. இறுக்கமான உடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது. இறுக்கமாக அணிந்தால் முதுகு வலி , செரிமான பிரச்சனைகள் , வெரிகோஸ் வெயின் , நெஞ்செரிச்சல் உண்டாகும். 12. உடம்பில் சத்து குறைபாடு எதுவும் உண்டாகாமல் பார்த்துக்கொள்வது முக்கியமாகும். கர்ப்ப காலத்தில் நீங்கள் சத்தான ஆகாரங்கள் உண்ணவில்லையெனில் பிரசவத்திற்கு பின் உங்கள் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். அதனால் சத்தான உணவு பொருட்களை உண்ண வேண்டும். 13. கர்ப்பகாலத்தில் தூக்கமின்மை பொதுவான பிரச்சனையாகும் , மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மட்டுமே தூங்க தேவையான மருந்துகளை பெற வேண்டும். நேரடியாக கடைகளில் வாங்குவதை தவிர்க்கவும். இரவில் தூக்கமின்மையால் அவதி படுபவர்கள் பகல் நேரத்தில் கொஞ்சம் சேர்த்து தூங்குவதால் களைப்பு ஏற்படாது. 14. முதல் மூன்று மாதத்திற்கு கணவருடன் சேருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 15. பற்களை நன்றாக பராமரியுங்கள். சுருக்கமாக சொன்னால் உங்கள் பற்களின் ஆரோக்கியமே உங்கள் குழந்தையின் ஆரோக்கியம். பல் மருத்துவரை அணுகினாலும் மிகவும் சிறந்தது. 16. மதுப்பழக்கம் உள்ளவர்கள் அதனை தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 29-11-2021