pregnancy-care | | Tamil Best Beauty tips site | Laddu muttai பிரசவ வலிக்கான அறிகுறிகளை கண்டறிவது எப்படி

பிரசவ வலிக்கான அறிகுறிகளை கண்டறிவது எப்படி

பிரசவ வலி 36 வாரத்தில் இருந்து 40-41 வது வாரத்தில் பிரசவ வலி ஏற்படும். மருத்துவர் உங்களது பிரசவ தேதியை கணக்கிட்டு கொடுத்திருப்பார்கள். ஒரு சிலருக்கு பிரசவ தேதிக்கு முன் ஒரு வாரத்திற்கு அல்லது பத்து நாளைக்குள் ஆகலாம். ஒரு சிலருக்கு பிரசவ தேதி வந்தும் பிரசவ வலி வராமல் இருக்கும்.அவ்வாறு பிரசவ தேதி வந்து பிரசவம் ஆகாமல் வலி இல்லாமல் இருப்பவர்கள் பிரசவ தேதிக்கு முன்பாகவே ஒரு வாரத்திற்கும் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.மருத்துவர் உங்கள் பிரசவத்க்கு முன்பு அல்லது அதற்கும் மூன்று நாள் மருத்துவமனையில் தங்க வைப்பார்கள். பிரசவ வலி கான அறிகுறிகள் எவ்வாறு கண்டறிவது, பிரசவ வலி ஒன்பதாவது மாதம் ஆன முப்பத்தி ஆறாவது வாரத்தில் இருந்து 40வது வாரத்திற்குள் பிரசவ வலி ஏற்பட்டு விடும் ஒரு சிலருக்கு பொய் வலியும் பிரசவ வலியும் கண்டறிய தெரியாது, பொய் வலி என்பது என்பது சூட்டு வலி என்று சொல்வார்கள். இந்தப் பொய் வலியானது ஏற்படும் பொழுது நீங்கள் உங்கள் உடலுக்கு மற்றும் வலிக்கு ஏற்றவாறு அமரும்பொழுது படுக்கும் பொழுது இந்த வலியானது சரியாகிவிடும் இரண்டு நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்கு ஒரு சிலருக்கு இந்த பொய் வழியானது இருக்கக்கூடும் தாங்க முடியாத வலியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் மருத்துவரை சென்று பார்க்கலாம் ஆனால் இது பிரசவ வலி அல்ல. முப்பத்திஆறாவது வாரத்தில் இருந்து ஒரு சிலருக்கு அடிவயிறு மாதவிடாய் காலத்தில் வலி ஏற்படுவது போன்று ஒரு சிலருக்கு அடிவயிற்றில் வலி ஏற்படுத்தும் இது பிரசவத்திற்கான அறிகுறி ஆகும். ஒரு சிலர் கர்ப்பிணி பெண்களுக்கு பிறப்புறுப்பின் வழியே அடர்த்தியான வெள்ளை போன்று பட ஆரம்பிக்கும் அதில் பழுப்பு மஞ்சள் நிறத்திலோ அல்லது இரத்தம் கலந்த நிறத்தில் இருந்தால் பிரசவம் நாள் நெருங்கி வருகிறது பிரசவம் நடக்க போகிறது என்பதற்கான அறிகுறியாகும். நடைப்பயிற்சி அல்லது நடப்பவர்கள் தன் கால் வலி மிகவும் அதிகம் ஆகி தன் பிறப்புறுப்பில் எதையோ வழிந்து கொண்டிருப்பது போல் உணர்வார்கள் இது குழந்தையின் தலை பிறப்பு உறுப்பை நோக்கி நகர்ந்து பிரசவத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் அச்சமயத்தில் குழந்தையின் தலை அங்கு இருப்பது உங்களால் உணரமுடியும் நடக்கும்பொழுது அமரும் பொழுது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அறிகுறியாகும் பனிக்குட நீர் ஒரு சிலருக்கு வலி ஏற்படாமல் ஒடிந்து விடும் அவ்வாறு பனிக்குட நீர் வழிந்த உடனே சிறிதும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். பனிக்குட நீர் உடைந்துவிட்டால் குழந்தைகள் அதிக நேரம் வயிற்றில் இருந்தால் அது குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். குழந்தையின் தலை உங்க பிறப்புறுப்பின் வழியே மோதிக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பு உறுப்பு 10 சென்டிமீட்டர் அளவில் விரிவடைந்தால் மட்டுமே குழந்தையின் தலை வெளியே வந்து உடல் வெளியே வர ஏதுவாக இருக்கும் பத்து சென்டிமீட்டர் அளவு வாய் திறக்கும் வரை பிரசவ வலி நீடிக்கும். ஒரு சிலருக்கு கர்ப்பப்பை வாய் திறப்பதற்கு அதிக நேரம் எடுப்பதால் பிரசவ வலி அதிக நேரம் நீடிக்கும். முப்பத்தி ஆறு முப்பத்தி ஏழு முப்பத்தி எட்டு இந்த வாரங்களில் மிகவும் கவனமாக நடைப்பயிற்சி வீட்டு வேலைகளை செய்வது அவசியம். குழந்தையின் தலை ஒரு சிலருக்கு திரும்பி இருக்காது பிரசவ தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குழந்தையின் தலை திரும்ப ஆரம்பிக்கும் குழந்தை தலை திரும்ப ஆரம்பிக்கும் போது ஒரு சிலருக்கு அதிகமான வலியை ஏற்படுத்தும்.வலி நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே இருக்கும் அப்பொழுது நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இது பிரசவ வலி என்று. இடுப்பிலிருந்து அதிக சுருக்க அழுத்தத்துடன் முன்பகுதி அடிவயிற்றுக்கு தாங்க முடியாத அளவில் வயிற்றுவலி வந்தால் இதுவும் பிரசவ வலியின் அறிகுறி ஆகும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை என் அந்த பிரசவவலி வந்து கொண்டே இருக்கும் அந்த வலியானது ஒரு நிமிடத்திற்கு தாங்க முடியாத அளவில் இருக்கும் அமர்ந்தால் படுத்தால் வலி குறையாது இவ்வாறு உடல் அமைப்புக்கு ஏற்றவாறு வலி குறையாமல் இருந்தால் பிரசவ வலியின் அறிகுறி ஆகும். எடுத்து உடனே குழந்தை அதிக வலியுடன் பிறந்து விடாது வழி 56 மணி நேரம் உடலில் பிரசவ வலி இருக்கும் அதன் பின்னரே மலம் இருப்பது போன்று கடைசியாக வலிக்க நேரிடும். அவ்வாறு உங்களை அறியாமலே மலத்தை முக்கி நீங்கள் அந்த வலியை உணர ஆரம்பித்தால் உடனே குழந்தை பிறந்துவிடும் இது குழந்தை பிறப்பதற்கான வழியாகும். பிறப்புறுப்பின் பின் வழியே இரத்தம் வடிதல் நீர் வடிதல் இது போன்று இருந்தால் உடனே மருத்துவ மனைக்கு சென்றுவிட வேண்டும் இதை பிரசவ வலி வருவதற்கான அறிகுறியாகும். பிரசவ வலி வந்து இது பிரசவ வலி பொய் வழி என்று கண்டு பிடிக்க தெரியாதவர்கள் அந்த நாள் முழுக்க மிகவும் சோர்வாக அதிக வேலைகளை செய்ய முடியாமல் சாதாரணமாகவும் வேலை செய்ய முடியாமல் மிகவும் சோர்வாக காணப்படுவார்கள். மத்த நாட்களில் இருப்பது போன்று வயிறு இருக்காது வலி இருக்கும் போது வயிறானது குழந்தை நேராக இருப்பதை உணர முடியும் அதாவது குழந்தை பிறப்பு உறுப்பின் வழியை நோக்கி தலைகீழாக இருக்கும் அச்சமயத்தில் உருண்டையாக இருக்கும்.குழந்தை இருக்கும் இடம் தவிர மற்ற பகுதிகளில் பள்ளம் ஏற்பட்டு இருக்கும் இதனை வைத்தே இது பிரசவ வலி என்று உணரலாம். பிரசவ வலி வந்த நாட்களில் பிறப்புறுப்பில் அதிகப்படியான வலியை உங்களால் உணர முடியும் இது குழந்தையின் தலை அழுத்தத்தின் காரணமாகவும் குழந்தை பிறப்பதற்கு உங்கள் பிறப்புறுப்பை தயார் படுத்துவதற்கு இந்த வழி ஏற்படும். உங்கள் பின் முதுகில் இருந்து வலி கொஞ்சம் கொஞ்சமாக அடிவயிற்றுக்கு வந்து கால் மற்றும் இடுப்பு தொடை இவற்றைப் பிச்சி எரிவது போன்று வலி தாங்க முடியாத அளவிற்கு இருக்கும் இதுவும் பிரசவத்திற்கு அறிகுறியாகும். ஒரு சிலருக்கு பிரசவ வலி ஏற்படும் அந்த நாட்களில் உணவு உண்டாலும் வயிற்றில் எந்த உணவும் தங்காமல் வாந்தி உடல் சோர்வு இவை அனைத்தும் இருக்கும் வயிற்றில் உணவு தங்காது இதுவும் பிரசவத்திற்கான அறிகுறி முப்பத்தி ஆறாவது வாரத்தில் இருந்து உங்க கர்ப்பப்பை வாய் ஒரு சென்டி மீட்டர் அல்லது அரை மீட்டர் அளவிற்கு திறக்க ஆரம்பித்திருக்கும் இதனைக் கண்ட உடன் மருத்துவர் உங்கள் கர்ப்பப்பை வாய் பிரசவம் நெருங்கும்போது சிறிதாகத் திறந்து விடுவார்கள் இதன் மூலம் வலி அதிகமாக நேரிடும் அச்சமயத்தில் ரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். ஒரு சிலருக்கு பிரசவ வலியானது ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே அடி வயிறு வலி இடுப்பு வலி என வழி ஒரே மாதிரியாக இருந்து கொண்டே இருக்கும் பிரசவ நாள் நெருங்கும் நாட்களில் அந்த வலியானது தாங்க முடியாத அளவிற்கு அதிகமாக ஏற்படக்கூடும் இதுவும் பிரசவத்திற்கான அறிகுறி ஆகும். உங்களது பிரசவ தேதி தெரியவில்லை என்றால் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி உங்கள் முதல் மாதவிடாய் நாட்களை தெரிவித்து உங்களுக்கான பிரசவ தேதியை உங்கள் மருத்துவர் உங்களிடம் சொல்வார். ஒரு சிலருக்கு சொன்ன அந்த பிரசவ தேதியிலேயே பிரசவம் நடந்துவிடும் வலியும் வந்துவிடும்.




கர்ப்ப காலத்தில் முதுகு வலி அனைத்து பெண்களும் பரவலாக சந்த்திக்கும் பிரச்சனையாகும் , சிலருக்கு இயல்பாகவே இதனை தாங்கிக்கொள்ள முடியும் ஆனால் பலரால் இதனை பொறுத்துக்கொள்ளவே முடியாது. எதனால் கர்ப்பகாலத்தில் முதுகு வலிக்கிறது? பெண்களின் உடம்பில் உள்ள தசைகள் கர்ப்பகாலத்தில் மென்மையாக மாறி உடலை பிரசவத்திற்கு தயார் படுத்தும் தன்மையுடையவை. இதனால் பெண்களின் முதுகின் கீழ்ப்பகுதி மற்றும் மூட்டுகளில் அழுத்தத்தை உண்டாக்கும். இந்த காரணத்தினாலேயே முதுகு வலி உண்டாகும். மேலும் உங்கள் கீழ் முதுகில் உள்ள குழியானது விரிவதால் (கருப்பை எடை அதிகரிப்பதால் விரியும்) உங்கள் மற்றும் முதுகு வலியை மேலும் அதிகரிக்கும். கர்ப்பகாலத்தில் முதுகுவலியை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது? 1. கீழே குனிந்து ஒரு பொருளை எடுக்க நேரிட்டால் உங்களுடைய முழங்காளை நன்றாக வளைத்து , முதுகு தண்டு நேராக இருக்கும் படி பொருட்களை எடுக்க வேண்டும்.உங்கள் முதுகிற்கு கொடுக்கப்படும் அதிக அழுத்தம் , உங்களின் வலியை மேலும் அதிகமாக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 2. கண்டிப்பாக சமமான அளவுடைய தட்டையான காலணிகளை மட்டுமே அணிய வேண்டும். அப்பொழுதுதான் உங்களின் உடலின் எடை சமமாக இருக்கும். இதனால் இடுப்பில் அழுத்தம் குறையும். 3. அடிக்கடி குமிந்து செய்யும் வேலைகளை கண்டிப்பாக தவிர்க்கவும், அவசியம் இருந்தால் மட்டும் அல்லது உடற்பயிற்சி செய்யும் மட்டும் குமிந்தால் போதும். 4. எப்பொழுதும் அமரும்போது முதுகுத்தண்டானது நேராக இருக்கும் படி மட்டுமே அமர வேண்டும். அதே போன்று நீண்ட நேரம் உட்காருவதையோ அல்லது நிற்பதையோ தவிர்த்தால் நல்லது. 5. முதுகிற்கு இதமாக இருப்பதனால் மெத்தைகளை உபயோகிப்பதை தவிர்க்கவும் , முடிந்த அளவு தரையிலோ அல்லது பாய்களில் படுப்பதால் இயற்கையாகவே உங்கள் முதுகு வலி நிவாரணமாகும். 6. பின்வரும் முறைகளின் மூலமும் முதுகுவலியை சரிசெய்ய முடியும் *அக்குபஞ்சர் *மசாஜ் *சுடுநீர் ஒத்தடம் *நடை பயிற்சி *முறையான உடற்பயிற்சி 7. எப்பொழுதும் மென்மையான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்யுங்கள், உங்கள் குதிங்காலில் அடிப்புறம் படும்படி அமர்ந்தாள் கீழ் முதுகில் வலி குறையும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 23-11-2021
கர்ப்ப காலத்தில் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையானது அணைத்து பெண்களுக்கும் மிகவும் அவஸ்தையான ஒன்று. கர்ப்பமடைந்த ஆரம்ப காலத்திலேயே பெண்களின் உடலில் பல விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும், இதன் காரணமாக பெண்களுக்கு அஜீரணம் கோளாறு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். ஒரு சில பெண்களுக்கு இயல்பாகவே இந்த பிரச்சனைகள் இருக்காது அனால் பெரும்பாலானோர் இந்த பிரச்னையால் அவதிப்படுகின்றனர். பெரும்பாலும் இரண்டாவது அல்லது மூன்றாவது மாதத்திலேயே அஜீரண கோளாறுகள் ஏற்படும். கர்ப்பிணிகள் அஜீரணத்தை தவிர்க்க என்ன செய்யலாம்? 1. அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 2. அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 3. செரிமானமாக தாமதமாகும் உணவுகளை தவிர்க்க வேண்டும். 4. சிலருக்கு சாக்லட் சாப்பிடுவதனால் அஜீரண கோளாறு ஏற்படும். 5. சாப்பிட்டவுடன் குனிந்து எந்த வேலையும் செய்யக்கூடாது. 6. குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 7. மனதினை கவலையற்று வைத்துக்கொள்ளவும். மனா ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம். 8. தொடர்ந்து அஜீரண மற்றும் நெஞ்செரிச்சல் கோளாறுகள் நீடித்தால் உணவு வாழ்க்கை முறையை மாற்றவும். 9. உறங்க செல்லும் முன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 10. சாப்பிடும் பொழுது நேராக அமர்ந்து வேண்டும். 11. உறங்கும் பொழுது இடது பக்கம் படுத்து உறங்கவும். 12. தீராது அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகவும் , வயிற்றில் உள்ள அமிலங்களை மருந்துகள் மூலம் நடுநிலப்படுத்தி சரி செய்யலாம். 13. உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்கள் கண்டிப்பாக மருத்துவரை அவர்கள் சொல்லும் படி பின்பற்ற வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 23-11-2021
கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்குமே இருக்கும் ஆசையில் ஒன்றுதான் வயிற்றில் குழந்தையின் அசைவு எப்போது தெரியும் எப்போது குழந்தை உதைக்கும் அதை எப்பொழுது உணர்வோம் என்ற ஆர்வம் மிகவும் அதிகமாக இருக்கும். குழந்தையின் அசைவை கர்ப்பிணி பெண்ணால் நான்காவது மாதத்தின் முடிவில் அல்லது ஐந்தாவது மாதத்தின் தொடக்கத்தில் நன்றாக உணரமுடியும். அதாவது 17 18 வாரங்களில் குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும் கர்ப்பமான நாள் முதல் அந்த கர்ப்பிணிப் பெண் நன்கு சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் குழந்தை சுறுசுறுப்புடன் ஆரோக்கியத்துடன் காணப்படும் இதனால் குழந்தையின் அசைவை வெகுவிரைவாக கர்பிணியால் உணரமுடியும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு தான் ஓய்வு எடுக்கும் நேரத்தில் குழந்தையானது அசைய தொடங்கும். காரணம் கர்ப்பிணிப் பெண் நடக்கும்போது, வேலை செய்யும்பொழுது, ஓய்வெடுக்காமல் இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு தொட்டிலில் தூங்குவதுபோல் தூங்கிக் கொண்டிருக்கும். கர்ப்பிணி பெண் எப்பொழுது உறங்க செய்கிறாரோ அந்த சமயத்தில் குழந்தையானது அசைய தொடங்கும். இதனால் தூக்கமின்மை கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> கர்ப்பிணிப் பெண் வலதுபுறமாக படுக்கும்பொழுது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அச்சமயத்தில் குழந்தையின் அசைவு மிக அதிகமாக காணப்படும் கர்ப்பிணி பெண் எப்பொழுதும் இடதுபுறமாக படுப்பதே நல்லது. இது அதிகமான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி குழந்தைக்கு நன்றாக ஓடி ஆடி விளையாட ஏதுவாக இருக்கும். இடது புறமாக படுக்கும் போது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர வேண்டும். தலை பெரிதாக இருக்கும் குழந்தை மற்றும் கை கால்கள் நீளமாக இருக்கும் குழந்தை அதிகமாக உதைக்கும். தலை அடிக்கடி வந்து வயிற்றில் முட்டுவதையும் கர்ப்பிணியால் நன்றாக ஐந்தாவது மாதத்தில் அதாவது 18வது வாரத்தில் உணர முடியும்.சில கர்ப்பிணிப் பெண்கள் அடிவயிற்றில் உருண்டையாக வந்து முட்டுவது நன்றாக உணர முடியுது என்பதை சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அது குழந்தையின் தலை பகுதியாகும் குழந்தையின் கால் நீளமாக உள்ள பொழுது குழந்தை அடிக்கடி உதைப்பதை நன்றாக உணரமுடியும். ஏழாவது மாதத்தில் குழந்தையின் அசைவு மிக அதிகமாக இருக்கும் நீங்கள் குழந்தை இரண்டு மணி நேரத்திற்கு எந்த அளவு இடைவெளியுடன் எத்தனை முறை உதைக்கிறது எத்தனை முறை அசைகிறது என்பதை கவனித்து குறித்துக்கொண்டு குழந்தை அசைவு குறைவாக இருந்தால் நாளுக்கு நாள் மாறுகிறது என்றால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். குழந்தையிடம் பேச்சு கொடுப்பதன் மூலம் குழந்தை அம்மாவின் குரலை கேட்கும் பொழுது தாய் பேசுகிறார்கள் என்பதை உணர்ந்து குழந்தை அசைவும் தொடங்கும் குழந்தை உதைக்கும் குழந்தையிடம் அவ்வப்போது பேச்சு கொடுக்க வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 8 மற்றும் ஒன்பதாவது மாதத்தில் இருந்து குழந்தையின் அசைவு குறையத் தொடங்கும் குழந்தை பெரிதாக வளர்ந்து இருக்கும் மற்றும் வயிற்றில் போதுமான இடம் இருக்காத குழந்தையின் அசைவு குறைவாக இருக்கும்.எட்டாவது மாதத்தில் ஒன்பதாவது மாதத்தில் குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலும் குழந்தை எப்பொழுது உதைக்கிறது எத்தனை தடவை உதைக்கிறது என்பதை கர்ப்பிணிப்பெண் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும் ரொம்ப குறைவாக அசைவு தெரியாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தையின் அசைவு மிக அதிகமாக இருந்து வலி ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் தாமதப்படுத்தக் கூடாது. 9வது மாதத்தில் குழந்தை அசைவது மற்றும் உதைப்பது குறைவாக இருக்கும் இது குழந்தை கர்ப்பப்பை வாய் நோக்கி தலைகீழாகத் தொங்க ஆரம்பிக்கும் இதனால் குழந்தையின் அசைவு மிகக் குறைவாக இருக்கும் மேலும் குழந்தை தலைகீழாக திரும்ப தொடங்கும் பொழுது ஒரு சிலருக்கு அதிகப்படியான வயிற்றுவலி வயிற்று சுருக்கங்கள் பொய் வலிகள் ஏற்படக்கூடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> அதிகமாக கொழுப்புள்ள தொப்பை உள்ள பெண்களுக்கு குழந்தையின் அசைவு மற்றும் உதைப்பது குறைவாகவே உணர முடியும் ஆனால் குழந்தை கர்ப்பப் பையினுள் மிக சுறுசுறுப்பாக இருக்கும் காரணம் தொப்பை இருக்கும் காரணத்தினால் ஒரு சில கர்ப்பிணி பெண்கள் மிகக்குறைவாகவே 5 6-வது 7-வது மாதத்தில் உணர முடியும் வழக்கத்தைவிட குழந்தையின் அசைவு குறைந்துவிடும் அல்லது மிதமிஞ்சிய அளவாக இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் காரணம் கருப்பையினுள் இருக்கும் பனிக்குட நீரானது குறைவாக இருந்தால் குழந்தை அசைவு குறைவாக இருக்கும் ஒரு சிலருக்கு குழந்தையின் அசைவு மிக அதிகமாக இருக்கும் இதனால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று வீட்டில் இருந்து விடாமல் குழந்தையின் அசைவு அதிகமாக மிதமிஞ்சிய அளவுக்கு இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 18-11-2021
1.கர்ப்பிணி பெண்கள் மனதை முக்கியமாக சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் , மன தைரியமே உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். 2.ஏழாவது மாதம் தொடங்கிய உடன் மருத்துவர் கூறும் உடற்பயிற்சிகளை தவறாமல் காலை மற்றும் மாலையில் சாப்பிட்டு செய்யலாம் உடற்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும். 3.உடற்பயிற்சி செய்யும் பொழுது மனது தானாகவே பிரசவத்திற்கு தயாராகிவிடும் சுகப்பிரசவம் ஆக போகிறது குழந்தையை பெற்றெடுப்பதற்கு உடலை நாம் தயார்ப் படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று மன தைரியத்துடன் பயிற்சி செய்யுங்க பயம் என்பது விலகிவிடும். 4.நடைப்பயிற்சி காலை மற்றும் மாலையில் ஒரு மணிநேரம் கட்டாயம் செய்ய வேண்டும். இது உங்களது உடலை பிரசவத்திற்கும் பிரசவவலி இயற்கையாகவே வருவதற்கும் உடலைத் தயார்படுத்தும் கட்டாயம் 7வது மாதத்தில் இருந்து நடக்க ஆரம்பிக்க வேண்டும். 5.எட்டாவது மாதத்தில் இருந்து காலை வெறும் வயிற்றில் வெண்ணையை ஒரு தேக்கரண்டி அளவில் சாப்பிட வேண்டும்.வெண்ணெயை உருக்கமால் அப்படியே சாப்பிட வேண்டும் ஒரு தேக்கரண்டி ஒரு சாப்பிடுவதனால் குழந்தை எளிதாக இருப்பதற்கும் பிரசவ வலி இயற்கையாக வருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 6.சோம்பு கஷாயம் எட்டாவது மாதத்திலிருந்து கண்டிப்பாக சாப்பிட வேண்டும். பிரசவ வலியை தானாக வருவதற்கு உதவியாக இருக்கும். 7.அண்ணாச்சி பழம் இரண்டு துண்டுகளை ஒன்பதாவது மாதத்தில் சாப்பிட ஆரம்பிக்கவும் இது இயற்கையாக பிரசவ வலி ஏற்படுவதற்கு உதவும். 8.விளக்கெண்ணெய் சாப்பாட்டில் கலந்து சாப்பிடத் தொடங்க வேண்டும். முப்பத்தி ஏழாவது வாரத்திலிருந்து 40வது வாரத்தில் தங்களது பிரசவ வலி வர ஆரம்பித்துவிடும் இச்சமயத்தில் விளக்கெண்ணை இதுபோன்று சாப்பிடுவதன் மூலம் பிரசவ வலி வருவதற்கும் குழந்தை எளிதாக பிறப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். 9.இஞ்சி கஷாயம் குடிப்பதன் மூலம் பிரசவ வலி இயற்கையாக வருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். 10.ஒன்பதாவது மாதத்தில் பிரசவ தேதி வந்தும் பிரசவம் ஆக வில்லை என்று வருந்துபவர்கள் மருத்துவர் உங்களை பிரசவ தேதிக்கு 2,3 நாட்கள் முன் வர வைப்பார் அச்சமயத்தில் உங்களது பிறப்புறுப்பின் வழியே மருத்துவர் தங்களது கையில் ஒரு ஜெல் வைத்து உங்களது பிறப்புறுப்பில் கையை வைத்து உங்களது கர்ப்பப்பை வாய் தொடுவார். அவர் கையை விட்டு எடுத்து ஒரு அரை மணி நேரத்தில் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரசவ வலி எடுக்க ஆரம்பித்துவிடும் இது செயற்கையாக வலி வரவைக்கும் வழியாகும் இதற்கு பயப்படத் தேவையில்லை குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்துவிடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 11.ஒன்பதாவது மாதத்தில் கட்டாயமாக உடற்பயிற்சி நடைபயிற்சி கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். ஒரு வாரம் ஆகியும் பிரசவ வலி வரவில்லை என்றால் படிக்கட்டுகளில் மாலை மற்றும் காலை ஏறி இறங்கவும் இது உங்களது இடுப்பு எலும்பு விரிவடைந்து வயிறு கர்ப்பப்பையில் சுருக்கம் ஏற்பட்டு பிரசவ வலியை இயற்கையாகத் தூண்டும். 12.நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது குழந்தை தானாகவே தலைகீழாக திரும்ப ஆரம்பிக்கும் கண்டிப்பாக 7வது மாதத்தில் இருந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் சுகப்பிரசவம் மற்றும் பிரசவ வலி தானாக ஏற்படும். 13.ஏழாவது ,எட்டாவது மற்றும் ஒன்பதாவது மாதத்தில் பிரசவ தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னாள் கணவருடன் உறவு வைத்துக்கொள்வதன் மூலம் கர்ப்பப்பை சுருங்கி விரிந்து இயற்கையாக பிரசவ வலியை தூண்டும் இதனால் குழந்தைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இச்சமயத்தில் உறவு வைத்துக் கொள்ளலாமா என மருத்துவரை கட்டாயமாக கேட்டுக்கொண்டு மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும். 14. பிரசவ வலி அதிகமாக தூண்டுவதற்கும் குழந்தை தலைகீழாக வராமல் இருந்தால் உங்களை மருத்துவர் சிறிது தூரம் நடக்க சொல்லுவார் இதனால் பிரசவ வலி அதிகரித்து குழந்தை பிறப்பதற்கு உதவியாக இருக்கும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்யவேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> 15.ஒன்பதாவது மாதத்தில் உங்களுக்கும் குழந்தைக்கும் தேவையான பொருட்களை கட்டாயமாக என்னென்னவென்று ஒரு பையில் எடுத்துவைத்து மருத்துவமனைக்கு செல்வதற்கு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 16.வீட்டு வேலைகளை அவ்வப்போது செய்ய வேண்டும். குடம் தூக்குதல், துணி துவைத்தல், வீட்டை கூட்டுதல், பாத்திரம் விளக்குதல் என செய்வதன் மூலம் பிரசவ வலி இயற்கையாகவே ஏற்படும் அதிக சோர்வு உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் கேட்டுவிட்டு மட்டுமே வீட்டு வேலைகளை செய்ய வேண்டும். 17. பிரசவ தேதி நெருங்கும் இந்த பத்து நாட்களில் அதிக பொருட்களை உண்ணுவதை தவிர்க்கவும் இது பிரசவத்திற்கு உங்களை தள்ளி வைக்கும். அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுவது இந்த காலகட்டத்தில் அதாவது பிரசவ தேதி நெருங்கும் அந்த பத்து நாட்களில் சுத்தமாக தவிர்த்து விடவும். 18.பப்பாளி, அண்ணாச்சி, பேரிச்சம்பழம் கர்ப்பத்தின் தொடக்கத்தில் இதனை சாப்பிடக்கூடாது பிரசவ வலி தானாக ஏற்படுவதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்வதற்கும் இந்த படத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒன்பதாவது மாதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இது பிரசவ வலியை இயற்கையாக தூண்டும். 19.பிரசவ தேதி நெருங்கும் நாட்களில் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் நல்ல கொழுப்பு உள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.நல்லெண்ணெய் ஆமணக்கு எண்ணெய் அதிகம் ஒன்பதாவது மாதத்தில் இருந்து பயன்படுத்த வேண்டும் இது உங்கள் குழந்தை பிறப்பதற்கும் பிரசவ வலி இயற்கையாக ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 18-11-2021
முதல் மாதம் என்பது கர்ப்பம் தரித்து வாரம் 1 முதல் நான்கு வாரம் வரை முதல் மாதமாகும். இந்த காலத்தில் கரு உருவாக தொடங்கியிருக்கும். உங்களது கர்ப்பப்பையினுள் கருவானது நுழைய ஆரம்பிக்கும் காலமே 3வது வார கர்ப்ப காலம் ஆகும். கருத்தரிக்க முயற்சி செய்பவர்கள் உங்களது முதல் மாதவிடாய் காலத்தில் இருந்து குழந்தையின் வளர்ச்சிக்கு அதாவது கருவின் வளர்ச்சிக்கு சரியான உணவுகளை ஆரம்பத்திலிருந்து உட்கொள்ள தொடங்க வேண்டும். எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம். முதல் மாதத்தில் உங்களது கருவானது சிறிய கடுகு அளவில் மட்டுமே இருக்கும். குழந்தையின் இதயம் நுரையீரல் தண்டுவடம் நரம்பு வளர்ச்சி ஆகியவை வளர்வதற்கு சரியான ஊட்டச்சத்து மிகவும் அவசியம் இது உங்களது முதல் மாதத்தில் சரியாக உட்கொள்வது நலம் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக வளரத் தொடங்கும். வைட்டமின் பி6, நல்ல கொழுப்பு உள்ள உணவுகள், போலிக் அமிலம், கால்சியம் ,பொட்டாசியம், நார்ச்சத்து ,புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்பது மிகவும் அவசியம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> வைட்டமின் பி6 உள்ள உணவுகளான காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, ப்ராக்கோலி, கேரட், சக்கரவள்ளி கிழங்கு, பூசணிக்காய் விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் கரு விருத்தியாகும். இது உங்களது வாந்தி உணர்வைத் கட்டுப்படுத்தி கருவையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும். போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் இது உங்களது ரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து குழந்தைக்கும் தாய்க்கும் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கு செய்யும்.போலிக் அமிலம் உள்ள உணவுகளான பயிர் வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும் , பயிர்களை முளைகட்டி தண்ணீரில் வேகவைத்து தினமும் சாப்பிட வேண்டும்.முந்திரி பாதாம் காய்ந்த திராட்சை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட் மாதுளை ரத்தம் அதிகரிக்கக்கூடிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் கீரை வகைகளை பச்சை காய்கறிகளை நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் முட்டைகளை வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். பால் தயிர் மோர் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்கி குழந்தைக்கும் தாய்க்கும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவேண்டும் பாதாம் மீன் இறைச்சி பால் பொருட்களை சாப்பிடவேண்டும். கடல் மீன் உணவுகளை தவிர்க்க வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> சாப்பிட்டால் இரண்டு துண்டுகள் மட்டுமே சாப்பிட வேண்டும் அதிகம் சாப்பிடவே கூடாது. பொட்டாஷியம் நார்ச் சத்து இரும்பு சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். காய்கறி சூப், ஆட்டு கால் சூப், ஆட்டு இறைச்சியை நன்கு வேக வைத்து மட்டுமே சாப்பிட வேண்டும். ஆரஞ்சு மாதுளை ஆப்பிள் செவ்வாழை ஸ்ட்ராபெரி எலுமிச்சை பழம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் எலுமிச்சம்பழத்தை வாரத்தில் ஒரு முறை மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது. நார்ச்சத்து உள்ள உணவுகளான பழங்கள் காய்கறிகள் கீரைகள் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். இச்சமயத்தில்.வாந்தி மயக்கம் ஆரம்பிக்கும் முன்னரே உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் வாந்தி மயக்கம் ஏற்பட்ட காலத்தில் உடல் சோர்வு இன்றி குழந்தைக்கும் தாய்க்கும் அதிக ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்கும். முதல் மாதத்தில் வாந்தி உணர்வு இருக்கும் நபர்கள் உணவுகளை தவிர்க்காமல் மேற்கண்ட உணவுகளை சிறு சிறு இடைவெளியுடன் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் சரியான ஊட்டச்சத்து இருந்தால் மட்டுமே குழந்தை நன்றாக வளரத் தொடங்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 13-11-2021
எட்டாவது மாதம் கருவுற்ற முப்பத்தி ஒன்றிலிருந்து முப்பத்தி ஐந்தாவது வாரம் வரை எட்டாவது மாதமாகும்.இந்த மாதத்தில் உங்களின் குழந்தை பிறக்கும் குழந்தையின் அளவில் இருக்கும் குழந்தையின் எடை 2000 கிராம், உயரம் நாற்பத்தி ஆறு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் அளவில் இருக்கும். குழந்தை முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும் கடைசியாக நுரையீரலின் வளர்ச்சி முழுமை அடைந்து இருக்கும். எப்பொழுதும் சாப்பிடும் உணவை விட அதிக சத்துள்ள உணவுகளை கர்ப்பிணி பெண் இந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும். குழந்தையின் அளவு பெரிதாக இருப்பதால் வயிற்றில் போதுமான இடம் இல்லாமல் குழந்தை அசைவு மிகக் குறைவாக இருக்கும் குழந்தையின் அசைவு மிகவும் குறைவாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் குழந்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை உதைக்கிறது என்பதை கவனித்து கொள்ள வேண்டும். கர்ப்பப்பையின் அளவு இப்பொழுது பெரிதாக இருக்கும் பனிக்குட நீர் மிகவும் குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் பனிக்குட நீர் குறைந்தால் பிரசவ நேரத்தில் ஆபத்தாகிவிடும். உங்களின் எடை கொஞ்சம்கொஞ்சமாக அதிகமாக தொடங்கும் இது உங்களின் கர்ப்பப் பையின் எடை உன் பனிக்குட நீரின் எடை குழந்தையின் எடை உங்களது எடை எடை அதிகரிப்பது தொடங்கும். இடுப்பில் வலி முதுகு வலி அதிகமாக இருக்கும் சமயத்தில் அதற்கு ஏற்றவாறு தலையணையை காலுக்கிடையில் முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொள்வது வலியை குறைக்கும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குழந்தை பெரிதாக இருப்பதால் இரைப்பையை மீது அதிக அழுத்தத்தை கொடுக்கும் இதனால் செரிமான பிரச்சினை உண்டாகும் மிகவும் ஆரோக்கியமான மற்றும் அதிக திட உணவுகளை தவிர்த்து செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் இது உங்கள் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை தடுக்கும். மார்பின் அளவு இப்பொழுது கர்ப்பிணி பெண்ணுக்கு மிகவும் பெரியதாக இருக்கும் குழந்தைக்கு பால் கொடுக்க ஏற்றவாறு மார்பு அமையக்கூடும். மேலும் கால்களில் வீக்கம் அதிகமாக இருக்கும். குழந்தை எட்டாவது மாதத்தில் தலைகீழாக உங்கள் பிறப்புறுப்பை நோக்கி தலையைத் திருப்பி பிரசவத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கும் குழந்தையின் தலை திரும்பும் பொழுது ஒரு சிலருக்கு வலி ஏற்படும்.குழந்தையின் தலை கால்களின் இடையே இருப்பதால் உங்களால் குழந்தையின் தலை தலைகீழாக இருப்பது உணர முடியும். குழந்தையின் தலை தலை கீழாக ஒரு சிலருக்கு வந்து இருக்காது சரியான உடற்பயிற்சி நடைப்பயிற்சி வீட்டு வேலைகள் அவ்வப்போது செய்வதன் மூலம் குழந்தையின் தலை கீழாக வருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> நஞ்சுக்கொடி கீழ் இரக்கம் உள்ளவர்கள் இதனை செய்யக்கூடாது. எட்டாவது மாதத்தின் கர்ப்பிணி பெண்ணுக்கு உணர்வுகள் அதிகமாக இருக்கும் இச்சமயத்தில் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமா என்பது அதிக சந்தேகம் இருக்கும் மருத்துவரிடம் உங்கள் உடலில் ஏற்படும் இந்த உணர்வுகளை கூறி உறவு வைத்துக் கொள்வதை பற்றி தெரிந்துகொண்டு கணவரிடம் உறவு வைத்துக் கொள்ளலாம். அந்த காலத்தில் உடலுறவு எட்டாவது ஏழாவது மாதத்தில் வைத்துக் கொள்ளச் சொல்வார்கள். இது இடுப்பெலும்பு வலுவிற்கும் மற்றும் விரிவாக்க உதவும் என்பதால் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். உணர்வு வைத்துக்கொள்வதால் கர்ப்பிணி பெண் மிகவும் மன மகிழ்ச்சியுடனும் கர்ப்ப காலத்தில் அதிகமான சந்தோஷத்தோடும் காணப்படுவதால் குழந்தையின் வயிற்றில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். பிரசவம் பற்றிய பயம் ஏற்படும் பயத்தை தவிர்த்து தைரியத்துடன் இருக்க வேண்டும். எட்டாவது மாதத்தில் ஒரு சிலருக்கு வலி ஏற்படும். பொய் வலியாக இருந்தால் சில சமயங்களில் அது நீடிக்கும் உட்கார்ந்தால் வலிக்கு ஏற்ற மாதிரி படுத்தாள் வலி உடனே போய்விடும் இது பொய் வலியாகும் பிரசவ வலியாக இருந்தால் வலிக்கு ஏற்றவாறு எப்படி அமர்ந்தாலும் படுத்தாலும் வழி நீடித்துக் கொண்டே இருக்கும். ஐந்து நிமிடத்திற்கும் பத்து நிமிடத்திற்கு என இடைவெளி விட்டுவிட்டு அதிகமாக தொடங்கும் அது பிரசவ வலியாகும் உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். பிறப்புறுப்பில் ரொம்பவே நீர்வடிதல் சளி போன்ற திரவம் அதிகமாக வடிதல் போன்றவை இரத்த கசிவு இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-10-2021
ஏழாவது மாதத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு மிகவும் பெரியதாக இருக்கும். குழந்தை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஏழாவது மாதத்தில் குழந்தை 900 முதல் 1000 வரை எடையைக் கொண்டிருக்கும். குழந்தை வளர்ச்சி வேகமாக இருக்கும் இச்சமயத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உடம்பில் போதுமான அளவு ரத்தம் கால்சியம் சத்து இவை அனைத்தும் குறையத் தொடங்கும். இச்சமயத்தில் அதிக இரும்பு சத்துள்ள உணவுகளையும் கால்சியம் நிறைந்த உணவுகளையும் போலிக் மாதிரிகளையும் கர்ப்பிணி பெண் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு தேவையான அளவு சத்து கிடைக்கவில்லை என்றால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும் இது குழந்தை பிறந்த பிறகு உடலில் ஏதோ ஒரு குறைபாடு ஏற்படும் இதனால் கர்ப்பிணி பெண் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தினமும் சாப்பிடுவது அவசியம் நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். பச்சைக் காய்கறி ஆப்பிள் பால் இறைச்சி மாதுளை போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகமாகி குழந்தைக்கும் அவை சென்றடையும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாவிட்டால் குழந்தை தாயின் எலும்புகளில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொள்ளும் இதனால் நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து பிரசவ நேரத்தில் பிரச்சினை ஆகக் கூடும். கர்ப்பிணிப் பெண்ணுக்கு கால் வீக்கம் இடுப்பு வலி அதிகமாக இருக்கும் சிறுநீர் அடிக்கடி கழிக்கத் தோன்றும் கர்ப்பப்பை பெரிதாவதால் சிறுநீரகப்பையின் மீது அழுத்தத்தை கொடுக்கும் இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் அதிகமான நீரை உட்கொண்டு கொண்டே இருக்க வேண்டும் உடலில் நீர்சத்து குறையும் இருப்பு உதவும் தேவையான ஆரோக்கியமான குடி பானங்களை இளநீர் பழச்சாறு வகைகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஏழாவது மாதம் எட்டாவது மாதம் ஒன்பதாவது மாதம் இவை அனைத்தும் மிகவும் முக்கிய காலகட்டமாகும். உடல் அதிக சோர்வு கொண்டு இருந்தாலும் கர்ப்பிணிப்பெண் இரவில் மற்றும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது மிகவும் அவசியம் இது உடல் சோர்வை நீக்கி உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் வயிற்றின் மீது அதிக சூடான தண்ணீரை ஊற்றக்கூடாது. 7வது மாதத்தில் இருந்து மெதுவான நடை பயிற்சி கர்ப்பிணி பெண்ணுக்கான உடற்பயிற்சியை இவை செய்ய தொடங்க வேண்டும் இது உங்கள் மருத்துவரை அணுகி விட்டு பிறகு செய்ய வேண்டும். நடைப்பயிற்சி என்பது காலை மற்றும் மாலையில் ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் இவை உணவு உண்டபின் கூட எடுத்துக்கொள்ளலாம் இவை கர்ப்பிணி பெண்ணுக்கு வெறும் வயிற்றில் நடக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வபோது சிறிய அளவு குடிநீரையும் எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும் அருகில் ஒரு துணையுடன் மட்டுமே நடக்க வேண்டும் தனியாக நடக்கக் கூடாது. நடைப்பயிற்சி 7வது மாதத்தில் இருந்து தொடங்கும் பொழுது இடுப்பு எலும்பு பிரசவத்திற்கு தயாராகி வரும். வீட்டு வேலைகளை அவ்வப்போது செய்ய வேண்டும் எடுத்த உடன் கடினமான வேலைகளை செய்யக்கூடாது இது உங்களுக்கு கடினமான தசைப்பிடிப்புகளை ஏற்படுத்திவிடும். முடிந்த அளவுக்கு எந்த பொருளும் குனிந்து எடுக்காமல் இருக்க வேண்டும் . காலை அகட்டி விரித்து உட்கார்ந்து எழ வேண்டும் இது இடுப்பு எலும்பு விரிவடையத் ஒரு உடற்பயிற்சியாக அமையும். கால் மற்றும் இடுப்பு அதிகமாக வலியை ஏற்படுத்தும் . <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> குழந்தையின் வளர்ச்சி அதிக எடையை முதுகின் மீது அழுத்தும் போது முதுகு இடுப்பு அதிகமாக வலியை கொடுக்கும். இதனை சரிசெய்ய இரவு படுக்கும் முன்பும் காலையில் எழுந்தவுடனும் இடுப்பு மற்றும் கால்களில் கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் ஊற்றுவதன் மூலம் வலிக்கு இதமாக இருக்கும் இது பிரசவத்திற்கு எலும்புகளை தயார்படுத்தும். குழந்தை கண்களைத் திறந்து வெளிச்சம் இருக்கும் பக்கம் அதிகமாக பார்க்கக்கூடும் இச்சமயத்தில் 8:00 மணி அடிக்கும் சூரிய ஒளியில் உங்கள் வயிற்றை காண்பிப்பதன் மூலம் குழந்தைக்கு தேவையான சூரிய சக்தி கிடைக்கும் அதற்கு மேல் வெயிலில் வயிற்றை காட்டக்கூடாது குழந்தை வெளிச்சம் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கும். அதிக அசைவுகளை உங்களால் இப்போது உணர முடியும் குதித்தல் உதைத்தல் பல சேட்டைகளை குழந்தையை சமயத்தில் செய்யக்கூடும் நீங்கள் அதிகம் பேச்சு கொடுப்பதன் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருக்கும் பொழுது பிடித்த உணவுகளை சாப்பிடும் பொழுது குழந்தை அதிகமாக இருக்கக்கூடும் குழந்தையிடம் அடிக்கடி பேச்சுக் கொடுங்கள் நல்ல நல்ல கதைகளை சொல்லுங்கள். கர்ப்பப்பை தொப்புளின் மீது அழுத்தும் பொழுது தொப்புள் சமயத்தில் வெளியே வரக் கூடும் இது பிரசவத்திற்கு பின் வயிறு சுருங்கும் போது தொப்புள் பழைய நிலைக்கு திரும்பிவிடும் தொப்புளில் ஏதாவது வலி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். தொப்புளில் அரிப்பு இருந்தால் சொரியக் கூடாது சொறிந்தால் தழும்புகள் கருப்பாக கூடும் புண்ணாக்கி விடும் இதனால் மருத்துவரிடம் அணுகி விட்டு அதற்கான லோஷன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் ஆலிவ் ஆயில் எண்ணெய்களை பயன்படுத்துவதின் மூலம் வயிற்றை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் இது அரிப்பை மற்றும் வரித் தழும்புகள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்க கூடும். ஆறாவது மாதம் முடியும் காலகட்டம் அல்லது ஏழுமாதங்களில் உங்களது ரத்தம் பரிசோதிக்கப்படும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஏழாவது மாதத்தில் ஒரு சிலருக்கு மேல் வயிற்றில் வலி ஏற்படக்கூடும் அல்லது ஆறாவது மாதத்தில் இறுதியில் மேல் வயிற்றில் அதிக வலி ஏற்படக்கூடும் இது பொய் வலியாகும் .இது பிரசவ வலி இல்லை. இச்சமயத்தில் சீரகத் தண்ணீரை குடிப்பதன் மூலம் மேல் வயிற்று வலியை குறைக்க முடியும் .அதிகமான காரப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது மேலும் வயிற்று வலியை அதிகப்படுத்தும் மேல் வயிறு சுருங்கி அதிகமான வலியை ஏற்படுத்தும்.மருத்துவரிடம் செல்வதால் இதற்கான மருந்துகளை மருத்துவர் உங்களிடம் கொடுப்பது தவறாமல் சாப்பிடுவது மூலம் வலியை சரிசெய்ய முடியும். ஏழாவது மாதம் தில் ஒரு சிலருக்கு கை வலி வரக்கூடும் இவை இடுப்பிலிருந்து வயிற்றுக்கு வரக்கூடும் இவற்றின் வழியின் நேரம் ஒரே மாதிரியாக இருக்கும் பிரசவ வலியாக இருந்தால் மணியிலிருந்து நிமிஷத்திற்கு நொடிக்கும் வழி மாறுபாடு அடையும் இதுவே பிரசவ வலி ஆகும் பொய் வழி ஒரே நேரமாக 5 நிமிடத்திற்கு ஒருமுறையும் பிறகு 5 நிமிடத்திற்கு ஒரு முறை என நேரம் ஒரே மாதிரியாக இருக்க கூடும். ஒரு நாள் அல்லது ஒரு இரண்டு மணி நேரத்தில் அந்த பொய் வழி சரியாகிவிடும். வலி தீவிரமடைந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கர்ப்பப்பையின் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் பிறப்புறுப்பின் வழியே அதிக வெள்ளைப்படுதல் இருக்கும். இதனால் அதிக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது அதிகமாக பட்டால் உடனே மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும் <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 12-10-2021