Search for

Baby-care

Awesome Image
குழந்தையின் முதல் மாதம் முதல் 12 மாதம் வரை கொடுக்க வேண்டிய உணவுகளை காண்போம், தாய்மார்களுக்கு குழந்தைக்கு என்ன உணவு முதல் மாதத்தில் இருந்து 12 மாதம் வரை கொடுக்க வேண்டும் என்பது குழபத்திலேயே இருக்கும். பவுடர் பால், பாக்கெட் பால், பசும்பால் இவற்றை முதல் மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும் பால் சுத்தமாக வரவில்லை என்று தவிர்க்கும் தாய்மார்கள் மருத்துவரிடம் அணுகிப் பவுடர் பால் கொடுப்பது நலம். ஆறு மாதத்திற்கு பசும்பால் தவிர்ப்பது நம் குழந்தைக்கு நல்லது. பசும் பால் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். குழந்தையின் ஜீரண பாதையினால் அதனை செரிக்க வைக்க முடியாமல் உபாதைகள் ஏற்படும். மேலும் சளி பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது. முதல் மாதத்தில் தாய்மார்களுக்கு சீம்பால் அதிக அளவில் சுரக்கும் இதை குழந்தை சப்பிக் குடிப்பதைத் தவிர்க்கும் சப்பி குடிக்க வில்லை என்றாலும் தாய்மார்கள் ஒரு டம்ளரில் எடுத்து குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். சீம்பால் ஒரு மாதத்திற்கு மேல் தாய்மார்களுக்கு வராது சீம்பால் கண்டிப்பாக குழந்தைக்கு தவறாமல் கொடுக்கவேண்டும் இது குழந்தையின் மிக முக்கியமான உணவாகும். குழந்தையின் எதிர்ப்பு சக்திக்கு சீம்பால் முக்கியமாகும் . <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.தாய்ப்பாலில் அதிகமான சத்து மற்றும் நீர் தேவையான அளவு உள்ளது ஆறு மாதத்திற்கு தண்ணீர் குழந்தைக்கு கொடுக்க தேவையில்லை. 6 முதல் 8 மாதம் வரை கொடுக்க வேண்டியவை , ஆறு மாதம் தொடக்கத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் வேறு உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கலாம் அது காலை மற்றும் மதிய மட்டுமே கொடுக்க வேண்டும் மாலை நேரத்தில் இரவு நேரத்தில் கொடுப்பதை தவிர்த்து விடவும். ஆறு மாத தொடக்கத்தில் குழந்தைக்கு ராகி கூழ், அரிசிக்கஞ்சி, சத்துமாவு, வேகவைத்த கேரட் இவற்றை 6 முதல் 8 மாத காலம் வரை கொடுக்கவும். ராகி கூழ் அரிசி கஞ்சி சத்துமாவு இவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுக்கும்பொழுது தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும் அது குழந்தைக்கு சேரவில்லை என்றால் வயிற்றுப்போக்கு ஏதேனும் உடல் உபாதை ஏற்படும் இதனை தவிர்க்கவும் அல்லது மருத்துவரிடம் கூறி விட்டு கொடுக்கவும். மூன்று நாட்கள் கழித்து இந்த உணவுகளை கொடுப்பதனாள் குழந்தைக்கு ஏதும் பிரச்சினை ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து தாராளமாகக் கொடுக்கலாம். குழந்தைக்கு செரிமானம் வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும். இதைக் கொடுக்க வேண்டும் என்று அறிந்த பின்னரே உரிய காலத்திற்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். எட்டாவது மாதத்தில் வேகவைத்த கேரட், பீட்ரூட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ,உருளைக்கிழங்குஆகியவற்றை சூப்பாகவும் குடுக்கலாம் அல்லது வேகவைத்து மசித்து குழந்தைக்கு உணவாகக் கொடுக்கலாம். கேரட் பீட்ரூட் சக்கரவள்ளி கிழங்கு ஏதேனும் ஒன்றை எப்பொழுது சாப்பிட ஆரம்பிக்கும் போதும் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுக்க வேண்டும் சேரவில்லை என்றால் அதனைத் தவிர்ப்பது நல்லது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> ஆப்பிள் வாழைப்பழம் குழந்தைக்கு கொடுக்கலாம் ஆப்பிளை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து ஆப்பிளின் தோலை உரித்து விட்டு மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஆப்பிள் தோலானது ஜீரணம் ஆகாது. வாழைப்பழம் குழந்தை சாப்பிடவில்லை என்றால் மிக்ஸியில் நன்கு அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். ஒன்பதாவது மாதத்தில் முட்டையின் மஞ்சள் கரு ,பருப்பு சாப்பாடு, ரசம் சாப்பாடு, பால் சாப்பாடு போன்றவற்றை குழந்தைக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம் இவை அனைத்தும் நன்றாக வேக வைத்து மசித்து கொடுக்க வேண்டும் பெரியவர்கள் சாப்பிடும் அளவில் இருக்கக்கூடாது. இட்லி சாப்பிடத் தரலாம். குழந்தைக்கு பழச்சாறு கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆரஞ்சு மாதுளை ஆப்பிள் பழச்சாறு கொடுக்க ஆரம்பிக்கலாம். குளிர் ,மழை காலத்தில் பருவங்கள் மாறும் நிலையில் குழந்தைக்கு சளி காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் இந்த காலத்தில் பழச்சாறுகளை தவிர்ப்பது நல்லது. பத்தாவது மாதம் முதல் 12வது மாதம் வரை பத்தாவது மாதத்தில் இருந்து மீன் ஈரல் ஆட்டுக்கால் சூப் , ஆட்டுக் கறி சூப் இவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம். நெய் சாப்பாடு கொடுக்கலாம். ஒன்பது மாதம் முதல் 12 மாதம் வரை அனைத்தும் உணவுகளையும் காலை மதியம் மாலை போன்ற நேரங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும் இரவுநேரத்தில் திட உணவுகளை கொடுக்கக்கூடாது இது குழந்தையின் செரிமானத்தை பாதித்து வயிற்று வலி ஏற்படுத்தி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடும் இரவில் திட உணவுகளை தவிர்ப்பது நலம். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 28-09-2021