Home-made | | Tamil Best Beauty tips site | Laddu muttai இட்லி பொடி வீட்டிலேயே செய்வது எப்படி samayal-kurippu

இட்லி பொடி வீட்டிலேயே செய்வது எப்படி

samayal-kurippu

சுவையான இட்லி பொடி வீட்டிலேயே செய்வது எப்படி இதற்க்கு தேவையான பொருள் காய்ந்த மிளகாய்-10 கடலைப்பருப்பு-1 கப் உளுந்து பருப்பு-1கப் மிளகு-1 தேக்கரண்டி பெருங்காயம்-1/3 தேக்கரண்டி உப்பு -தேவையான அளவு கறிவேப்பிலை -ஒரு கொத்து தேவையான பொருட்கள் அனைத்தையும் மிதமான தீயில் வதக்கி எடுக்க போறோம். எல்லாம் பொருளையும் ஒண்ணா போடப் போறது கிடையாது தனித்தனியாக மிதமான தீயில் எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறத்தில் வறுத்து எடுக்க வேண்டும். முதலில் அடுப்பில் கடாயை வைத்து கடாய் நன்றாக சூடானதும் கடலைப்பருப்பு போட்டு எண்ணெய் ஊற்றாமல் பொன்நிறம் வரவரைக்கும் வதக்கிக்கணும். இதை அடிப்பிடிக்காமல் இருக்க வேண்டும.மிதமான தீயில் அடுப்பை வைக்கவேண்டும். கடலைப்பருப்பு பொன்னிறமானதும், ஒரு தட்டில் மாற்றி வைத்துவிட வேண்டும். இரண்டாவதாக உளுத்தம் பருப்பு எடுத்து கடாயில் போட்டு பொன்னிறமானதும், அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத் தூளும் சேர்த்து மூன்றையும் ஒன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும். எண்ணெய் ஊற்றாமல் வதக்கவும் , பொன்னிறமாக மாறியதும் ஒரு நல்ல மனம்வரும் அந்த நேரத்துல் அதனை ஒரு தட்டுல எடுத்து மாற்றிவைத்துக்கொள்ளவும். அடுத்ததாக கடாயில் காய்ந்த மிளகாய் காரத்துக்கு ஏற்றவாரு 10 மிளகாய் அல்லது அதற்கு மேலாக கூட நீங்க போட்டுக் கொள்ளலாம். அதனுடன் மிளகு ஒரு தேக்கரண்டி, கறிவேப்பிலை ஒரு கொத்து இவற்றை எல்லாம் சேர்த்து வதக்கி ஒரு தட்டில் எடுத்து வச்சுக்கணும். கடைசியா நாம வெள்ளை எள்ளு மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவும் ‌. எள்ளு தயாரானதும் அடுப்பை அனைத்து விடவும் . முக்கியமாக இந்தப் பொருள் எல்லாத்தையும் நன்றாக ஆறவிட வேண்டும். காய்ந்த மிளகாய் , கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, மிளகு , பெருங்காயம் , உப்பு ,கருவேப்பிலை எல்லாம் நல்லா ஆறின பிறகு, இவற்றை அரைக்கும் மிக்சி ஜார் கண்டிப்பாக ஈரமில்லாமல் இருக்கணும். ஈரம் இல்லாமல் இருந்தால் தான் இட்லிப்பொடி கெட்டுப்போகாமல் இருக்கும். மிக்ஸியில நல்லா ஈரம் இல்லாம தொடைச்சு வச்சுக்கோங்க அத்தனை பொருளையும் மிக்ஸியில் போட்டு நல்லா அரைச்சுகணும், சுவையான இட்லி போடி ரெடி . நல்லா காரம் நெடி மூக்குக்கு ஏறும் அதனால மாஸ்க் ஏதாச்சும் போட்டுக்கோங்க. நாம எண்ணெய் போடாம நல்லா வதக்கினனால நீங்க இதை மூணு மாசம் இல்லைனா நாலு மாசத்துக்கு கூட வச்சு சாப்பிடலாம் இது கெட்டுப் போகாமல் இருக்கும்.




Tag : vegetable |

சப்ஜா விதை திருநீற்று பச்சைக் கரந்தை என்ற மூலிகைச் செடியின் விதை ஆகும். இந்த சப்ஜா விதை பார்ப்பதற்கு கருசீரகம் மற்றும் எல் போன்று இருக்கும். இதனை நாம் சாப்பிடுவதால் உடலில் பல நன்மைகள் ஏற்படும் இது எப்படி பயன்படுத்துவது என்பதையும் அதன் பயன்களை பார்ப்போம். சப்ஜா விதையை பயன்படுத்தும் முறை: இதனை இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் இது ஊறிய பிறகு ஜவ்வரிசி போன்று காணப்படும். இரவில் ஊற வைக்க முடியாதவர்கள் பகலில் 6 மணி நேரம் அல்லது மிதமான தண்ணீரின் சூட்டில் 15 நிமிடம் ஊற வைக்கவும். சப்ஜா விதை ஊறிய பிறகு பாலில் கலந்து சிறிது நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம். ரோஸ் மில்க்ல் கலந்து சாப்பிடலாம். சப்ஜா விதையின் அதிகளவிலான பயன்களை இப்பொழுது பார்ப்போம்: சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டி-ஆக்ஸிடன்ட், விட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து இதில் அதிக அளவு உள்ளன. சக்கரை நோயாளிகள் இரவில் சப்ஜா விதையை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறைந்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். ரத்தசோகை உள்ளவர்கள் சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரித்து இரத்த சோகை குணமாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சப்ஜா விதையை பாலில் கலந்து அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள அழுக்கு கசடுகள் நச்சுக்கள் வெளியேறி மலச்சிக்கல் நாளடைவில் குணமாகி விடும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் சப்ஜா விதையை இரவில் ஊறவைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடைந்து கண் எரிச்சல் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியத்துடன் வாழலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறைந்து அழகான தோற்றத்துடன் காணப்படலாம் இதில் உள்ள நார்ச்சத்துகள் அதிக பசியைத் தூண்டுவதை தடுக்கும் பசி அதிகம் ஏற்படாது. சப்ஜா விதையை சாப்பிடுவதால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குறைந்து உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெள்ளைப்படுதலும் நாளடைவில் சரியாகிவிடும். ஜீரண பாதையில் உள்ள புண் எரிச்சல் இவற்றை சரிசெய்யும் சப்ஜா விதியை தொடர்ந்து சாப்பிடுவதனால். நெஞ்செரிச்சல் அசிடிட்டி அதிகம் உள்ளவர்கள் ஊறவைத்த சப்ஜா விதையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் அசிடிட்டி குணமாகிவிடும். சிறுநீர் தொற்று சிறுநீரில் புண் எரிச்சல் வலி ஆகியவற்றை சப்ஜா விதையை சாப்பிடுவதால் சிறுநீரில் ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது.
Laddu Muttai | 18-09-2021