Search for

vegetable

Awesome Image
சப்ஜா விதை திருநீற்று பச்சைக் கரந்தை என்ற மூலிகைச் செடியின் விதை ஆகும். இந்த சப்ஜா விதை பார்ப்பதற்கு கருசீரகம் மற்றும் எல் போன்று இருக்கும். இதனை நாம் சாப்பிடுவதால் உடலில் பல நன்மைகள் ஏற்படும் இது எப்படி பயன்படுத்துவது என்பதையும் அதன் பயன்களை பார்ப்போம். சப்ஜா விதையை பயன்படுத்தும் முறை: இதனை இரவில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் இது ஊறிய பிறகு ஜவ்வரிசி போன்று காணப்படும். இரவில் ஊற வைக்க முடியாதவர்கள் பகலில் 6 மணி நேரம் அல்லது மிதமான தண்ணீரின் சூட்டில் 15 நிமிடம் ஊற வைக்கவும். சப்ஜா விதை ஊறிய பிறகு பாலில் கலந்து சிறிது நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடலாம். ரோஸ் மில்க்ல் கலந்து சாப்பிடலாம். சப்ஜா விதையின் அதிகளவிலான பயன்களை இப்பொழுது பார்ப்போம்: சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டி-ஆக்ஸிடன்ட், விட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து இதில் அதிக அளவு உள்ளன. சக்கரை நோயாளிகள் இரவில் சப்ஜா விதையை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறைந்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். ரத்தசோகை உள்ளவர்கள் சப்ஜா விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரித்து இரத்த சோகை குணமாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சப்ஜா விதையை பாலில் கலந்து அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள அழுக்கு கசடுகள் நச்சுக்கள் வெளியேறி மலச்சிக்கல் நாளடைவில் குணமாகி விடும். <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script> உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் சப்ஜா விதையை இரவில் ஊறவைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடைந்து கண் எரிச்சல் கண்ணில் ஏற்படும் பிரச்சனைகள் உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியத்துடன் வாழலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் சப்ஜா விதையை சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறைந்து அழகான தோற்றத்துடன் காணப்படலாம் இதில் உள்ள நார்ச்சத்துகள் அதிக பசியைத் தூண்டுவதை தடுக்கும் பசி அதிகம் ஏற்படாது. சப்ஜா விதையை சாப்பிடுவதால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி குறைந்து உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெள்ளைப்படுதலும் நாளடைவில் சரியாகிவிடும். ஜீரண பாதையில் உள்ள புண் எரிச்சல் இவற்றை சரிசெய்யும் சப்ஜா விதியை தொடர்ந்து சாப்பிடுவதனால். நெஞ்செரிச்சல் அசிடிட்டி அதிகம் உள்ளவர்கள் ஊறவைத்த சப்ஜா விதையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் அசிடிட்டி குணமாகிவிடும். சிறுநீர் தொற்று சிறுநீரில் புண் எரிச்சல் வலி ஆகியவற்றை சப்ஜா விதையை சாப்பிடுவதால் சிறுநீரில் ஏற்படும் பாதிப்புகளை இது தடுக்கிறது. <script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3094546009921026" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3094546009921026" data-ad-slot="5867984712"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>
Laddu Muttai | 18-09-2021