என்னது..! விஜய் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் அட்லீ..! இவரா ஹீரோ ..!

இயக்குனர் அட்லீ ராஜா ராணி, தேறி,பிகில் படத்திற்கு பிறகு எந்த ஒரு புது படத்தையும் அறிவிக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் ஷாருக் கான் நடிக்க இருக்கும் ஒரு பாலிவுட் படமும் இயக்க போகிறார் என வதந்தி பரவி வந்தாலும் அந்த படம் பல வருடங்கள் ஆகியும் தொடங்கவில்லை என்பது உண்மை.

அட்லீ இன்ஸ்டாகிராமில் போட்டிருந்த ஒரு பதிவும் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை ஏளனப்படுத்தியவர்கள் வருங்காலத்தில் வருத்தப்படுவார்கள் என அவர் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.

இந்நிலையில் அட்லீ அடுத்து வருண் தவான் உடன் ஒரு ஹிந்தி படத்திற்காக கூட்டணி சேர உள்ளார்.. இந்த படம் விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக்காக தான் என தகவல் வெளியாகி இருக்கிறது.இவர்கள் இருவரும் சந்தித்து பேசி இருப்பதாகவும் புரளி பரவி வருகிறது.. இதை பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அதில்லே அவர்கள் தரப்பிலோ அல்லது வருண் தவான் பக்கத்திலோ சொல்லப்படவில்லை .

About the author

Royal

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *