இயக்குனர் ராஜமௌலி அதிக அளவில் படங்களை இயக்கி இருந்தாலும் இவருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று தந்த என்னவோ ஒரு சில படங்கள் தான் ..
அந்த வரிசையில் சமீபகாலத்தில் இயக்கி வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனா நடிகர் பிரபாஸ் நடித்த பாகுபலி 1 மற்றும் 2 பாகம் ஆனது மாக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பையும் வெற்றிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.. அதுமட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.
இயக்குநர் ராஜமெளலி ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் எனும் படத்தை இயக்கியுள்ளார். அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப்படம் வருகிற 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த இரண்டு வீரர்களை பற்றிய கதை எனக் கூறப்படுகிறது
இதனிடையே ஆந்திர மாநில அரசு அண்மையில் சினிமா டிக்கட் கட்டணத்தை வரையரை செய்து வெளிட்டது. அதன்படி, தனித் தியேட்டர்களில் அதிகபட்சம் 120 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல 100 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தயாராகும் திரைப்படங்களுக்கான கட்டணத்தை படம் வெளியான ஒரு வாரத்துக்கு தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் சலுகை அறிவிக்கப்பட்டது.