கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வில்லன் கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்து வெளிவந்த படம் மாறன் . இந்த படத்தின் கதையானது Investigative journalist மையத்தை கொண்டு திரைப்படமாக்கப்பட்டது .. இந்த படம் மீது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் மார்ச் 11ம் தேதி மாலை 5 மணிக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
படத்தி தொடக்கத்தில் ராம்க்கி ஒரு பத்திரிக்கையாளர் .. இவர் கடமை கண்ணியம் நேர்மை என்று தனது வெளியில் மிகுந்த உண்மையாக பணியாற்றுவார்.. எதிர் பாரத விதமாக சமுத்திரக்கனிக்கு எதிராக ஒரு ஆதாரம் திரட்டி வைத்துள்ளார் ..
இது தெரிந்த சமுத்திரக்கனி ஆட்களை வைத்து ராம்கியை கொலை செய்து விடுகிறார் மாறன் தனது தங்கையை தானே வளர்ப்பதாக கூறி வளர்த்து பெரிய ஆள் ஆக்குகிறார். மீடியாவில் அவர் அப்பாவை போலவே நேர்மையாக இருப்பதால் தொடர்ந்து வேளையில் இருந்து நீக்கப்படுகிறார். அதன் பின் மாளவிகா மோகனன் வேலை செய்யும் வெப்சைட்டில் வேலைக்கு சேருகிறார் ..
வேலையில் திறமையை காட்டும் மாறன் பல பெரிய விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார் அதன் பின் ஒருகட்டத்தில் தனுஷின் தங்கை எரித்து கொலை செய்யப்படுகிறார். அதை செய்தது யார் என்பதை தனுஷ் கண்டுபிடித்தாரா என்பது தான் படத்தின் மீதி கதை.
மொத்தத்தில் ‘மாறன்’ படத்தை பார்த்து முடிக்கும்போது ‘இது உண்மையிலேயே துருவங்கள் 16 எடுத்த கார்த்திக் நரேன் படம் தானா?’ என கேட்க தோன்றும்.