சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டான்.இத்திரைப்படத்தின் முதல் பாடலான அனிரூத் இசையில் ‘ஜலபுலஜிங்கு’ என்ற பாடல் மூன்று மாதங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ரீச் அடைந்தது.
இத்திரைப்படத்தினை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கர் சிவாகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல இயக்குனரான வெங்கட்பிரபு-வின் தம்பியான பிரேம்ஜி-யை நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
பிரேம்ஜி நடித்த மொத்த படங்களில் வில்லனாக நடிக்க இருக்கும் இந்த படம் தான் , இதுவே முதல் முறையாகும்.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.