தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலன் அறிமுகமான நயன்தாரா அன்று முதல் இன்று வரல் மக்களிடையே லேடி சூப்பர்ஸ்டார்ஆகா பிரபலமாக கோடி கட்டி பறக்கிறார்.. இவருடைய இந்த வளர்ச்சி தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பிடித்ததில்லை..
நடிகை நயன்தாரா அவருடைய கணவராக வரக்கூடிய விக்னேஷிவன் படத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் நடித்திருக்கிறார். மேலும் கனெக்ட், காட் பாதர், கோல்ட் ஆகிய படங்களில் தற்போது நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது நயன்தாரா அடுத்த படத்தில் 59 வயதாகும் பிரபல நடிகருடன் ஜோடியாக இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த 59 வயது நடிகர், வேறு யாருமில்லை, நம்ம ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் தான்.ஆம், நடிகர் அர்ஜூனுடன் இணைந்து ஜென்டில் மேன் 2 படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார் என்று தெரிவிக்கின்றனர்.
இது உண்மையான தகவலாக இருந்தால், தமிழ் சினிமாவில் இந்த ஜோடி இணைவது இதுவே முதல் முறையாகும்.